என் மலர்

  நீங்கள் தேடியது "Seetha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் - ஆஷிமா நர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலைகாரன்' படத்தின் முன்னோட்டம்.
  தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொலைகாரன்'.

  விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஆஷிமா நர்வால் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். அர்ஜூன், நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - முகேஷ், படத்தொகுப்பு - ரிச்சர்டு கெவின், இசை - சிமோன் கே.கிங், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - கல்யாண், வெளியீடு - தனஞ்ஜெயன், தயாரிப்பு - பிரதீப், எழுத்து, இயக்கம் - ஆண்ட்ரூ லூயிஸ்.  படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ‘எனக்கு ஒரு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு. நான் நடிக்கும் போது எதிரில் இருப்பவர் நன்றாக நடித்தால் எனக்கு நடிக்க வராது. அவரை நான் ரசிக்க ஆரம்பித்துவிடுவேன். இளையராஜா இசையை ரசித்து தான் நான் இசையமைப்பாளர் ஆனேன். அதுபோல் தான் நல்ல நடிகர்களை பார்த்து, ரசித்து, இப்போது நடிகராகிவிட்டேன். ஆனால் நன்றாக நடிக்கிறேனா என எனக்கு தெரியவில்லை". இவ்வாறு அவர் கூறினார்.

  கொலைகாரன் படம் ரம்ஜான் வெளியீடாக வருகிற ஜூன் 5-ந் தேதி திரைக்கு வருகிறது.

  `கொலைகாரன்' படத்தின் டிரைலர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகை நிகிலா விமலும் இணைந்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
  கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார். சத்யராஜ், சீதா, அம்மு அபிராமி அன்சன் பால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது நடிகை நிகிலா விமலும் படக்குழுவில் இணைந்திருப்பதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  கார்த்தி, இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன், நிகிலா விமல் இருக்கும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “ஊட்டியில் எங்கள் குழுவுடன் நிகிலா இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 

  2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வரும் நிலையில், நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
  கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு சகோதரியாக ஜோதிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதாவும் நடிக்கிறார்கள். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார்.

  இந்த நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

  வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா - சத்யராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடிகை சீதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் தங்க மகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சீதா அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

  இதுகுறித்து சீதாவிடம் கேட்டபோது, அவரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் கோவாவில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகை சீதா ஏற்கனவே படப்பிடிப்பில் இணைந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

  இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார். கார்த்தி, ஜோதிகா இந்த படத்தில் அக்கா, தம்பியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 

  திகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பார்த்திபன் - சீதாவின் மூத்த மகளான அபிநயாவுக்கும், எம்.ஆர்.ராதாவின் மகள் வழி கொள்ளு பேரனான நரேஷ் கார்த்திக்குக்கும் வருகிற மார்ச்சில் திருமணம் நடைபெற இருக்கிறது. #Parthiban #Seetha #Abhinaya #NareshKarthik
  நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் அபிநயா, கீர்த்தனா என 2 மகள்களும் ராக்கி என்ற மகனும் உள்ளார்கள். பார்த்திபனும், சீதாவும் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கின்றனர்.

  பார்த்திபன் - சீதா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இதுபற்றி சீதா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

  கடந்த ஆண்டு என் இரண்டாவது மகள் கீர்த்தனாவின் திருமணம் நடந்தது. பிறகு என் மூத்த மகள் அபிநயாவுக்கு தீவிரமாக வரன் தேடினோம். மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக் சென்னையில் தொழிலதிபராக இருக்கிறார். அவர் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். அதாவது நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன். மாப்பிள்ளை வீட்டார் எங்களுக்கு தூரத்து சொந்தம்.  கடந்த ஜனவரி மாதம் சோழா ஓட்டலில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. அதில் 2 குடும்பங்களை சேர்ந்த முக்கிய விருந்தினர்களை மட்டும்தான் அழைத்து இருந்தோம். அடுத்த மாதம் மார்ச் 24-ந் தேதி, சென்னையில் கல்யாணம் நடக்க இருக்கிறது. மகள் என்னை விட்டு தூரமாக போய்விடக் கூடாது என்றுதான் வெளிநாட்டு வரன்களை தவிர்த்தேன்.

  இப்போது சென்னையிலேயே வரன் அமைந்ததில் எனக்கும் மகளுக்கும் ரொம்ப சந்தோ‌ஷம். சினிமா வட்டாரத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்’.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Parthiban #Seetha #Abhinaya #NareshKarthik

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்ட்ரூ இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் `கொலைகாரன்' படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kolaikaran #VijayAntony
  `காளி' படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ மற்றும் ‘கொலைகாரன்’ படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கொலைகாரன்’ படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார். படத்தில் விஜய் ஆண்டனியுடன், நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம், ரசிகர்களை கவர்ந்து விட்ட அர்ஜுன், இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

  தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.  தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

  முகேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun

  ×