search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடி"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்

    நாகர்கோவில், நவ. 8-

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பிட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டுதல், 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவை இன்று நடைபெற்றன.

    இதேபோல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கேன்டீன் அமைக்கும் பணி யும் இன்று நடைபெற்றது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் ராம் குமார், மண்டல தலை வர் அகஸ்டினா கோகில வாணி, ஜவகர், செல்வ குமார், மாமன்ற உறுப்பி னர்கள் ராணி, அனந்த லெட்சுமி கலாராணி, பகுதி செயலாளர் சேக் மீரான், துரை, அணிகளின் நிர்வாகிகள் ராஜன், வட்டச் செயலாளர்கள் ராம கிருஷ்ணன், முத்து கிருஷ்ணன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம், பகுதியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடப்பதாக தி.நகர் துணை கமிஷனர் அங்கித் ஜெயினுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப் - இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையோரம் சொகுசு கார் ஒன்று நின்று நீண்ட நேரம் சந்தேகத்திற்கிடமாக கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டனர். இதில் காரில் இருந்த ஒரு பையில் ரூ.1 கோடி ரொக்கப் பணம் இருந்தது. மேலும் விசாரணையில் காரில் இருந்தவர்கள் இலங்கை தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1 கோடி ரொக்கப்பணம் எப்படி கிடைத்தது?அதனை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்து வருவாய் ஆய்வாளர் சவிதா முன்னிலையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடல் உள்பகுதியிலிருந்து 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது
    • 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் ஒன்றியம், பொழிக்கரையில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தூண்டில் வளைவுகள் அமைப்பதற்காக அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு 190 மீட்டருக்கு தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.

    கடல் உள்பகுதியிலிருந்து 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மீனவர்களின் நலன் காக்கின்ற வகையில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காக தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக வந்துள்ளேன். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மீனவர்களுக்கான திட்டங்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றப்பட்டது. இந்த தூண்டில் வளைவு இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக அமையும். இத்திட்டத்தை இப்பகுதி மக்களுக்கு தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மீனவ மக்களின் சார்பிலும், நன்றியினை தெரிவித்து க்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

    இதில் மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைவர் சேவியர் மனோகரன், பொழிக்கரை பங்குத்தந்தை ரெ ஞ்சித்குமார், கேசவ ன்புத்தன்துறை ஊராட்சி மன்ற தலைவர் கெபின்ஷா ஆரோக், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் ரூ 400 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
    • தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும் தேவையான யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தற்போது சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விவசாயத்திற்கு தேவையான உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை பறக்கை, அழகப்பபுரம் பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும் தேவையான யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பயிருக்கு குறிப்பிட்ட காலத்தில் உரம் இட்டால் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும். ஆனால் ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா தேவைப்படுகிறது.

    ஆனால் 15 ஏக்கருக்கு 100 கிலோ யூரியா உரத்தை தான் வழங்குகிறார்கள். மேலும் கூட்டுறவு சங்கங்களில் லோன் வாங்குபவர்களுக்கு அதிக அளவில்யூரியா வழங்கப்படுகிறது விவ சாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படவில்லை. கூட்டுறவு சங்கங்களில் யூரியா ரூ. 270க்கு விற்கப்படு கிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ரூ 400 க்கு விற்கப்பட்டு வருகிறது என்றனர்.

    கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்திரசேகர் கூறுகையில்

    குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் ரூ 400 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    அதில் ரூ 395 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ 440 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள விவாசாயிகள் அனைவரும் கடனுதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் நகைக்கடன் கறவை மாடுகள் உள்பட அனைத்து வகையான கடன்களுக்கும் ரூ.2200 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 300 டன் யூரியா உரம் இருப்பில் உள்ளது. வருகிற 20-ந் தேதி மேலும் 600 டன் யூரியா உரம் கொண்டுவரப்படவுள்ளது

    வடக்கு தாமரைகுளம் மயிலாடி குமாரபுரம் தோப்பூர் ஊட்டுவாழ்மடம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் இருப்பு உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார்.

    • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறை
    • கலெக்டர் அரவிந்த் ஆய்வு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியா குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக ரூ.10.5 கோடியில் நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய அலுவலக கட்டிடத்தின் அனைத்து தளங்களையும் நேரில் பார்வையிடப்பட்டது.

    வடசேரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தோடு இந்நிலையத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய அறையினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து வடசேரியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீக்கும் பணி யினையும், வடசேரி கிருணன்கோவில் பகுதி களில் உள்ள குடிநீர் சுத்திரிகரிப்பு நிலை யத்தினையும் நேரில் பார்வையிட்டதோடு, பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நாகர் கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற் கொண்டார். ஆய்வில் மாநகர நகர்நல அலுவலர் விஜயசந்திரன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×