என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jyothika"

    சூர்யா ஜோதிகா தயாரிப்பில், தியா சூர்யா டாக்கு டிராமா இயக்கியிருக்கிறார்.

    2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் "லீடிங் லைட்" .

    சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

    திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

    உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது.

    செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம் திரையிடப்படுகிறது.

    அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

    • எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
    • 2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.

    எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி; கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உட்பட ஆறு பாடல்களும் ஹிட் ஆகின.

    2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.

    இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

    அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்

    அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்'. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

     

    இப்படத்தை விகாஸ் இயக்கினார். பட வெளியீட்டின் போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது "அண்மையில் நான் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தேன். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு ஒற்றுமையை பார்க்கிறேன். படப்பிடிப்பில் இருவரும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து போனார்கள். தமிழில் நான் கிட்டதட்ட எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தில் போஸ்டரில் கூட என் முகம் வராது. ஆனால் அஜய் , மம்மூட்டி போன்ற நடிகர்கள் சினிமாவிற்கு திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள். நிறைய பேர் சினிமாவில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ஆனா ஒரு சிலர் தான் திருப்பி தர நினைக்கிறார்கள் " என ஜோதிகா பேசியுள்ளார்.

    இந்த செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் நெட்டிசன்கள் ஜோதிகா கூறுவது தவறு, தமிழ் சினிமாவில் என்றும் பட நாயகிகளை போஸ்டர்களில் போடுவார்கள்,  என தமிழில் ஜோதிகா நடித்த திரைப்படங்ளின் போஸ்டரி பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.பி. கமல் ஹாசன் பங்கேற்றார்.

    நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.

    இந்நிலையில் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா முடிந்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா - ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    • சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • சுற்றுலா தொடர்பான வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீஷெல்ஸ் நாட்டிற்கு சூர்யா, ஜோதிகா சுற்றுலா சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • சிமரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
    • சில மாதங்களுக்கு முன் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் மனம் உடைந்து சில வார்த்தைகளை பேசி இருந்தார்

    சிமரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு முன் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதில் சிறிது நேரம் வந்தாலும் பார்வையாளர்களின் மனதில் இடம் பெறும் வண்ணம் நடித்திருந்தார்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் மனம் உடைந்து சில வார்த்தைகளை பேசி இருந்தார் அதில் " பெயர் குறிப்பிடாத நடிகை ஒருவர் நான் நடிக்கும் கதாப்பாத்திரங்களை கிண்டல் செய்கிறார். ஆனால் அவர்கள் செய்யும் டப்பா ரோல்களும், ஆண்டி ரோல்கள் எவ்வளவோ பரவாயில்லை" என கூறியிருந்தார்.

    இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலானது. டப்பா கார்டெல் இணைய தொடரில் ஜோதிகா நடித்து இருந்ததால். அந்த பெயர் சொல்லாத நடிகை ஜோதிகா அல்லது லைலா ஆகதான் இருக்கும் என நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இதைப்பற்றி அவர் மீண்டும் பேசியுள்ளார் அதில் " மக்கள் அவர்களுக்கு தோன்றும் வகையில் யூகங்கள் செய்கின்றனர். டப்பா கார்டல் ஒரு நல்ல வெப் தொடர். நான் யாரை குறிப்பிட்டேனோ அவர்கள் எனக்கு மெசெஜ் செய்து நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. உங்களை காயப்படுத்தியதற்கு மன்னிக்கவும் என கூறியுள்ளதாக" கூறினார்.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா.
    • ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்த மாதிரி என்னால் நடிக்க முடியாது என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.

    பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்து 2005-ல் வெளியான 'சந்திரமுகி' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் பிரபு, வடிவேலு, நாசர் ஆகியோரும் நடித்து இருந்தனர். 'சந்திரமுகி' படத்தில் ஜோதிகாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. குறிப்பாக 'ரா ரா' என்ற பாடலில் சந்திரமுகியாக மாறி ஜோதிகா ஆடும் நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

     

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்

    தற்போது 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் ஜோதிகாவுக்கு பதில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக வருகிறார். 'சந்திரமுகி-2' படத்தில் ஜோதிகாவுக்கு இணையாக கங்கனா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்நிலையில் 2019-ல் ஜோதிகா பேசிய வீடியோ ஒன்றை கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஜோதிகாவிடம் பாலிவுட்டில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க, அதற்கு அவர் கங்கனா ரணாவத் என்று பதில் அளித்து இருப்பார்.

