என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `பணம் இருந்தாதான்  பாசம் மரியாதை எல்லாம் - லக்கி பாஸ்கர் டிரைலர் வெளியீடு
    X

    `பணம் இருந்தாதான் பாசம் மரியாதை எல்லாம்' - லக்கி பாஸ்கர் டிரைலர் வெளியீடு

    • துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
    • படத்தின் டிரைலர் தற்பொழுது வெளளியாகியுள்ளது.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

    இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    படத்தின் டிரைலர் தற்பொழுது வெளளியாகியுள்ளது. டிரைலரி சாதாரண ஒரு வங்கி ஊழியராக இருக்கும் துல்கர் சல்மான் பல பண நெருக்கடியை சமாளித்து வருகிறார். திடீர் என்று பணக்காரண் ஆவதுப் போல் டிரைலரில் காட்சிகள் அமைந்துள்ளது. டிரைலரின் காட்சிகள் படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×