படப்பிடிப்பை தொடங்கிய அம்மு அபிராமி

அறிமுக இயக்குனர் பி.சதீஸ் குமரன் இயக்கத்தில் அம்மு அபிராமி புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்திற்கு “பெண்டுலம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
அம்மு அபிராமி
அம்மு அபிராமி
Published on

அறிமுக இயக்குனர் பி.சதீஸ் குமரன் இயக்கத்தில் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் படம் "பெண்டுலம்". சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை சூர்யா இந்திரஜித் ஃபிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஸ்ரீபதி, ஸ்ரீகுமார், டி.எஸ்.கே., விஜித், எப்ஐஆர் ராம், ஸ்ரீராம், ஜூனியர் எம்ஜிஆர், பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய பி.சதீஸ் குமரன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் "ஐ" படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

பெண்டுலம்
பெண்டுலம்

பெண்டுலம்

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com