என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீசர் வெளியீடு"

    மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்கிறார்.

    நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

    இப்படம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் நிறுவனங்கள் தயாரித்த இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தை தொடர்ந்து, நடிகர் மாதவன் தற்போது மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.

    இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்கிறார்.

    இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் ஜி.டி.நாயுடு (GDN) படத்தை இயக்குகிறார், ராக்கெட் படத்தை தயாரிக்கும் அதே நிறுவனங்கள் இப்படத்தையும் தயாரிக்கின்றன.

    ஜி.டி. நாயுடு பிறந்த இடமான கோயமத்தூரில் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜி.டி.நாயுடு படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

    தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை திரைப்படத்தை இயக்கினார்.

    பிறகு, தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

    இப்படம் வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேரே இஷ்க் மே படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மோகன்லால் அடுத்ததாக Vrusshabha என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ஹிருதயபூர்வம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து மோகன்லால் அடுத்ததாக Vrusshabha என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இது ஒரு பான் இந்தியன் காவியமாக உருவாகி வருகிறது. மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசரை வரும் 18 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை Sam CS மேற்கொண்டுள்ளார்.

    ஒளிப்பதிவு: Antony Samson

    எடிட்டிங்: KM பிரகாஷ்

    • சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • டீசல் படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

    துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் 'டீசல்' படத்தின் டீசர் வெளியானது!

    திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

    • தண்டகாரண்யம் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.
    • தண்டகாரண்யம் திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது.

    2019-ம் ஆண்டு அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் வெளியானது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இதைத்தொடர்ந்து அதியன் ஆதிரை அடுத்ததாக தண்டகாரண்யம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. தண்டகாரண்யம் என்றால் ராமாயண இதிகாசத்தில் உள்ள காட்டின் பெயராகும். இப்படம் பயங்கரவாதத்தையும், காவல் அதிகாரிகள் மற்றும் காட்டை சம்மந்தப்பட்ட கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில், தண்டகாரண்யம் பாடத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • இயக்குநர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
    • தேசிங்குராஜா -2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

    துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்கு ராஜா'.

    இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

    மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குநர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

    தேசிங்குராஜா -2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

    கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து உருவாகும் இந்த படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிசர் வெளியாகி உள்ளது.



    • ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.
    • நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

    நடிகர் பிரபு மற்றும் வெற்றி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜபுத்திரன். இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் பிரபுவுடன் வெற்றி , தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ராஜபுத்திரன் திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. நவ்ஃபால் ராஜா இசையமைக்க ஆலிவர் டெனி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

    இப்படத்தின் முதல் பாடலான "உம்மா" பாடலை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.

    இந்நிலையில், ராஜபுத்திரன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    • அதிரடி ஆக்ஷன் காட்சி மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் வாக்கிங் காட்சியும் நிறைந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா'. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில், பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது.

    இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.




    இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.

    இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.




    அதிரடி ஆக்ஷன் காட்சி மற்றும் அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் வாக்கிங் காட்சியும் நிறைந்த இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
    • பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.

    இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.

    சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி' திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கியுள்ளார்.

    அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாஸ்கர் என்ற கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். சாதாரண மிடில் கிளால் மேனாக, ஒரு வங்கி ஊழியராக இருப்பவர் திடீரென்று அவருக்கு ஒரு மிகப் பெரிய பணத்தொகை கிடைக்கிறது இவ்வாறு டீசரின் காட்சிகள் மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு ஜூலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×