search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Criticism"

    • 1980ல் தனது முதல் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால்
    • எனது படங்கள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்றார் மோகன்லால்

    மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி.

    ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள் மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.

    1980ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் மோகன்லால்.


    ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்ட "த்ரிஷ்யம்", தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளி குவித்தது.


    2021ல் இதே போல் இவர்கள் இணைந்து உருவாக்கிய "த்ரிஷ்யம் 2" திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள "நெரு" திரைப்படம் 21 அன்று ரிலீஸ் ஆகிறது.

    "எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. விமர்சனங்களால் எனது நீண்ட 46-ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளி விட முடியாது" என விமர்சனங்களை குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் தோன்றுவதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    • சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.
    • தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களும் வேலைக்கு சென்றால்தான் செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடி பல குடும்பங்களில் நிலவுகிறது. அதனால் பெண்களும் வேலைக்கு செல்வதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

    குடும்பம், வேலை என இரட்டை குதிரையில் செய்யும் சவாரியால் தங்களின் தனித்துவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சின்னச் சின்ன மகிழ்ச்சியை கூட பொறுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

    காலையில் எழுந்ததுமே பரபரப்பாக செயல்பட்டால்தான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலக பணிக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். தேநீர் பருகுவது, காலை உணவை சாப்பிடுவது எல்லாமே அவசர கதியில் முடிந்து விடுகிறது.

    கடிகாரத்தின் சுழற்சிக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்கு செல்ல புறப்பட வேண்டிய நேரம் நெருங்க, நெருங்க ஒருவித படபடப்பு உடலையும், உள்ளத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கிவிடும். வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தயார்படுத்த வேண்டியிருக்கும். நிறைய குழந்தைகளை படுக்கையை விட்டு எழுப்புவதே சவாலான வேலையாக அமைந்துவிடும்.

    பெற்றோரின் அவசரம் புரியாமல் குழந்தைகள் அடம்பிடிக்கும். எத்தனை முறை உரக்க கத்தினாலும் கூட படுக்கையில் இருந்து எழுவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்பாக குரல் கொடுக்கும். 'கையைப் பிடித்துக் கொண்டு அம்மா இன்னைக்கு ஆபீசுக்கு போக வேணாம்மா என்று அழும்' குழந்தைகளும் இருக்கிறார்கள்.

    ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடக்கும்போதெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 'எப்படியாவது அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வாம்மா' என்று குழந்தைகள் கோரிக்கை விடுக்கும். கண்டிப்பா வாரேன் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு வேகமாக சமையலறை வேலையை கவனிக்க வேண்டும்.

    கணவர் குளித்துவிட்டு வருவதற்குள் டிபன் தயாராக இருக்க வேண்டும். அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் குழந்தை பள்ளிக்கூடம் செல்ல தயாராக இருக்க வேண்டும். இருவரையும் அனுப்பிவிட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்து, கூந்தலை சீவுவதற்குகூட நேரமில்லாமல் விரலால் கோதிவிட்டு 'கிளிப்'போட்டு வேகவேகமாய் வேலைக்கு கிளம்பும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    வீட்டில் இருந்து ஓடோடி சென்று பஸ்சை பிடித்தாலும் கூட்ட நெரிசலால் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கும். அலுவலக நேரத்தில் உட்கார்ந்து செல்வதற்கு ஒரு நாளும் இடம் கிடைப்பதில்லை என்று உள்ளுணர்வு விமர்சிக்கும். கூட்ட நெரிசலை சமாளித்து பஸ்சை விட்டு இறங்கி அலுவலகம் சென்றால் அங்கு வேலைகள் மலைக்க வைப்பதாக இருக்கும்.

    முதன் முதலில் வேலைக்கு செல்லும்போது இருந்த மகிழ்ச்சி, நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். குழந்தைகளை பிரிந்திருக்கும் கவலை இளம் தாய்மார்களை ஆட்கொள்ளும். மனதில் பாறாங்கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தைகளின் மன ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து செயல்பட வேண்டியிருக்கும். 'உனக்காகத்தான் சம்பாதிக்கிறேன்? என்று சொன்னால் அவர்களுக்கு புரியுமா? இந்தப் பருவத்தில் அம்மாவின் அரவணைப்புதான் குழந்தைக்கு தேவை. வீட்டின் வளர்ப்பு பிராணிகளுக்கு கிடைக்கக்கூடிய அன்பு கூட தங்களுக்கு கிடைப்பதில்லை என்ற மனநிலையில் குழந்தைகள் இருப்பது கூட பல அம்மாக்களுக்கு தெரியாது.

