search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "promise"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம்
  • சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் தனது பையிலிருந்த ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  ஆசிரியரின் இச்செயலை பொறுத்துக்கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் புகாரளித்த நிலையில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

  கடந்த புதன்கிழமை (பிப் 21) பள்ளிக்கு வந்த ஆசிரியர் நீட்டூ குமாரி, தனது பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வரச் சொல்லி ஒரு மாணவருக்கு சொல்லியுள்ளார். பின்னர் அவர் தனது பையிலிருந்த 35 ரூபாய் காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார்.

  பின்னர் ஒவ்வொரு மாணவர்களிடமும் அவர் பணம் காணாமல் போனதை பற்றி விசாரித்துள்ளார். அதில் மாணவர்கள் சொன்ன பதிலால் திருப்தியடையாத ஆசிரியர், மாணவர்களை பக்கத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று பணம் திருடவில்லை என்று சத்தியம் செய்ய வைத்துள்ளார். சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

  சீர்காழி:

  சீர்காழி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவபழனி தலைமை வகித்தார்.

  வட்டத்தலைவர் ராஜேஷ்குமார் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி சிறப்புறை யாற்றினார்.

  இதில் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்ற வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை சார்பாக கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசி க்கப்பட்டது. பின்னர் செய்தியா ளர்களிடம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கோத ண்டபாணி கூறுகையில்,

  சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும் என 40 ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள்.

  அதன்படி திமுக அரசு சத்துணவு ஊழியர்களின் முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்குவோ மே என வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு மாறாக சத்துணவுத் திட்டத்தை சிதைக்கும் வகையில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்கா மல் தனியாருக்கு தரக்கூடிய நிகழ்வை இந்த பேரவை எதிர்க்கிறது.

  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படு த்துவோம் என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் சாத்தியம் இல்லை என ஒற்றை வரியில் அவையை அரசு முடித்து விட்டது.

  காங்கிரஸ் அரசு உள்ள மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் போது வாய்ப்புள்ள தமிழகம் எந்தவித கவலையும் இல்லாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சித்து கொண்டுள்ளது என்பதும் கவனிக்க வேண்டியுள்ளது என இந்த பேரவை கூட்டம் மாநில மையத்தை வலியுறு த்த உள்ளது என்று கூறி னார்.

  • சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
  • தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

  இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

  குடும்பம், வேலை என இரட்டை குதிரையில் செய்யும் சவாரியால் தங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

  காலையில் எழுந்ததுமே பரபரப்பாக செயல்பட்டால்தான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலக பணிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

  கடிகாரத்தின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு செல்ல புறப்பட வேண்டிய நேரம் நெருங்க, நெருங்க ஒருவித படபடப்பு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிடும். வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே சவாலான வேலையாக அமைந்துவிடும்.

  பெற்றோரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும். எத்தனை முறை உரக்க கத்தினாலும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்பாக குரல் கொடுக்கும். 'கையைப் பிடித்துக் கொண்டு அம்மா இன்னைக்கு ஆபீசுக்கு போக வேணாம்மா என்று அழும்' குழந்தைகளும் இருக்கிறார்கள்.

  ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 'எப்படியாவது அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வாம்மா' என்று குழந்தைகள் கோரிக்கை விடுக்கும். கண்டிப்பா வாரேன் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு வேகமாக சமையலறை வேலையை கவனிக்க வேண்டும்.

  கணவர் குளித்துவிட்டு வருவதற்குள் டிபன் தயாராக இருக்க வேண்டும். அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருக்க வேண்டும். இருவரையும் அனுப்பிவிட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்து, கூந்தலை சீவுவதற்குகூட நேரமில்லாமல் விரலால் கோதிவிட்டு 'கிளிப்'போட்டு வேகவேகமாய் வேலைக்கு கிளம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

  வீட்டில் இருந்து ஓடோடி சென்று பஸ்சை பிடித்தாலும் கூட்ட நெரிசலால் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கும். அலுவலக நேரத்தில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு நாளும் இடம் கிடைப்பதில்லை என்று உள்ளுணர்வு விமர்சிக்கும். கூட்ட நெரிசலை சமாளித்து பஸ்சை விட்டு இறங்கி அலுவலகம் சென்றால் அங்கு வேலைகள் மலைக்க வைப்பதாக இருக்கும்.

  முதன் முதலில் வேலைக்கு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி, நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலை இளம் தாய்மார்களை ஆட்கொள்ளும். மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தைகளின் மன ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டியிருக்கும். 'உனக்காகத்தான் சம்பாதிக்கிறேன்? என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? இந்தப் பருவத்தில் அம்மாவின் அரவணைப்புதான் குழந்தைக்கு தேவை. வீட்டின் வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பது கூட பல அம்மாக்களுக்கு தெரியாது.

  காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும். குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதா? வீட்டுப்பாடம் படித்ததா? இரவு என்ன உணவு சமைக்க வேண்டும்? காலையில் பாதியில் போட்டுவிட்டு வந்த வேலைகளை முடிக்க வேண்டும். வீட்டிற்கு போவதற்குள் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

  வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்த பின்னர் மற்றதை ஒதுக்கி வைத்துவிட்டு மறு நாளைக்கு வேண்டிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தூங்குவதற்குள் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். கால்வலி, உடல் வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

  மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள பழகிக்கொண்டாலே நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். தங்களையும் தயார்படுத்திக்கொள்ளலாம்.

  சின்னச்சின்ன வேலைகளை குழந்தைகளையே செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்து வந்தால் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள்.

  அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி விட வேண்டும்.

  • ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
  • வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததை மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.

