என் மலர்
நீங்கள் தேடியது "amaran"
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் வந்தது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் நடித்து இருந்தனர்.
கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்து இருந்தார். 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதைதொடர்ந்து, அமரன் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' வென்றது. மேலும், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு 'அமரன்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவாவில் நடைபெறவுள்ள 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.
இதுகுறித்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிர்காரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோவாவில் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவ.20 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் அமரன் படத்திற்கு விருது.
- 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் வந்தது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் நடித்து இருந்தனர்.
கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். 'அமரன்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்நிலையில், கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் 'சிறந்த பிறமொழித் திரைப்படம்' வென்றுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு கேரள அமைச்சர் வாசவனிடம் விருதை பெற்றுக்கொண்டார்.
- பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் 26 பேர் உயிரிழப்பு.
- அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் குறித்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல், மனிதத்துக்கும், அமைதிக்கும் ஒரு பேர் இடியாகும்.
ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம், காஷ்மீரின் இதயம் போன்றது.
அமரன் படப்பிடிப்பின்போது, பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டன. அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகவும் அன்போடு நடந்துகொண்டனர்!
தாக்குதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள 'அமரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நேற்று (பிப் 16) அமரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Happy Birthday @Siva_Kartikeyan! Your special day is celebrated across borders and cherished in all our hearts. #Amaran #HappyBirthdaySK#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) February 17, 2024
A Film by @Rajkumar_KP@ikamalhaasan #Mahendran @gvprakash @Sai_Pallavi92… pic.twitter.com/M5XlNJPFXY
இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்
1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- னது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது.
- எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் SK 23" பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது. அதற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கலைத்துறை மற்றும் ஊடகங்களில் (பத்திரிக்கை தொலைக்காட்சி, பண்பலை மற்றும் இணைய ஊடகம் இருந்து வாழ்த்திய எனது அன்பான நண்பர்களுக்கும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பைப் பொழிந்த அனைத்து நட்சத்திரங்களின் சிகர்களுக்கும் நன்றி
அமரன்" டீசர் மூலம் இந்த நாளை மேலும் மறக்க முடியாத நாளாக மாற்றிய எனது தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் சார், சோனி பிக்சர்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன் சார், டிஸ்னி மற்றும் அமரன் பட குழுவினார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
அதே நாளில் எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் பெரிலின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பாராட்டுகளை பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி
எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் மற்றும் SK 23" பட குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அன்பான ரசிகர்களான சகோதர், சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவு கடந்த அன்பு தான், என்னை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது.
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
- அமரன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என வலியுறுத்தினர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தஞ்சாவூா்:
அமரன் திரைப்படத்தின் டீசர் எனப்படும் முன்னோட்டக் காட்சிகள் வெளியானது. அதில் காஷ்மீா் இளைஞா்களையும், போராட்டத்தில் ஈடுபடுபவா்களை பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அப்படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில் கும்பகோணம் காந்தி பூங்கா நுழைவாயில் முன்பு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மாநில இளந்தமிழ்ப்புலிகள் பாசறை துணை அமைப்பாளர் விஜய ஆனந்த், மகளிர் அணி மாநில செயலாளர் வெண்ணிலா சேகர், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரை கண்டித்து அவர்களது உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்து கோஷங்கள் எழுப்பினர். அமரன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என வலியுறுத்தினர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மைகள் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோயிலிலுள்ள சிறு ஊரில் நடக்கும் புறா பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பைரி. அப்பாவை இழந்த தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என தாய் ஆசைப்படுகிறாள். ஆனால் தாயின் பேச்சை கேட்காமல் புறா பந்தயத்தில் ஈடுப்படுகிறான் நாயகன்.
புறா பந்தயத்தில் இருக்கும் பிரச்சனைகளும் அதில் இருக்கும் விரோதம், துரோகத்தை பற்றி பேசுகிறது இந்த படம். ஜான் கிளாடி இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரமேஷ் ஆறுமுகம், மேகனா எலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நல்ல படங்களை பார்த்தால் அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டும் பழக்கமுடையவர். பிப்ரவரி மாதம் ரியோ ராஜ் நடித்து வெளியான் "ஜோ" திரைபடக்குழுவினரை அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பைரி படக்குழுவினரை அழைத்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் படக்குழுவினரிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது
- "எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க" என கூறினார்
வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் சிவக்கார்த்திகேயன் முக்கிய பங்கு வகுக்கிறார். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவரின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷ்ன்ஸ் இருக்கிறது.
