என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுவிற்பனை"
- ஆந்திர மாநில புதிய மதுபான கொள்கை, அரியானா மாநிலத்தை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளது.
- தனியார் மது விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திராவில் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றதும் மதுபான கடைகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்தார். அதன்படி புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 736 சில்லறை மது விற்பனை கடைகள் உருவாக்கப்படுகிறது. இந்த கடைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகிறது.
இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மதுபானக கொள்கை திட்டத்தின்படி அரசுக்கு ரூ.5500 கோடி வருவாய் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆந்திர மாநில புதிய மதுபான கொள்கை, அரியானா மாநிலத்தை பின்பற்றி தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ந்தேதி முதல் புதிய மதுபான கொள்கை கொண்டுவரப்படும். அதில் ரூ.99 மற்றும் அதற்கும் குறைவான மதுபானங்கள் அறிமுகம் செய்யப்படும் 1-ந்தேதி முதல் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில் கடைகள் ஒதுக்குவது குறித்த நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் வருகிற 12-ந்தேதி மதுபான கடைகள் தனியார் மயமாக்கப்பட்டு ரூ.99-க்கு கிக்கான மதுபாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏக்கத்துடன் காத்திருந்த மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இன்னும் 10 நாட்கள் குறைந்த விலை மதுவுக்கு காத்திருக்க வேண்டுமா? என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தனியார் மது விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 14 மதுக்கடைகளிலும் அச்சிடப்பட்ட பில்கள் இன்று முதல் வழங்கப்பட்டன.
- ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனித்தனி பில்கள் போடப்படும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் அதில் உள்ள அதிகபட்ச சில்லரை விலைக்கு (எம்.ஆர்.பி.) மேலாக விற்கப்படுகிறது. குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.50 வரை கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
எல்லா கடையிலும் அதில் உள்ள விலைக்கு மதுபாட்டில்கள் விற்பது இல்லை. கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கவும், தவறுகள் நடக்காமல் வெளிப்படை யாக விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கியூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்து மின்னணு பண பரிவர்த்தனையின் வழியாக பணம் செலுத்தி மதுபானங்களுக்கான பில்லை பெறும் வசதியை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் கடந்த சில மாதங்களாக முயற்சி மேற்கொண்டது.
முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இத்திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் உள்ளிட்ட 7 கடைகளிலும், ராமநாதபுரத்தில் 7 கடைகளிலும் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த 14 மதுக்கடைகளிலும் அச்சிடப்பட்ட பில்கள் இன்று முதல் வழங்கப்பட்டன. மேலும் மதுபானங்களில் கண்காணிப்பை உருவாக்க கலால் லேபில்களில் கியூ-ஆர் குறியீடுகளையும் அட்டைப் பெட்டிகளில் ஒரு பரிமாண பார்கோடுகளையும் சேர்த்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மது பாட்டிலில் அச்சிடப் பட்ட கியூ-ஆர் குறியீடு, விற்பனையாளர்களால் கை யடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டவுடன் பில் அச்சிடப்பட்டு வெளிவரும். ஒவ்வொரு பாட்டிலுக்கும் தனித்தனி பில்கள் போடப்படும்.
2 மாவட்டங்களில் இந்த புதிய முறையை அறிமுகப் படுத்தியுள்ளோம். இதன் மூலம் பெறப்படும் கருத்துக் களை பொறுத்து தேவைப் பட்டால் கணினியை மறு வடிவமைப்போம். ஓரிரு மாதங்களில் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் கணினி மயமாக்கப்டும்.
தமிழகம் முழுவதும் 4,800 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கடைகளையும் கணினி மயமாக்குவதன் மூலம் அதிகாரிகள் கண்கா ணிக்கவும், இருப்புகளை சரிபார்க்கவும் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும்?
- ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா?
சென்னை:
தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறியதாவது:-
மது வாங்க வருவோர், ஒரு பாட்டில், இரு பாட்டில் என வாங்குவர். மதுக் கூடங்களுக்கு மது அருந்த வருவோர், நேரடியாக மதுக்கூடத்திற்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியரிடம் மது வாங்கி வரச்சொல்லி அனுப்புகின்றனர்.
அவர்களும் ஒரு மேஜைக்கு இரண்டு, மூன்று பாட்டில் வீதம், 4-5 மேஜைகளுக்கு சேர்த்து, ஒரே சமயத்தில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இது, மது அருந்த வந்தவர்களுக்கு வாங்கப்படுகிறதா? அல்லது பதுக்கி விற்க வாங்கப்படுகிறதா? என்பது, மதுக்கடை ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கும் போது, போலீசாரிடம் பிடிபட்டு விசாரணையில், 'எங்கிருந்து இவ்வளவு பாட்டில் வந்தது' என்று கேட்டால், ஊழியர்களை கைகாட்டி விடுகின்றனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை டாஸ்மாக் உருவாக்கி, விரைவில் வெளியிட வேண்டும். மதுக்கூடத்தில் பணிபுரிவோருக்கு, 'ஆதார்' உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா? எனவும், டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக் கடைகளில் நேற்று மாலை யில் கூட்டம் அலைமோதியது.
