துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தின் டிரைலர் ரிலீஸ் அறிவிப்பு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தின் டிரைலர் ரிலீஸ் அறிவிப்பு
Published on

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதுப் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com