என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Aparna balamurali"

    இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் புதிய மிஸ்டரி த்ரில்லர் Mirage

    இயக்குநர் ஜீத்து ஜோசப்  இயக்கத்தில் உருவாகும் புதிய மிஸ்டரி த்ரில்லர் Mirage, செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    மிராஜ் படத்தில் ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி, ஹக்கிம் ஷாஜகான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் கதையை ஜீத்து மற்றும் ஸ்ரீனிவாஸ் எழுதியுள்ளனர். இப்படம் அபர்ணா ஆர் தரகாட் எழுதிய கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

    தொழிநுட்ப படக்குழு

    ஒளிப்பதிவு: சதீஷ் குருப்

    எடிட்டிங்: விநாயக் வி.எஸ்.

    இசை: விஷ்ணு ஷ்யாம்

    படத்தை E4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முகேஷ் ஆர். மேத்தா, ஜதின் எம். சேதி, மற்றும் சி.வி. சரதி இணைந்து தயாரித்துள்ளனர். டிரெய்லர் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    • தனுஷின் ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
    • ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

    தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது.

    இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக நடிக்கிறார். அபர்ணா பாலமுரளியின் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    ×