- பார்களில் மது விற்பனை களை கட்டியது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப் பட்டிருந்தது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று மாலையில் கூட்டம் அலைமோதியது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்களில் மது விற்பனை களை கட்டியது.
டாஸ்மாக் பார்களில் மட்டுமின்றி சாலையோரங் களில் அமர்ந்தும் குடிமகன் கள் மதுகுடித்து கும்மாள மிட்டனர். இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.200கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இன்று இரவு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கும் அரசியல் கட்சியினர் மதுபாட்டில் களை வாங்கி குவித்துள்ள னர். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் வெற்றிக் கொண்டாட்டத் துக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திட்ட மிட்டுள்ளனர். இதற்காக மதுபாட்டில்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.80 கோடியில் இருந்து 100 கோடி வரை மது விற்பனை நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறும். நேற்று சாதாரண நாள் என்பதால் ரூ.100 கோடி வரையில் மது விற்பனை நடைபெற்றி ருக்கும் என்றும் ஆனால் இந்த விற்பனை 2 மடங்காக உயர்ந்து ரூ.200 கோடி வரை விற்பனையாகி இருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இன்றைய விற்பனை நேற்று முடிந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.
- மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் 2 நாட்கள் நேற்று தேர்தல் பிரசாரம் தொடங்கினார். குப்பம் தொகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மகளிர் பிரிவு நிர்வாகிகளை சந்தித்தார்.
ஜெகன்மோகன் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. என்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தினர். இருப்பினும் நான் பயந்து ஓடவில்லை. எனக்கு பதவி முக்கியமில்லை. மாநில நலன் தான் முக்கியம்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். மாநிலத்தின் நலனை பாதுகாப்பதற்காக தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் ஜனசேனா செயல் திட்டம் தீட்டி வருகிறது.
மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினேன் வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டன உருது மொழியை 2-வது மொழியாக அறிவித்தேன்.
ஆந்திராவில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போதையில் இருப்பவர்கள் தாய் யார்? சகோதரி யார்? என தெரியாமல் நடந்து கொள்கின்றனர்.
அந்திரி நிவா திட்டத்தின் மூலம் குப்பம் பகுதியில் உள்ள கிளை கால்வாய்கள் தூர்வாரப்படும். ஒவ்வொரு ஏக்கர் விவசாய நிலத்திற்கும் பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டியது எனது பொறுப்பு.
என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.
பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதனால் ஆண்கள் நாற்காலிகளை தேட வேண்டும். எனது ஆட்சியில் பெண்களுக்கு சைக்கிள் வழங்கினேன். 30 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு வழங்கினேன்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.
ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்வதால் அதைக் குடித்துவிட்டு கணவன்கள் இறந்து விடுவதால் பெண்கள் தாலி கொடியை இழந்து வருகின்றனர்.
எனது ஆட்சியில் ரூ.75-க்கு விற்கப்பட்ட மதுபானங்கள் ஜெகன்மோகன் ஆட்சியில் 2 மடங்காக விலை உயர்த்தப்பட்டது. தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள், பீர்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
- ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.
- விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகள் மூலமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 5,300 கடைகள் மூலமாக விதவிதமான மது வகைகள் விற்பனை செய்ய 23 ஆயிரம் விற்பனையாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
பண்டிகை காலங்கள் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு 44 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு அதனை 46 ஆயிரம் கோடியாக ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டு மது விற்பனை சுறு சுறுப்பாக நடைபெற்று வருகிறது.
10 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை அளவுக்கு ஏற்ப மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.
இதனை தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுக்கடைகள் முன்பு விலை பட்டியல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் பெரும்பாலான கடைகளில் அதனை அமல்படுத்தாமல் உள்ளனர். விற்பனையாளர்கள் வழக்கம் போல 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரைபாட்டில் மதுபானத்தை கேட்டால் அதற்கு பதிலாக இரண்டு குவார்ட்டர் பாட்டி லை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். 2 குவார்ட்டர் மது பாட்டிலை கொடுத்தால் ஒரு பாட்டிலுக்கு பத்து வீதம் 20 ரூபாய் வசூலிக்கலாம். ஆனால் அரை பாட்டில் மதுபானத்தை கொடுத்தால் பாட்டிலுக்கு ரூ.10 மட்டுமே வசூலிக்க முடியும் என்றும் மது பிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகவே குவார்ட்டர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு மறைமுகமாக விற்பனையாளர்கள் வருவாயை ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி டாஸ்மாக் மதுக் கடைகளில் குவார்ட்டர் மது பாட்டில்கள் 70 சதவீதம் அளவுக்கு விற்பனையாகுவதாகவும் அரை பாட்டில் மதுபானங்கள் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக மது பிரியர்கள் சிலர் கூறும் போது:-
டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான நேரங்களில் அரை பாட்டில் மதுபானங்களை விற்பனையாளர்கள் தருவதில்லை. 2 குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் 20 ரூபாய் வசூலித்து விடுகிறார்கள்.