    காலையில் எழுந்தால் அலுவலகத்தில் போய் செய்ய வேண்டிய வேலைகள் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கும். மாலையில் வீடு திரும்பும் போது மனம் முழுவதும் வீட்டு வேலை மீது இருக்கும். குழந்தை ஒழுங்காக பள்ளிக்கு சென்று வீடு திரும்பியதா? வீட்டுப்பாடம் படித்ததா? இரவு என்ன உணவு சமைக்க வேண்டும்? காலையில் பாதியில் போட்டுவிட்டு வந்த வேலைகளை முடிக்க வேண்டும். வீட்டிற்கு போவதற்குள் காய்கறி வாங்கிச் செல்ல வேண்டும். இப்படி பல சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

    வீட்டிற்கு வந்தவுடன் எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படும். முடிந்தவரை முக்கியமான வேலைகளை செய்த பின்னர் மற்றதை ஒதுக்கி வைத்துவிட்டு மறு நாளைக்கு வேண்டிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தூங்குவதற்குள் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். கால்வலி, உடல் வலியைக் கூட உணர முடியாமல் தூங்கிப் போய்விடுவார்கள்.

    மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இப்படிப்பட்ட மன நிலையில் இருப்பவர்கள் குழந்தைகளை பக்குவமாக கையாள பழகிக்கொண்டாலே நிதானமாக எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். தங்களையும் தயார்படுத்திக்கொள்ளலாம்.

    சின்னச்சின்ன வேலைகளை குழந்தைகளையே செய்வதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்து வந்தால் தாயார் மீது நம்பிக்கை கொண்டு அடம் பிடிக்காமல் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்வதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள்.

    அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் வேலையை முடித்தால் பரிசு பொருள் வாங்கித்தருவதாகவோ, அவர்கள் விரும்பியதை செய்து கொடுப்பதாகவோ வாக்குறுதி கொடுத்து அவர்களாகவே பள்ளிக்கு தயாராகிவிடும் சூழலை உருவாக்க வேண்டும். மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றி விட வேண்டும்.

    காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து தானும் பேசுவேன் என்று சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    1967-லேயே தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 1991-ல் காங்கிரசுடன் கெஞ்சி கூத்தாடி ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ராஜீவ் காந்தி உயிர்தியாகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சர் ஆனார்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வுக்கு, ஜெயலலிதாவுடன் சேர்த்து சமாதி கட்டி விட்டார்கள். தற்போது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி, நிழல் ஆட்சிதான் நடைபெறுகிறது. பா.ஜனதாவை சந்தோ‌ஷப்படுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமாரும், அ.தி.மு.க.வினரும் காங்கிரசை விமர்சிக்கிறார்கள்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியில்தான் அதிக ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருக்கிறார். எனவே, இனி பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காது என்று கருதுகிறேன்.

    தமிழ்நாட்டுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அதிக நிதி கொடுத்து இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். இது வெறும் ஏட்டளவில் உள்ள புள்ளி விவரம் தான். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் எந்த பெரிய தொழிற்சாலைகளும் வரவில்லை. நாட்டில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.


    தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெறவில்லை.

    அனைத்து கட்சி தலைவர்கள், சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். இப்போது நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து நான் பேசுவேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    முகநூலில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை அவதூறாக விமர்சித்த கம்பம் தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் தி.மு.க. நகர துணைச் செயலாளராக இருப்பவர் கராத்தே ராமகிருஷ்ணன். இவர் கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தூத்துக்குடி உள்பட பல்வேறு சம்பவங்களில் சரியாக செயல்படவில்லை என்று தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.

    மேலும் அவர்களைப் பற்றி தரக்குறைவாகவும், விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    இது குறித்து கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தெரிவிக்கையில், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முகநூலில் தனது கருத்தை பதிவு செய்ததற்காக தி.மு.க. நிர்வாகியை கைது செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது. எனவே இது குறித்து செயல் தலைவரிடம் எடுத்து கூறி தேனி மாவட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார். #Tamilnews

    ×