என் மலர்

  நீங்கள் தேடியது "Ammu Abirami"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அறிமுக இயக்குனர் பி.சதீஸ் குமரன் இயக்கத்தில் அம்மு அபிராமி புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
  • இப்படத்திற்கு “பெண்டுலம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

  அறிமுக இயக்குனர் பி.சதீஸ் குமரன் இயக்கத்தில் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் படம் "பெண்டுலம்". சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை சூர்யா இந்திரஜித் ஃபிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிக்கிறார்.

  இப்படத்தில் ஸ்ரீபதி, ஸ்ரீகுமார், டி.எஸ்.கே., விஜித், எப்ஐஆர் ராம், ஸ்ரீராம், ஜூனியர் எம்ஜிஆர், பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய பி.சதீஸ் குமரன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் "ஐ" படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

   

  பெண்டுலம்

  பெண்டுலம்

  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரதன் இயக்கத்தில் வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மு அபிராமி.
  • இவர், நடித்த ‘ராட்சசன்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

  இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த 'ராட்சசன்', 'அசுரன்' போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார். அதன்பின் என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி முனை உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 6 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

   

  அம்மு அபிராமி

  அம்மு அபிராமி

  இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அம்மு அபிராமியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அம்மு அபிராமி கூறும்போது, "எனது திருமணம் குறித்து நிறைய கேள்விகள் வந்துள்ளன. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. திருமணம் செய்து கொள்வதை விட எனது வாழ்க்கையில் நிறைவேற்ற பல கனவுகள் உள்ளன. திருமணத்துக்கு இது சரியான நேரம் என்று நினைக்கும்போது திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்டரி' படத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார்.
  • இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் பேசியது வைரலாகிறது.

  இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த 'ராட்சசன்', 'அசுரன்' போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யானை' படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் பெற்றார்.

  அம்மு அபிராமி

  அம்மு அபிராமி

  இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்டரி' படத்தில் தற்போது அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக செங்குட்டுவன் நடித்துள்ளார். இவர்களுடன் தீபக் செட்டி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜபீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரித்துள்ளது.

  அம்மு அபிராமி

  அம்மு அபிராமி

  பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார். விழாவில் பேசிய வெற்றிமாறன், இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு படம் பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது பிவிஆர் இதனை வெளியிடுகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன். இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள்.


  வெற்றிமாறன்

  வெற்றிமாறன்

  டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்கள் முதன் முதலாக தமிழில் படமாக்கப்படுகின்றன.
  • இந்த படத்தை உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார்.


  அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் பாலமுருகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "குதூகலம்". இப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் கவிதாபாரதி, புகழ், பியான், சஞ்சீவி, அனிஸ், மன்மோகித், பிரேமி, தயாரிப்பாளர் எம்.சுகின்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

  திருப்பூர் பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாக்கப்படும் இப்படத்தை ரெட் & கேட் பிக்சர்ஸ் சார்பில் எம்.சுகின்பாபு முதல் படைப்பாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன்.


  பாலமுருகன்

  இவர், சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கிசட்டை', 'எதிர்நீச்சல்' படங்களில் துணை இயக்குனராகவும் தனுஷ் நடித்த 'கொடி', 'பட்டாசு' போன்ற படங்களில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

  "குதூகலம்" படத்திற்கு பியான் சர்ராவ் இசையமைத்துள்ளார். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருப்பூரில் படமாக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகை நிகிலா விமலும் இணைந்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
  கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார். சத்யராஜ், சீதா, அம்மு அபிராமி அன்சன் பால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது நடிகை நிகிலா விமலும் படக்குழுவில் இணைந்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  கார்த்தி, இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன், நிகிலா விமல் இருக்கும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “ஊட்டியில் எங்கள் குழுவுடன் நிகிலா இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 

  2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வரும் நிலையில், நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
  கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு சகோதரியாக ஜோதிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதாவும் நடிக்கிறார்கள். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார்.

  இந்த நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

  வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  ×