search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crores"

    • பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.
    • மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.

    மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். என்னுடைய சகோதரிகளுக்கு நான் ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன்.

    உங்கள் சகோதரனாகிய நானும் எனது அமைச்சர்கள் குழுவும் இந்த காங்கிரஸ் அரசும் உங்களை கோடீஸ்வரராக மாற்றுவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம். மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரியாக மாற்றுவேன். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.

    தெலுங்கானா தங்க தெலுங்கானாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    தற்போது தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரி ஆக்குவேன் என உறுதி அளித்துள்ளார்.

    பெண் வாக்காளர்களை குறிவைத்து காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    • பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம், பகுதியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடப்பதாக தி.நகர் துணை கமிஷனர் அங்கித் ஜெயினுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப் - இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையோரம் சொகுசு கார் ஒன்று நின்று நீண்ட நேரம் சந்தேகத்திற்கிடமாக கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டனர். இதில் காரில் இருந்த ஒரு பையில் ரூ.1 கோடி ரொக்கப் பணம் இருந்தது. மேலும் விசாரணையில் காரில் இருந்தவர்கள் இலங்கை தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1 கோடி ரொக்கப்பணம் எப்படி கிடைத்தது?அதனை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்து வருவாய் ஆய்வாளர் சவிதா முன்னிலையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2017-18 நிதியாண்டில் இந்தியாவில் இயங்கும் மொத்த பொதுத்துறை வங்கிகளில் ரூ.87 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PSBloss
    புதுடெல்லி:

    இந்தியாவில் மொத்தம் 21 பொதுத்துறை வங்கிகள் இயங்கி வருகிறது. சமீபத்தில் பல தொழிலதிபர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி வருவதால் பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2017 - 18 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள மொத்த பொதுத்துறை வங்கிகளில் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதில் முதன்மை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடிக்கு அளிக்கப்பட்ட 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் ரூ.12,282.82 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து ஐ.டி.பி.ஐ வங்கியும் ரூ.88,237.93 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இரண்டாம் இடம் வகிக்கிறது.

    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும் இந்த ஆண்டு லாபம் ஏதுமின்றி சுமார் ரூ.6,547.45 கோடி ரூபாய் இழப்பு அடைந்துள்ளது.

    மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் இழப்பு ஏற்பட்ட வங்கிகள் பட்டியலில் இருந்து விலகி, இந்தியன் வங்கியும், விஜயா வங்கியுமே கணிசமான லாபம் ஈட்டியுள்ளன. 2017-18 நிதியாண்டில் இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அதேபோல் விஜயா வங்கியும் ரூ.727.02 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

    கடந்த 2016-17ம் நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சுமார் ரூ.473.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தந்தன. இந்நிலையில், ஒரே ஆண்டில் சுமார் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பினை இந்திய பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ளன. #PSBloss
    ×