search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லக்கி பாஸ்கர்"

    • கடந்த மாதம் 'லக்கி பாஸ்கர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது.
    • லக்கி பாஸ்கர் படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    கடந்த மாதம் 'லக்கி பாஸ்கர்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது. 'சீதா ராமம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் 'லக்கி பாஸ்கர்' என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இப்படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் டிராக் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    இப்படம் 90 காலக்கட்டத்தில் நடக்கும் கதைக்களத்தால் பாடலும் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப இசையமைத்துள்ளனர். இப்பாடலை பிரபல பின்னணி பாடகியான உஷா உதுப் அவரது கம்பீரமான குரலில் பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை ராமஜொகய்யா சாஸ்திரி எழுதியுள்ளார்.\

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லக்கி பாஸ்கர் வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
    • ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆனந்த் அரவிந்தக்‌ஷன், ஸ்வேதே மோகன் இப்பாடலை பாடியுள்ளனர்.

    இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

    சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    பிப்ரவரி 3ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. அந்த போஸ்டரில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியின் நுழைவாயிலை நோக்கி நடந்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    தொடர்ந்து, இப்படத்தின் டீசர் வெளியானது. லக்கி பாஸ்கர் வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

    அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" .

    இந்நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடலான "கொல்லாமல் கொல்லாதே.." என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

    ஜி.வி.பிரகாஷ் இசையில் விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளில் ஆனந்த் அரவிந்தக்ஷன், ஸ்வேதே மோகன் இப்பாடலை பாடியுள்ளனர்.

    • துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் லக்கி பாஸ்கர்.
    • துலகர் சல்மான் நடித்து இருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார்.

    தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். அவரது நடிப்பில் வௌியான சீதா ராமம் திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த கிங் ஆப் கோதா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் லக்கி பாஸ்கர்.

    லக்கி பாஸ்கர் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாடல் நிறைவு செய்யப்பட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டதாக இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதேபோல தங்கலான் படத்தின் முதல் பாடலும் நிறைவு பெற்றதாக அவர் அறிவித்துள்ளார். விரைவில் இரண்டு பாடல்களும் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    துலகர் சல்மான் நடித்து இருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் தனுஷை வைத்து வாத்தி படம் இயக்கியவர் ஆவார்.

    படப்பிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார்.

     

    மேலும் ரசிகர்கள் ஜிவி பிரகாஷிடம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தை பற்றியும் , தனுஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்  திரைப்படத்தின் அப்டேட்டுகளை கேட்டனர். அதற்கு ஜிவி பிரகாஷ் அமரன் திரைப்பட பாடல்கள் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்தது, தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்மதம் பெற காத்துக் கொண்டு இருக்கிறேன் என்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் 4 பாடல்கள் உள்ளன, அது எப்பொழுது  வெளிவரும் என மிகவும் எக்சைட்டாக உள்ளேன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல்களாக அது அமையும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
    • பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.

    இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.

    சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி' திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கியுள்ளார்.

    அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாஸ்கர் என்ற கதாப்பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். சாதாரண மிடில் கிளால் மேனாக, ஒரு வங்கி ஊழியராக இருப்பவர் திடீரென்று அவருக்கு ஒரு மிகப் பெரிய பணத்தொகை கிடைக்கிறது இவ்வாறு டீசரின் காட்சிகள் மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு ஜூலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்
    • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது

    இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.

    சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. அந்த போஸ்டரில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியின் நுழைவாயிலை நோக்கி நடந்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில், நாளை இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

    அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×