     

    கங்கனா ரணாவத்

    கங்கனா ரணாவத்


    இந்த வீடியோவை மேற்கோள் காட்டி கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், "ஜோதிகா இப்படி சொல்லி இருப்பது எனக்கு ஊக்கமளிக்கிறது. 'சந்தரமுகி' படத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய சிறந்த நடிப்பை இப்போது தினமும் நான் பார்த்து வருகிறேன். காரணம் 'சந்திரமுகி-2' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தற்போது படமாக்கி வருகிறோம். 'சந்திரமுகி' முதல் பாகத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய நடிப்பு வியப்பை தருகிறது. அவர் நடிப்புக்கு இணையாக நடிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம்'' என்று கங்கனா பதிவிட்டுள்ளார்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா.
    • தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

    2016-ம் ஆண்டு வெளியான லென்ஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். அதன்பின்னர் தி மஸ்கிட்டோ பிலாசபி என்ற படத்தை இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான தலைக்கூத்தல் படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதில் சமுத்திரகனி, கதிர், வசுந்தரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

     

    ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தற்போது காதல் என்பது பொதுவுடமை என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் ஜெய் பீம் படத்தில் நடித்து பிரபலமடைந்த லிஜோமோல் நடிக்கிறார். மேலும் ரோகிணி, வினித், அனுஷா மற்றும் தீபா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

     

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஜோதிகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது. காதலையும் அன்பையும் மட்டுமே மதித்து காதலர் தினத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டு காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
    • 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

    தமிழில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' படம் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    தற்போது குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சைத்தான்' படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே, இந்தி சினிமாவில் ஜோதிகா நடித்திருந்தார். அந்த வகையில் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கிறார். 'சைத்தான்' படத்தில் நடிகர் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜோதிகா-மாதவன் நடிப்பில் வெளியான 'டும்... டும்... டும்...', 'பிரியமான தோழி' ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.

    அந்தவகையில் மாதவனும், ஜோதிகாவும் இந்தி படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

    • ”உடற்தகுதி என்பது நீங்கள் இழக்கும் எடையைப் பற்றியது அல்ல, ஆனால் நீங்கள் பெறும் வாழ்க்கையைப் பற்றியது”
    • அவர் செய்யும் வெயிட் லிஃப்டிங், புஷ் அப்ஸ், லவுன்ஞ் ஜம்ப்ஸ், சுவற்றில் தலை கீழாக செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கதாநாயகிகள் பட்டியலில் ஜோதிகாவுக்கு தனி இடம் உண்டு. நயன்தாராவுக்கு அடுத்து பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் ஜோதிகா. 1999-ல் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர் ஜோதிகா. விஜய் உடன் நடித்த குஷி படத்திற்கு சிறந்த கதாநாயகிக்கான விருது அவருக்கு கிடைத்தது. பல தமிழ் படங்களில் நடித்த ஜோதிகா அவ்வப்போது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்து வந்தார். கடந்த 25 ஆண்டு கால தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஜோதிகாவும் ஒருவர். அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது அவர் மிகவும் கொலுக்-மொலுக் என்று பப்லியாக இருந்தார்.

    அவரின் அடுத்தடுத்த படங்களில் உடல் இடையை குறைத்து நடித்து வந்தார். சமீபத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து 'காதல் தி கோர்' எனும் மலையாள படத்தில் ஜோதிகா நடித்தார். இத்திரைப்படம் அவர்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. நீண்ட நாட்கள் கழித்து ஜோதிகாவுக்கு ஒரு நல்ல படம் என்று கூட சொல்லலாம். வரும் மார்ச் 8 ஆம் தேதி அஜய் தேவ்கன், மாதவன், மனோஜ் ஆனந்த், ரிச்சா ப்ரகாஷ் மற்றும் பலர் நடித்து வெளிவர உள்ள சைத்தான் படத்திலும் ஜோதிகா நடித்துள்ளார். இந்நிலையில், ஜோதிகா இன்ஸ்டாகிராமில் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், ஜெய் பீம் திரைபடத்திற்காக வாங்கிய தேசிய விருதுகளின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

    சில நாட்களுக்கு முன்பு ஜோதிகா உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டார். வெளியிட்ட சிறிது நேரத்தில் அது வைரலானது. 44 வயதிலும் எப்படி ஒருவரால் இப்படி உடற்பயிற்சி செய்ய முடியும் என்று மக்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவர் செய்யும் வெயிட் லிஃப்டிங், புஷ் அப்ஸ், லவுன்ஞ் ஜம்ப்ஸ், சுவற்றில் தலை கீழாக செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    "உடற்தகுதி என்பது நீங்கள் இழக்கும் எடையைப் பற்றியது அல்ல, ஆனால் நீங்கள் பெறும் வாழ்க்கையைப் பற்றியது" என்றும் அந்த வீடியோவில் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

    • நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது
    • கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.

    நேற்று சென்னை ராஜ ரத்தினம் கலையரங்கத்தில் 2015 தமிழக திரைப்பட விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.

    இதில் ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த கதையாசிரியருக்கான விருது மோகன் ராஜா தனி ஒருவன் படத்திற்காக பெற்றார். இறுதிச்சுற்று படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை சுதா கொங்கரா பெற்றார்.

    சிறந்த நடிகருக்கான விருதை கவுதம் கார்த்திக் 'வை ராஜா வை' படத்திற்கு பெற்றார்.

