Jyothika | இளமை திரும்புதே... ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை ஜோதிகா - புகைப்படங்கள் வைரல்

இன்ஸ்டாகிராமில் ஜோதிகா பகிர்ந்துள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
jyothika
jyothika
Published on

சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்து ஜோதிகா 36 வயதினிலே பணம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அவர் நடித்து வருகிறார்.

அண்மை காலமாக ஜிம்மிற்கு சென்று ஜோதிகா கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்தார். உடற்பயிற்சியின் விளைவால் உடல் எடை குறைந்து இளமை லுக்கில் ஜோதிகா மாறியுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஜோதிகா பகிர்ந்துள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com