என் மலர்
நீங்கள் தேடியது "பினராயி விஜயன்"
- கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 2019-இல் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு ரூ. 2,150 கோடி திரட்டியது.
- இந்த நோட்டீஸ் ரூ.468 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை தொடர்பானதாகக் கூறப்படுகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள அரசு 2019 ஆம் ஆண்டு மசாலாப் பத்திரங்களை வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டில் இதுபோன்ற பத்திரங்களை வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா ஆனது.
கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 2019-இல் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு ரூ. 2,150 கோடி திரட்டியது.
இந்த நிதியை சட்டவிரோதமாக திசை திருப்பியதாகவும், அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் ரூ.468 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை தொடர்பானதாகக் கூறப்படுகிறது.
அதே வழக்கில், பினராயி விஜயன், அவரது தனிச் செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கும் பெமா சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பினராயி விஜயனுக்கு அனுப்பப்பட்ட சம்மன் பாஜகவின் அரசியல் விளையாட்டு என ஆளும் இடதுசாரி கூட்டணி விமர்சித்துள்ளது.
- இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
- ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாரணாசியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இ
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடியதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் வெறுப்பு மற்றும் வகுப்புவாத சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பின் பாடலைச் சேர்ப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம், தேசிய நிறுவனங்கள் சங் பரிவார அரசியலுக்கு எவ்வாறு இரையாகின்றன என்பதை ரயில்வே அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருகிறது.
அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தான செயலை எதிர்க்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- சட்டசபை 300 விதியின் கீழ், பினராயி விஜயனின் அறிக்கை முற்றிலும் மோசடி.
- இதனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியாது. முற்றிலும் வெளிநடப்பு செய்கிறோம்.
கேரளா பைரவி அல்லது கேரள மாநிலம் உருவான நாளைத் தொடர்ந்து, இன்று அம்மாநில சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் "கேரள மாநிலம் தீவிர வறுமையில் இருந்து விடுபட்டுள்ளது" என அறிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பினராயி விஜயன் அறிவிப்பு ஒரு மோசடி என சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சியின் வெளியேறினர்.
காங்கிரஸ் தலைமையிலான UDF "பினராயி விஜய் கூறுவது மோசடி. சட்டசபையை புறக்கணிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் "சட்டசபை 300 விதியின் கீழ், பினராயி விஜயனின் அறிக்கை முற்றிலும் மோசடி. சட்டசபை விதியை அவமதிப்பதாகும். இதனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியாது. முற்றிலும் வெளிநடப்பு செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மோசடி எனச் சொல்வது அவர்களுடைய பழக்கம். எங்களால் அமல்படுத்த முடியும் என்பதை மட்டுமே சொல்கிறோம். நாங்கள் சொன்னை அமல்படுத்தியுள்ளோம். இதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கான பதில் என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.
- 2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தபட்டது.
- மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது.
இன்று நடைபெற்ற கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில், "கேரளா தீவிரமான வறுமையிலிருந்து விடுபட்ட மாநிலமாக மாறியுள்ளது" என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
சட்டமன்றத்தில் பேசிய பினராயி விஜயன், "2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது. அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் வார்டு குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டன. இது சூப்பர் செக்கிற்கு உட்படுத்தப்பட்டு வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து, 64,006 குடும்பங்களைச் சேர்ந்த 1,03,099 நபர்கள் மிகவும் ஏழ்மையானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
உணவு, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.
முதல் கட்டமாக ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் தவித்த 21,263 பேருக்கு அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கப்பட்டன.
20,648 மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு குடும்பஸ்ரீ திட்டத்தின் மூலம் வழக்கமான உணவு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள், மருந்துகள், தடுப்பூசிகள், நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உறுதி செய்யப்பட்டன.
4,677 குடும்பங்களுக்கு வீடுகளும் 2,713 குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்களும் வழங்கப்பட்டன. 35,041 குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் ரூ.1,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.
- தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்
திருவனந்தபுரம்:
இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி என்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.
கேரளாவிலும், தேர்தல் ஆணையம் தேர்தல் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தும் முடிவை எடுத்து இருக்கிறது.
இது நம் ஜனநாயக செயல்முறைக்கு எதிரான செயலில் ஒன்றாகும்.
தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய் விடும்
பழைய தேர்தல் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு, அத்வேகமாக உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்பே இந்த நடவடிக்கையை செய்ய முயற்சிப்பது முற்றுமில்லாத கவலைகளை எழுப்புகிறது.
ஜனநாயகத்தை பாதிக்க நினைக்கும் இந்த முயற்சியை கேரளா கடுமையாக எதிர்க்கிறது.
