search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Mohanlal"

    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டுக்கு திரைப்பட படப்பிடிப்பிற்காக நடிகர் மோகன்லால் வந்திருந்தார்.
    • அதிக வேலை இருந்ததால் மூதாட்டியை மோகன்லால் சந்திக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சுன்னாம் புத்தாரா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மாதவியம்மா. 108 வயது மூதாட்டியான இவர் அங்குள்ள முதியவர் இல்லத்தில் தங்கியிருந்தார்.

    மூதாட்டி மாதவியம்மா நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகை ஆவார். மோகன்லால் நடித்த திரைப்படம் டி.வி.யில் ஒளிபரப்பினால் ஒரு நிமிடம் கூட விடாமல் ரசித்து பார்ப்பாராம். அந்த அளவுக்கு மோகன்லால் ரசிகையாக இருந்து இருக்கிறார்.

    மேலும் நடிகர் மோகன்லாலை நேரில் சந்திக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது. அதனை கடந்த 2017-ம் ஆண்டு மூதாட்டி தங்கியிருந்த முதியோர் இல்லத்தில் நடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷாபி பரம்பி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தார்.

    அதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதன் மூலம் மூதாட்டி மாதவியம்மா வெளி உலகத்திற்கு தெரிய வந்தார். மேலும் அனைத்து சமூக வலைதளங்களிலும் இடம் பிடித்தார். இதனால் அவரை நடிகர் மோகன்லால் நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டுக்கு திரைப்பட படப்பிடிப்பிற்காக நடிகர் மோகன்லால் வந்திருந்தார். அப்போது அவர் மூதாட்டி மாதவியம்மாவை நேரில் சந்திப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் அதிக வேலை இருந்ததால் மூதாட்டியை மோகன்லால் சந்திக்கவில்லை. உடல் உபாதை காரணமாக படப்பிடிப்பு தளத்திற்கு மூதாட்டியை அழைத்து செல்ல முடியவில்லை. இந்த நிலையில் மூதாட்டி மாதவியம்மா வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார்.

    நடிகர் மோகன்லாலை சந்திக்கும் அவரது கனவு கடைசி வரை நனவாகாமல் சென்று விட்டது. டி.வி.யில் மோகன்லால் படம் ஓடினால் ஒரு நிமிடம் கூட மாற்ற மாட்டார் என்றும், யாரொனும் சேனலை மாற்றினால் அவருக்கு கோபம் வருமென மூதாட்டி தங்கியிருந்த முதியோர் இல்லத்தை சேர்ந்த ரசியா பானு தெரிவித்தார்.

    • நடிகர் மோகன்லால் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.
    • பெரும்பாவூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி தேவாரத்தில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4 யானை தந்தங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நடிகர் மோகன்லால் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    மேலும் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு வனத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மட்டுமின்றி, மேலும் 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் மோகன்லால் மீதான வழக்கை வனத்துறை ரத்து செய்தது.

    மேலும் யானை தந்தங்களை வைத்துக் கொள்ள மோகன்லாலுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியது. ஆனால் எர்ணாகுளத்தை சேர்ந்த பவுலோஸ் என்பவர், நடிகர் மோன்லாலுக்கு யானை தந்தங்கள் உரிமை சான்று வழங்கிய முதன்மை தலைமை பாதுகாவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    கிருஷ்ணகுமார் என்பவரிடம் யானை தந்தத்தை வாங்கியதாகவும், தந்தம் செட் வைத்திருப்பதற்கான சான்றிதழ் தன்னிடம் இருப்பதாகவும் கோர்ட்டில் நடிகர் மோகன்லால் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் இந்த பிரச்சினையை பொதுநலனாக கருதிய ஐகோர்ட்டு, வழக்கை தொடர மாஜிஸ்திரேட்டு கோட்டுக்கு பரிந்துரைத்தது. அதன்படி பெரும்பாவூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

    நடிகர் மோகன்லால் மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் நவம்பர் 3-ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்டடு உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த 2016-ம் ஆண்டு கேரள அரசு மோகன்லால் யானை தந்தம் வைத்திருக்க அனுமதி வழங்கியது.
    • பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கேரள அரசு சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால்.

