search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "up cm yogi adityanath"

    உத்தரப்பிரதேசம் மாநில மக்கள் குஜராத்தில் பாதுகாப்புடன் உள்ளனர் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #Gujaratviolence #YogiAdityanath
    லக்னோ:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.
     
    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வரும் இந்தி மொழி பேசுபவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 



    இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் தாக்கப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன 

    இந்நிலையில். உத்தரப்பிரதேசம் மாநில மக்கள் குஜராத்தில் பாதுகாப்புடன் உள்ளனர் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ரூபானியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தேன், உபி மக்கள் அங்கு தகுந்த பாதுகாப்புடன் உள்ளனர் என தெரிவித்தார். #Gujaratviolence #YogiAdityanath
    பிரதமர் மோடியை மாவீரன் சிவாஜியுடன் ஒப்பிட்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா சிவாஜி மகராஜ் எப்போதும் அரசியல் கலவரங்களில் ஈடுபட்டதில்லை என கூறினார். #Sivaji #Modi #Sivasena
    மும்பை:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். அப்போது அவர் சிவாஜி மகாராஜாவுடன் ஒப்பிட்டு பேசினார்.

    இதற்கிடையே, மகாரஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியினர் யோகி ஆதித்யநாத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.



    மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், சிவாஜி மகாராஜா எப்போது அரசியல் கலவரங்களில் எப்போதும் ஈடுபட்டதில்லை என தெரிவித்துள்ளார்.

    மேலும், ரபேல் விவகாரத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று மடங்கு விலையில்  போர் விமானங்களை வாங்கியுள்ளது வெளியானது. இதற்கு நிச்சயம் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். #Sivaji #Modi #Sivasena
    உத்தர பிரதேசத்தில் மாபியா கும்பல் தலைவன் சிறை வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #GangsterMunnaBajrangi #GangsterShotDead
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக முன்னா பஜ்ரங்கியை இன்று காலை பக்பத் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஜான்சி சிறைச்சாலையில் இருந்து சனிக்கிழமை பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.  

    அங்கிருந்து இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்த முன்னாவை மற்றொரு கைதி சுட்டுக்கொன்றான். இந்த சம்பவம் சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. முன்னா கொலை செய்யப்பட்டதையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. மோப்பநாயுடன் விசாரணைக்குழுவினர் சிறைச்சாலைக்கு விரைந்தனர்.

    பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளையும் அதன் தலைவர்களையும் முன்னா ஆதரித்ததால், அவரை போலீசார் என்கவுண்டரில் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருப்பதாக அவரது மனைவி ஏற்கனவே கூறியிருந்தார். இதனால் இந்த கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.



    இதுபற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, ‘சிறைச்சாலை வளாகத்தில் நடந்த கொலை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளேன். ஜெயிலரை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்று சிறைச்சாலை வளாகத்தில் நடக்கும் சம்பவம் மிகவும் சீரியசான விஷயம். இதுபற்றி ஆழமான விசாரணை நடத்தி, இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். #GangsterMunnaBajrangi #GangsterShotDead
    ×