ஜனநாயக பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.
- மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது.
கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து மோகன்லால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவின் முகமாக விளங்கும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்த விருது கேரள சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு அவருக்கு பாராட்டு விழா நடத்தியது.
'லால்-சலாம்' என்ற தலைப்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மோகன்லாலுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.
விழாவில் பேசிய பினராயி விஜயன், "மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம். இது ஒவ்வொரு மலையாளியையும் பெருமைப்பட வைக்கிறது. இந்த விருது மலையாள சினிமாவின் கலை மதிப்பை தேசிய அளவில் நிலைநிறுத்தியுள்ளது" என்று கூறினார்.
பாராட்டு விழாவில் ஓவியர் ஏ. ராமச்சந்திரன் வரைந்த ஓவியம் மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
- ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
- புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கான மத்திய அரசின் நிதி உதவி குறித்துதகவல் தெரிவித்தார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.260.65 கோடி நிதி உதவி இதுவரை மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசிய அவர், ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.
பேரிடருக்கு பிந்தைய தேவைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ரூ.2,221.10 கோடி நிதியுதவியைக் கோரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு ரூ.260.65 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த தொகையுமே இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டும் எனவும் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
- ஓணம் பண்டிகையை அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள்.
- இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய பினராயி விஜயன், "மத்திய அமைச்சர் அமித் ஷா அண்மையில் கேரளா வந்திருந்த போது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25% வாக்கினை பெற வேண்டும் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதைபாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். கேரளா பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது என்பதை அவரின் பேச்சு தெளிவுபடுத்துகிறது.
ஓணம் பண்டிகை நாளில் வாமனனுடன் மகா விஷ்ணுவையும், வாமனனின் காலடியில் மகாபலியையும் சித்தரிக்கும் செய்தியை ஒருவர் எனக்கு காட்டினார். இதன் பொருள், மகாபலி நம்மைப் பார்ப்பதாக நம்பப்படும் ஒரு பண்டிகையான ஓணத்தையே அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும்" என்று தெரிவித்தார்.
ஆகஸ்ட் 29 முதலே ஓணம் பண்டிகையின் கொண்டாட்டம் தொடங்கியது. கேரளா மற்றும் தமிழக தெற்கு பகுதியில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஓணத்தின் முக்கியமான நாளான திரு ஓணம் நாளை நடைப்பெற இருக்கிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் லோகா, ஓடு குதிரா சாடும் குதிரா, ஹிருதயபூர்வம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அதில் லோகா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

இன்று கேரளம் சுற்றுலா துறை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைப்பெற்றது. அதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் நடிகர் ரவி மோகன் மற்றும் பசில் ஜோசப் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நடைபெறவுள்ளது.
- தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பர்"
கேரளா மாநிலம், பம்பையில் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான "லோக அய்யப்ப சங்கமம்" நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டுமென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள தேவசம் துறை அமைச்சர் வி.என். வாசவன் அவர்கள் சுடிதம் வாயிலாக கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தனர் .
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது என்றும் இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு அவர்களும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் பங்கேற்பார்கள்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
- இது உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதன் மூலம் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
இது உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கை நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது.
இது கேரளத்தின் ஏற்றுமதியாளர்களை, குறிப்பாக கடல் உணவு, மசாலாப் பொருட்கள், தேயிலை மற்றும் தேங்காய் நார் ஏற்றுமதியாளர்களை கடுமையாகப் பாதிக்கும்.
இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கிறது. இது பன்முகத்தன்மை என்ற கருத்து மீதான தாக்குதலும் கூட.
நாம் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும், நமது இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும், அழுத்தத்திற்கு அடிபணிய மறுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது.
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் இப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஆடு ஜீவிதம் படத்திற்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளாது.
குறிப்பாக லூசிபர் படத்தின் 2 ஆம் பாகமாக எம்புரான் படத்தில் குஜராத் கலவரத்தை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
எம்புரான் படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார். ஆகவே இதன் காரணமாக தான் பிரித்விராஜ் நாயகனாக நடித்த ஆடு ஜீவிதம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் 2023 டிசம்பர் 31க்குள் தணிக்கை முடிந்த படங்கள் மட்டுமே 2023 தேசிய விருதுகளுக்கு தகுதி பெறும். ஆனால் ஆடுஜீவிதம்' திரைப்படம் 2024 இது பிப்ரவரி 1 அன்று தணிக்கை சான்றிதழ் பெற்றது. எனவே, அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் 72வது தேசிய விருதுகளில் ஆடுஜீவிதம்' திரைப்படம் விருதை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.






