மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 அப்டேட்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது த்ரிஷ்யம் திரைப்படம். 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது.
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 அப்டேட்
Published on

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது த்ரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகம் முழுதும் உள்ள மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. திரைப்படம் பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, சீன ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. இப்படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு த்ரிஷ்யம் 3 திரைப்படம் விரைவில் எடுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்பை படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக படக்குழு வீடியோ வெளியிடு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com