    நடிகர் மோகன்லாலுக்கு சென்னை, கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மோகன்லாலிடம் யானை தந்தம் வைத்திருக்க உரிய லைசன்ஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு கொச்சி பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கேரள அரசு மோகன்லால் யானை தந்தம் வைத்திருக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என கேரள அரசு சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை எதிர்த்து வனவிலங்கு ஆர்வலர்கள் 2 பேர் பெரும்பாவூர் கோர்ட்டில் மனு செய்தனர். அதில் மோகன்லால் மீதான வழக்கை வாபஸ்பெற கூடாது என்று கூறியிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெற மறுத்து அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

    இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் கேரள அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பெரும்பாவூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

    மேலும் மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரிய மனுவை விசாரித்து 6 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாவூர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் இல்லை. அதேபோல பா.ஜனதா கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். #Mohanlal #BJP
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    அங்கு பிரதான எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஓ.ராஜகோபால் என்ற ஒரேஒரு எம்.எல்.ஏ. மட்டுமே உள்ளார். இதனால் அந்த கட்சி கேரள அரசியலில் தன்னை பலப்படுத்திக் கொள்ள பல்வேறு திட்டங் களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

    சமீபத்தில் சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்யும் விவகாரத்தில் பா.ஜனதா பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியை கொடுத்தது. மேலும் சபரிமலை விவகாரததின் மூலம் தனது கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், அதை பாராளுமன்ற தேர்தலில் ஓட்டாக மாற்றவும் வியூகம் வகுத்து செயல்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களை களம் இறக்கினால் எளிதில் வெற்றி பெறலாம் என்று பா.ஜனதா கணக்கு போட்டு உள்ளது. கேரளாவை பொருத்தவரை ஏற்கனவே நடிகர் சுரேஷ்கோபி பா.ஜனதாவின் மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.

    இந்த நிலையில் மலையாள பட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் மோகன்லாலை தங்கள் வலையில் வீழ்த்த பா.ஜனதா காய்களை நகர்த்தியது. ஏற்கனவே மத்திய அரசின் பல திட்டங்களையும், செயல்பாடுகளையும் மோகன்லால் வரவேற்று இருந்ததால் அவரை பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் எப்படியும் களம் இறக்க வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதற்கு ஏற்ப கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் மோகன்லால் போட்டியிடலாம் என்று அந்த கட்சி தலைவர்கள் கூறிவந்தனர். இதனால் திருவனந்தபுரம் எம்.பி. தொகுதியில் மோகன்லால் போட்டியிட உள்ளதாக சமீபகாலமாக பரபரப்பு நிலவி வந்தது.

    இந்த நிலையில் தான் பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக வந்த செய்திகளை நடிகர் மோகன்லால் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக மோகன்லால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் தேர்தலில் போட்டியிடப்போவதாக நிறைய கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. ஆனால் நான் தொடர்ந்து ஒரு நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். என் தொழிலில் எனக்கு முழு சுதந்திரம் உள்ளது.

    அரசியல் என்பது எனக்கு டீ குடிக்கிற மாதிரிதான். அரசியல் பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது என்பதால் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனக்கு அரசியல் ஒத்துவராது. அதனால் தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் இல்லை. அதேபோல பா.ஜனதா கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை.

    அரசியல் கட்சிகள் தங்களுக்கு விருப்பமான நபர்களை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறுவது வழக்கமான ஒன்றுதான். அதற்காக அவர்களை குறைகூற முடியாது. அதேசமயம் அது பற்றிய முடிவை அந்த நபர்தான் எடுக்க வேண்டும். அதன்படி அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை.

    எனக்கு கலைதான் 99 சதவீத வாழ்க்கை. நான் நடித்து முடிக்க வேண்டிய படங்கள் நிறைய உள்ளது. அதில் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன். எனவே அதில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட முடியாது. தொடர்ந்து நடிகனாக இருக்கவே விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் மோகன்லாலுக்கு பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்‌ஷன் நெருங்கிய நண்பர் ஆவார். இதே போல பல திரையுலக நண்பர்களும் அவருக்கு உள்ளனர். தனது நண்பர்கள் வட்டாரத்திலும் தனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை என்றே மோகன்லால் கூறி உள்ளார். #Mohanlal #BJP
    கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்பட 14 பேருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. #PadmaAwards #Mohanlal #Padmabushan
    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.



    இதுதவிர, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் கரியா முண்டா, மலையேறும் வீரர் பச்சேந்திரி பால், மக்களவை எம்.பி நாராயண் யாதவ் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan
    ×