  தஞ்சாவூர்:

  மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்று பத்தாண்டு காலம் நடைபெற்று வருகின்ற நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும், ஆண்டு தோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

  விலைவாசி கட்டுப்படுத்தப்படும்.

  நாட்டில் சிறு தொழில்கள் அதிகரிக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கப்படும் என்ற பிரதானமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததை கண்டித்தும், பாரத் மாதா திட்டத்தில் துவாரகா விரைவுச் சாலை திட்டம் உள்பட 7 திட்டங்களில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதை கண்டித்தும்

  தமிழகம் முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

  அதன்படி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக வந்து திரண்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்தராபதி தலைமை தாங்கினார்.

  மூத்த தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரகுமார், வீரமோகன், சேவையா, விஜயலட்சுமி, செல்வகுமார், ராமச்சந்திரன், மாநகர செயலாளர் பிரபாகர், துணைச் செயலாளர் முத்துக்குமரன், பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முகில், விஜய், ஒன்றிய துணைச் செயலாளர் ராமலிங்கம், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் வாசு. இளையராஜா, பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பேராசிரியர் பாஸ்கர், கிருஷ்ணன், கோவிந்தராஜன், ஆசிரியர் சுந்தரமூர்த்தி, கல்யாணி , ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய பா.ஜ.க. அரசே ஆட்சியை விட்டு வெளியேறு என்று கோஷங்கள் எழுப்பியவாறே தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

  இதனை போலீசார் பேரிகார்டு கொண்டு தடுத்தனர்.

  இருந்தாலும் சிலர் பேரிக்கார்டு மீது மேலே ஏறி நின்று கோஷமிட்டனர். தொடர்ந்து தபால் நிலையம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

  இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மற்றும் நாளை மறுநாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

  • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
  • காரைக்குடியில் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

  காரைக்குடி

  பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடத்தி வரும் ஊழல் எதிர்ப்பு பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று மாலை காரைக்குடி அருகே கோவிலூருக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  டி.டி.நகரில் திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசியதாவது:-

  தமிழ் மொழியை, அதன் தொன்மையை, தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகளை உலகெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்கு பெருமை சேர்த்து வருபவர் பிரதமர் மோடி. காசியில் தமிழ் சங்கமம் நடத்தினார். செட்டிநாட்டு பகுதியி னருக்கு சொந்தமாக காசி யில் இருந்த இடத்தை அப்போைதய ஆளும் அரசு அபகரித்தது.

  அதனை தற்போதைய பா.ஜ.க. அரசு மீட்டுக்கொடுத்துள்ளது. தமிழக அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதாக கூறிவிட்டு விற்பனையை அதிகரிக்க பாக்கெட்டு களிலும் மது விற்க முடிவு செய்துள்ளனர்.

  தமிழக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட ரூ.7 லட்சத்து 56 ஆயிரம் கோடி கடனை அடைக்க இனிமேல் கடனே வாங்காமல் இருப்ப தோடு வாங்கிய கடனை வட்டியும், அசலுமாகமாக செலுத்தவே 27 ஆண்டுகள் ஆகும். டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வரும் வருமானத்தை விட, இரு மடங்கு மதுபான தொழிற் சாலை களை நடத்தி வரும் தி.மு.க.வினரும், தரகர்களும் பெறுகின்றனர்.

  தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதி களை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் உறுப்பி னர் தேர்ந்தெடு க்கப்பட்டு இத்தொகுதியின் மேம்பாட்டுக்காக குரல் கொடுப்பார்.

  இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் தலைவர் சோழன் சித பழனிசாமி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாநில விவசாயிகள் பிரிவு தலைவர் நாகராஜன், மாநில விவசாயிகள் பிரிவு துணை தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாண்டித்துரை.

  மாவட்ட துணை தலைவர் நாராய ணன், மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு குழு உறுப்பினர் காசிராஜா, இதர பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட பொதுச்செய லாளர் ராஜா சேதுபதி, மாநில செயற்குழு உறுப்பி னர் சிதம்பரம்.

  மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் துரை பாண்டியன், மாவட்ட தலைவர் பூப்பாண்டி, காரைக்குடி நகர வடக்கு தலைவர் பாண்டியன், தெற்கு தலைவர் மலைக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
  • ஜி.கே. வாசன் குற்றச்சாட்டினார்.

  ராமநாதபுரம்

  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:-

  பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவர்களது உறவினர்கள் சொத்து விபரம் குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளார். இதை ஆளும் கட்சியினர் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

  பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தானா? என்பதை அறிய மக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து அண்ணாமலை தெளிவாக கூறிவிட்டார். ஆனால் தி.மு.க.வினர் திரும்பத்திரும்ப பொய்யை கூறி உண்மை ஆக்க முயற்சிக்கின்றனர்.

  பட்டாசு ஆலைகள் வெடி விபத்து தொடர்பாக பாதுகாப்பு குறித்து அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். முதல்- அமைச்சர் மற்றும் அவரது அரசு வாக்கு றுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை. வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  தேர்தல் வாக்குறுதியில் மதுபான கடைகள் 500 கடைகளை அடைப்போம் என்று கூறினர். ஆனால் இன்று வரை அது நடைபெற வில்லை.குறைந்தபட்சம் 25 சதவீத மதுபான கடைகளை வழிபாட்டு தலங்கள், பள்ளி-கல்லூரிகள் அருகில் உள்ள மது கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின் மது போதை யால் இளைஞர்கள் வழி மாறி செல்கின்றனர். பிரதமர் மோடி ஹாட்ரிக் முறையில் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மாவட்ட நிர்வாகிகள் நாகேசுவரன், முன்னாள் எம்.பி.உடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு, சிவகங்கை மாவட்ட தலைவர் பாலசுப்பிர மணியன், அயோத்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

  ×