என் மலர்
நீங்கள் தேடியது "மணிசங்கர் அய்யர்"
- இந்தியாவில் கூட்டாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார்.
- இந்தியா கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய திறன் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது
இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய மணிசங்கர் அய்யர், "நேருவுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ஆகுமாறு காமராஜரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்தார். அந்த இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு அவர் துணை நிற்பார். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க அவரால் மட்டுமே முடியும்.
வெற்று முழக்கங்களை மட்டும் எழுப்பாமல் இந்தியாவில் கூட்டாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்தியா கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய திறன் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது" என்று தெரிவித்தார்.
முன்னதாக 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என்று அவர் பேசியது கேரளா காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.
- மணிசங்கர் அய்யர் பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தது.
திருவனந்தபுரம்:
தமிழகத்தைப் போல் கேரளாவிலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியால் மக்களிடம் உள்ள அதிருப்தியை பயன்படுத்தி காங்கிரஸ் வெல்ல நினைக்கிறது.
கேரளாவில் சமீபத்திய நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.க.வை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று அசத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சிபிஐ(எம்) தலைமையிலான அரசு நடத்தும் பஞ்சாயத்து ராஜ் முறையை இந்தியாவிலேயே மிகவும் வலுவானது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனெனில் 1931-ல் காந்திஜி விரும்பிய கிராம அளவிலான ஜனநாயகத்தை காங்கிரஸ் அரசுகளை விட சிறப்பாக நிறைவேற்றி உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார். கேரளாவின் உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயனும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ள நிலையில், மணிசங்கர் அய்யர் பினராயி விஜயன் மீண்டும் முதல் மந்திரி ஆவார் எனக்கூறியது அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
- 1962-ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலை சீன படையெடுப்பு என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- மணிசங்கர் அய்யரின் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது.
புதுடெல்லி:
சமீபகாலமாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் புதுடெல்லியில் உள்ள வெளிநாட்டு நிருபர்கள் கிளப்பில் 'நேருவின் முதல் ஆட்சேர்ப்பு' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில்,
1962-ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலை சீன படையெடுப்பு என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மணிசங்கர் அய்யரின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது. மணிசங்கர் அய்யர் வரலாற்றை திரித்து கூறுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மணிசங்கர் அய்யர் இந்த சர்ச்சை பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மேலும் மணிசங்கர் அய்யர் கருத்தில் இருந்து காங்கிரஸ் விலகி நிற்பதாக அவர் கூறினார்.
மேலும் இதுபற்றி மணிசங்கர் அய்யர் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு நிருபர்கள் கிளப்பில் 'சீனப் படையெடுப்பு'க்கு முன்னர் 'குற்றம் சாட்டப்பட்ட' என்ற வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியதற்காக நான் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்து உள்ளார்.
Mani Shankar Aiyar, speaking at the FCC, during launch of a book called Nehru's First Recruits, refers to Chinese invasion in 1962 as 'alleged'. This is a brazen attempt at revisionism.
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 28, 2024
Nehru gave up India's claim on permanent seat at the UNSC in favour of the Chinese, Rahul… pic.twitter.com/Z7T0tUgJiD






