ராமாயணம் படப்பிடிப்பில் இருந்து கசிந்த போட்டோஸ்

சாய் பல்லவியும் ரன்பீர் கப்பூரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.ரன்பீர் கப்பூர் அயோத்யாவின் ராஜகுமாரனைப் போல் ஆடையணிந்து மிடுக்குடன் காணப்படுகிறார்.
ராமாயணம் படப்பிடிப்பில் இருந்து கசிந்த போட்டோஸ்
Published on

நிதேஷ் திவாரி அடுத்ததாக ராமாயணா திரைப்படத்தை மிக பிரமாண்டமான பொருட் செலவில் இயக்கி வருகிறார். இதற்கு முன் அவர் இயக்கிய சிச்சோரே, தங்கல் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

முன்னதாக சாய் பல்லவி சீதா கதாப்பாத்திரத்திலும், ரன்பீர் கப்பூர் ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதைத் தொடர்ந்து இப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சாய் பல்லவி மற்றும் ரன்பீர் கப்பூரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில் ரன்பீர் கப்பூர் அயோத்யாவின் ராஜகுமாரனைப் போல் ஆடையணிந்து மிடுக்குடன் காணப்படுகிறார். சாய் பல்லவி இராஜகுமாரியை போல் உடையணிந்து இருக்கிறார். சாய் பல்லவியும் ரன்பீர் கப்பூரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

இதற்கு முன் ரன்பீர் கப்பூர் நடித்து வெளியான அனிமல் படத்தின் கதாப்பாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். அவரது லுக்கை பார்த்த ரசிகர்கள் இவரைப் பார்த்தால் சீதாம்மா போல இல்லை என்றும் சூர்ப்பனகை போல உள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com