இதன் மூலம் விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்ட போது,
"மது பாட்டில்களை கூடு தல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதற்காகவே கடைகளின் முன்பு விலை பட்டியலை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதலாக விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
எனவே மது வாங்கும் குடிமகன்கள் விலை பட்டியலை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை மட்டுமே கொடுத்தால் போதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இது போன்ற உத்தரவுகள் டாஸ்மாக் கடைகளில் எப்போதுமே காற்றில் பறப்பதாகவே இருந்து வருகிறது.
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் அதிக அளவில் சப்ளை செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மது பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
- க.பரமத்தி அருகே மது பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
கரூர்,
க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் அருகேயுள்ள சாலப்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சின்னதாராபுரம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத் தினர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த காளியண்ணன் மகன் பெரிய சாமி (வயது 50) என்பவர் மது விற்பனைக்காக 4 பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் சின்ன " தாராபுரம் போலீசார் - பெரியசாமி மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கள்ளத்தனமாக சந்து கடைகளில் மதுவிற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.
- தின கூலி வேலை செய்து வருபவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் மதுபான பாட்டில்களின் விலையை விட கூடுதலாக விற்பனை செய்கின்றனர். குறிப்பாக பென்னாகரம் சுற்று வட்டாரத்தில் ஜக்கம்பட்டி பகுதியில் மட்டும் ஒரே ஒரு மதுபானம் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபானம் வாங்க வரும் குடிமகன்களிடம் குவாட்டருக்கு 5 ரூபாய், ஆப் குவாட்டருக்கு 10 ரூபாயும், ஃபுல் பாட்டிலுக்கு 20 ரூபாயும், பீர்ருக்கு 10 ரூபாய் என அதிகமாக வசூல் செய்கின்றனர்.
இதனால் தின கூலி வேலை செய்து வருபவர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகின்றனர். அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூல் செய்வதை கேள்வி கேட்டால் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றன. அப்படி வாக்குவாதம் ஏற்படும் போது தேவையற்ற வார்த்தைகளால் வஞ்சிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டி டாஸ்மார்க் கடை ஊழியர்கள் கள்ளத்தனமாக சந்து கடை நடத்துபவர்களுக்கு மொத்தமாக மது பாட்டில்களை மொத்தமாக பெட்டி பெட்டியாக கொடுக்கிறார்கள்.
டாஸ்மார்க் ஊழியர்களுக்கு ஒரு பாட்டில் மேல் 15 முதல் 20 ரூபாய் வரை கமிஷனாக கொடுத்து விட்டு டாஸ்மாக் கடைகளில் இருந்து கள்ளத்தனமாக மது பாட்டில்கள் எடுத்துச் செல்லும் சந்து கடை வியாபாரிகள் சந்து கடைகளில் அதிக லாபத்தை வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதில் 140 ரூபாய் கோட்டர் 200 ரூபாய் என்றும், 200 ரூபாய் குவாட்டர் 300 ரூபாய் என்றும், அதற்கு மேல் விலை அதிகமாக உள்ள மதுபானங்கள் ஒரு குவாட்டர் 400 முதல் 500, 600 ரூபாய் வரை அதிக லாபம் வைத்து சந்து கடைகளில் விற்கப்படுகிறது.
இதனால் கள்ளத்தனமாக சந்து கடைகளில் மதுவிற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருச்சி பொன்மலைப்பட்டியில் விற்பனை நடைபெறுவதை அறிந்து அங்கு குவிந்த மதுபிரியர்கள்
- போலீசாரை கண்டதும் மதுபாட்டில்களை விட்டு விட்டு ஓட்டம்
திருவெறும்பூர்,
மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். அன்று மதுபானக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் விற்றால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமயைாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படும் தினத்தில் திருச்சி பொன்மலைப்பட்டியில் செயல்பட்டு வரும் 2 மதுபானம் கடை அருகே அமரர் ஊர்தியில் மதுபாட்டில்களை வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை நடைபெற்றது. இதனை வாங்குவதற்கு மது பிரியர்கள் குவியத் தொடங்கினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். இதனை பார்த்த மது விற்பனை செய்தவர்கள் மது பாட்டில்களுடன் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து போலீசார் வாகனத்துடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.அமரர் ஊர்தியில் மது விற்றது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்