search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeethu Joseph"

    • உலகம் முழுவதும் 400 திரையரங்குகளில் "நெரு" வெளியானது
    • திரைப்படம் வெளியாகி 25 நாட்களிலேயே இந்த சாதனையை புரிந்துள்ளது

    கடந்த 2023 டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலக முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.

    இந்தியாவில் 500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 400 அரங்குகளிலும் வெளியானது.

    2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெற்றிகரமாக ஓடிய "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

    2021ல் இதே கூட்டணியின் "திரிஷ்யம்-2" வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது.

    வெளியாகி 25 நாட்களை நெருங்கும் நிலையில், திரைப்பட வெற்றிக்கு முக்கிய மைல்கல்லாக கருதப்படும் ரூ.100 கோடியை உலக வசூலில் தொட்டு விட்டதாக திரைப்பட குழு அறிவித்துள்ளது.

    வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள மோகன்லால் திரைப்பட குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    ஐஎம்டிபி (IMDb) திரைப்பட மதிப்பீட்டு புள்ளிகளில் இத்திரைப்படம் 10க்கு 7.8 என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பார்வை இழந்த பெண்ணின் மீது தாக்குதல் நடத்தி, சட்டத்தை வளைத்து, தண்டனையில் இருந்து தப்பித்த ஒரு பணக்கார இளைஞனுக்கு, மீண்டும் சட்டத்தின் மூலமே தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் சிறப்பாக நடித்திருப்பது உலகெங்கும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

    • மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் "திரிஷ்யம்" பெரும் வெற்றி பெற்றது
    • விஜயமோகன் எனும் வக்கீல் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்

    கடந்த டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.

    2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்ட "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் பெரும் வெற்றி பெற்றதும், 2021ல் இதே கூட்டணியில் "திரிஷ்யம் 2" வெளியாகி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    சுமார் 2 வருடங்கள் கடந்து ஜீத்து ஜோசப்-மோகன்லால் இணைந்துள்ளதால், நெரு திரைப்படத்திற்கு மோகன்லால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கும் ஆவலில் உலகெங்கும் திரைப்பட ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை போல் நெரு திரைப்படமும் நேர்மறை விமர்சனங்களுடன் வசூலை குவித்து வருகிறது.

    இதுவரை உலகெங்கும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


    கதை சுருக்கம்:

    சாரா (அனஸ்வரா ராஜன்) எனும் இளம் பெண், பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளி. அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறார். சிற்பக்கலை நிபுணரான சாரா, குற்றவாளியின் வடிவத்தை களி மண்ணில் செய்து தர, அதை வைத்து காவல்துறை, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. ஆனால், குற்றவாளி ஜாமீனில் வெளி வந்து விடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக விஜயமோகன் (மோகன்லால்) எனும் வக்கீல் ஆஜராகி வழக்கை சிறப்பாக வாதாடி நீதியை நிலைநாட்டுகிறார்.

    விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • 1980ல் தனது முதல் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால்
    • எனது படங்கள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்றார் மோகன்லால்

    மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி.

    ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள் மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.

    1980ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் மோகன்லால்.


    ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்ட "த்ரிஷ்யம்", தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளி குவித்தது.


    2021ல் இதே போல் இவர்கள் இணைந்து உருவாக்கிய "த்ரிஷ்யம் 2" திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள "நெரு" திரைப்படம் 21 அன்று ரிலீஸ் ஆகிறது.

    "எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. விமர்சனங்களால் எனது நீண்ட 46-ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளி விட முடியாது" என விமர்சனங்களை குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் தோன்றுவதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகை நிகிலா விமலும் இணைந்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார். சத்யராஜ், சீதா, அம்மு அபிராமி அன்சன் பால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது நடிகை நிகிலா விமலும் படக்குழுவில் இணைந்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கார்த்தி, இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன், நிகிலா விமல் இருக்கும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “ஊட்டியில் எங்கள் குழுவுடன் நிகிலா இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 

    2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வரும் நிலையில், நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
    கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு சகோதரியாக ஜோதிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதாவும் நடிக்கிறார்கள். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார்.

    இந்த நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா - சத்யராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடிகை சீதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் தங்க மகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சீதா அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

    இதுகுறித்து சீதாவிடம் கேட்டபோது, அவரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் கோவாவில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகை சீதா ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

    இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார். கார்த்தி, ஜோதிகா இந்த படத்தில் அக்கா, தம்பியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 

    திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா - சத்யராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோவாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. #Karthi #Jyothika #Sathyaraj
    வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கும் இந்த படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாபாத்திரத்தில் நடிக்க, அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார்.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் துவங்கியது. அங்கு 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

    திகில், அதிரடி, குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல் முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சத்யராஜ் இந்த படத்தில் சேர்ந்து இருப்பது மிகப்பெரிய பலம். அனைவரின் ஆசிர்வாதத்துடன் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.


    நடிகர் சூர்யாவும் “இது ஒரு சிறப்பான தருணம். உன்னையும் ஜோதிகாவையும் திரையில் ஒன்றாக பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்து உள்ளார்.

    கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Karthi #Jyothika #Sathyaraj

    பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா - கார்த்தி அக்கா, தம்பியாக நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்தில் அவர்களுக்கு அப்பாக சத்யராஜ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Karthi #Jyothika
    பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். 

    மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் கார்த்தி - ஜோதிகாவின் அப்பாவாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Karthi #Jyothika #JeethuJoseph

    பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நடிக்கும் நிலையில், அந்த படத்தில் அவரது சகோதரியாக ஜோதிகா நடிக்கவிருக்கிறார். #Karthi #Jyothika
    ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காற்றின் மொழி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடிக்கிறார்.

    அத்துடன் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் திரில்லர் படம் ஒன்றில் ஜோதிகா இணைந்துள்ளார். கார்த்தி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.



    இதில் இருவருக்கும் என்ன கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது சகோதரன், சகோதரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Karthi #Jyothika #JeethuJoseph

    சமீப காலமாக படங்கள் இல்லாமல் இருந்த நடிகை வேதிகா, அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் இம்ரான் ஹஸ்மி ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். #Vedhika
    கமலை வைத்து பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், அடுத்து ஒரு இந்தி படம் இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு கதாநாயகியாக வேதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    வேதிகா சிலகாலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். சமீபத்தில் தன்னுடைய கவர்ச்சி படங்கள் சிலவற்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிந்து பரபரப்பாக்கினார். அதன் பிறகு வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்தி முன்னணி நடிகர்களான இம்ரான் ஹஸ்மி மற்றும் ரிஷி கபூர் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் ஒரு ஆங்கில திரில்லர் படத்தின் தழுவல். 



    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பை ஒரே கட்டமாக 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஜீத்து ஜோசப். அடுத்து காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். 

    முன்பெல்லாம் தமிழில் இருந்துதான் இந்திக்கு இயக்குனர்கள் செல்வார்கள். ஆனால் மலையாளத்தில் வரும் படங்களின் தாக்கம் நாடு முழுக்கவே எதிரொலிப்பதால் மலையாள இயக்குனர்களும் இந்தியில் கால் பதிக்கிறார்கள். ப்ரியதர்‌ஷன், சித்திக்கை தொடர்ந்து ஜீத்து ஜோசப்பும் அந்த வரிசையில் இணைகிறார். #Vedhika

    ×