என் மலர்tooltip icon

    இந்தியா

    பினராயி விஜயன் மீண்டும் முதல் மந்திரி ஆவார்: மூத்த தலைவர் பேச்சால் காங்கிரஸ் அதிர்ச்சி
    X

    பினராயி விஜயன் மீண்டும் முதல் மந்திரி ஆவார்: மூத்த தலைவர் பேச்சால் காங்கிரஸ் அதிர்ச்சி

    • கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.
    • மணிசங்கர் அய்யர் பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தது.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தைப் போல் கேரளாவிலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆண்டு கால கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியால் மக்களிடம் உள்ள அதிருப்தியை பயன்படுத்தி காங்கிரஸ் வெல்ல நினைக்கிறது.

    கேரளாவில் சமீபத்திய நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.க.வை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று அசத்தியது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சிபிஐ(எம்) தலைமையிலான அரசு நடத்தும் பஞ்சாயத்து ராஜ் முறையை இந்தியாவிலேயே மிகவும் வலுவானது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனெனில் 1931-ல் காந்திஜி விரும்பிய கிராம அளவிலான ஜனநாயகத்தை காங்கிரஸ் அரசுகளை விட சிறப்பாக நிறைவேற்றி உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார். கேரளாவின் உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயனும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ள நிலையில், மணிசங்கர் அய்யர் பினராயி விஜயன் மீண்டும் முதல் மந்திரி ஆவார் எனக்கூறியது அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    Next Story
    ×