    தனி ஒருவன் படம் அதிக விருதை அள்ளியது. அரவிந்த சாமி சிறந்த வில்லனுக்கான விருதும்.ராம்ஜி சிறந்த ஒளிபதிவாளர் விருதும்,கோபி க்ருஷ்ணா சிறந்த எடிடர்கான விருதும், பிருந்தா மாஸ்டர் சிறந்த நடன இயக்குநர்கான விருதும் பெற்றனர்.

    மாதவன் இறுதிச்சுற்றுக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.ஜோதிகா 36 வயதினிலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை சிங்கம் புலி வென்றார். சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை தேவதர்ஷினி வென்றார்.கிப்ரான் உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர்கான விருதை வென்றார்.

    ஜோதிகா விருதை வாங்கி தான் மிகவும் சந்தோஷமாக உணர்வதாக செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்தார்.கவுதம் கார்த்திக் அவருடைய எக்ஸ் பக்கத்தில் விருது அளித்து கவுரவித்த தமிழ்நாடு மாநில அரசுக்கும், தனது ரசிகர்களுக்கும், தனது குடும்பத்துக்கும், இயக்குனர் ஐஷ்வர்யா ரஜினிகாத்துக்கும். தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனதுக்கு அவரின் நன்றியை தெரிவித்துள்ளார்.

    நேற்று விருது வழங்கப்பட்ட பட்டியல்.

    சிறந்த படம் முதல் பரிசு - தனி ஒருவன்

    சிறந்த படம் இரண்டாம் பரிசு - பசங்க 2

    சிறந்த படம் மூன்றாம் பரிசு - ப்ரபா

    சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு - இறுதிச்சுற்று

    பெண்கள் முன்னேற்றதிற்கான சிறந்த படம் - 36 வயதினிலே

    சிறந்த நடிகர் - மாதவன் [இறுதிச்சுற்று]

    சிறந்த நடிகை - ஜோதிகா[36 வயதினிலே]

    சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு - கவுதம் ராஜா [ வை ராஜா வை]

    சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு - ரித்திக்கா சிங் [இறுதிச்சுற்று]

    சிறந்த வில்லன் - அரவிந்த் சாமி [தனி ஒருவன்]

    சிறந்த நகைச்சுவை நடிகர் - சிங்கம்புலி [ அஞ்சுக்கு ஒன்னு]

    சிறந்த நகைச்சுவை நடிகை - தேவ தர்ஷினி [ திருட்டு கல்யாணம், 36 வயதினிலே]

    சிறந்த குணச்சித்திர நடிகர் - தலைவாசல் விஜய் [அபூர்வ மகான்]

    சிறந்த குணச்சித்திர நடிகை - கவுதமி [ பாபநாசம்]

    சிறந்த இயக்குநர் - சுதா கொங்கரா {இறுதிச்சுற்று]

    சிறந்த கதையாசிரியர் - மோகன் ராஜா [ தனி ஒருவன்]

    சிறந்த வசன எழுத்தாளர் - சரவணன் [கத்துக்குட்டி]

    சிறந்த இசையமைபாளர் - ஜிப்ரான் [ உத்தம வில்லன், பாபநாசம்]

    சிறந்த பாடலாசிரியர் - விவேக் [36 வயதினிலே]

    சிறந்த பின்னணி பாடகர் [ஆண்] - கானா பாலா {வை ராஜா வை}

    சிறந்த பின்னணி பாடகர் [ பெண்] - கல்பனா ராகவேந்தர் [36 வயதினிலே]

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி [தனி ஒருவன்]

    சிறந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி (தனி ஒருவன்)

    சிறந்த ஒலி வடிவமைப்பாளர் - ஏ.எல்.துக்காராம், ஜே.மகேஸ்வரன் (தாக்க தாக்க)

    சிறந்த எடிட்டர் - கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

    சிறந்த கலை இயக்குனர் - பிரபாஹரன் (பசங்க 2)

    சிறந்த ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர் - டி ரமேஷ் (உத்தம வில்லன்)

    சிறந்த நடன இயக்குனர் - பிருந்தா (தனி ஒருவன்)

    சிறந்த ஒப்பனை - சபரி கிரிஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று)

    சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - வாசுகி பாஸ்கர் (மாயா)

    சிறந்த குழந்தை கலைஞர் - மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி (பசங்க 2)

    சிறந்த டப்பிங் கலைஞர் (ஆண்) - கௌதம் குமார் (36 வயதினிலே)

    சிறந்த டப்பிங் கலைஞர் (பெண்) - ஆர் உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

    • இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோ பிரதிபலிக்கும்.
    • இந்நிலையில் கார்த்தி சுப்பராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.

    பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்.

    இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார்.

    மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம்.ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா போட்டி போட்டு நடித்துருப்பர்

    சினிமாவையே கதைக்களமாக வைத்து திரைப்படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் வல்லமை வாய்ந்தவர். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதீகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப்படம் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் கதைக்களமாக உருவாகவுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×