சமீபத்தில் வெளியான அயலான் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.குழந்தை ரசிர்கர்கள் சிவகார்த்திகேயனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அயலான் படத்தை தொடர்ந்து அவரின் 21-வது படமான அமரனை கமலஹாசன் தயாரிக்கிறார்.
சாய் பல்லவி,புவன் அரோரா,ராஹுல் போஸ் போன்ற பல நட்சத்திரங்கள் இதில் நடித்துருக்கின்றனர். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்த்ற்கு இசையமைத்துள்ளார்.
அமரன் படத்தில் சிவகார்த்திக்கேயன் ராணுவ கமாண்டோவாக நடித்து இருக்கிறார்.
இதற்காக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றி கம்மோண்டோவின் தோற்றத்தில் கச்சிதமாக இருக்கிறார்.
அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படத்திற்க்கு நெட்ஃப்லிக்ஸ் கொடுத்த அதிகபட்ச தொகை இது. முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் ரைட்சை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
அதனால் இப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று அவரது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் " எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க. என் சினிமா வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணதுல இருந்து இப்போ வரைக்கும் நிறைய பிரச்சனை, வலி இருந்திருக்கு சிலது உங்களுக்கு தெரியும் சிலது தெரியாது. பிராப்ளம் ஷேர் பண்ண அப்பா இல்ல சப்போர்ட் பண்ண அண்ணனும் இல்ல. ஆனா இப்போ என் ஃபேன்சான ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் நீங்க இருந்தீங்க இருப்பீங்க" என மன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பின் சந்திப்பை முடித்து அங்கு இருந்து கிளம்பும் போது ரசிகர்களைப் பார்த்து சாப்ட்டீங்களா என்று கேடு விட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தமிழ் சினிமாவில் வேகமாய் வளர்ந்து முன்னணி நடிகராக உச்சம் தொட்டவர் தான் சிவகார்த்திகேயன்.
- தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் நுழைந்துள்ளார்.
சென்னை, போரூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் வந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் சிவகார்த்திகேயன்.இன்று சந்தித்துப் பேசினார்.
தமிழ் சினிமாவில் வேகமாய் வளர்ந்து முன்னணி நடிகராக உச்சம் தொட்டவர் தான் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா போன்றோரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு நிகராக சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் ஈட்டி வருகிறது.
சமீபத்தில் வெளியான அயலான் படமும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அயலான் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் அமரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலை கொடுத்து ஒடிடி-ல் வாங்கப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று சென்னையில் அவரது ரசிகர்களை சந்தித்தார். இந்த பேன்ஸ் மீட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார். இந்நிலையில் முழு நேரமாக அரசியலில் இறங்கவுள்ளதால் இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
ஆதலால் விஜயின் இடத்தை பிடிக்கவே சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்திக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகிறது. மேலும் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கி தான் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அது போலவே அரசியலில் சிவகார்த்திகேயன் வருவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'அமரன்' படம் உருவாக்கப்பட்டு உள்ளது.இதன் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் 30 நாள் தொடர்ச்சியாக நடந்தது.
- இந்த படத்தில் எதிரிகளுடன் சிவகார்த்திகேயன் மோதும் துப்பாக்கி சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 21 - வது படமாக 'அமரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது.
கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்த்' என்கிற ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய, 'ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் ராஜ்புத் ரெஜிமெண்ட்'பிரிவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார்.அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டைத் தாக்கி, அது தீப்பற்றி எரிந்ததும் தப்பியோடிய பயங்கரவாதிகளில் இருவரை முகுந்த் கொன்றார்.
இதைத் தொடர்ந்து, தப்பியோடி வேறு வீட்டில் பதுங்கிய மற்ற பயங்கரவாதிகள் மீதும் முகுந்த் தாக்குதல் நடத்தினார். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி சுட்டதில் முகுந்த் உடலில் குண்டு பாய்ந்தது.

இதில் வீர தீரத்துடன் போராடி 3- வது பயங்கரவாதியை அவர் சுட்டுக் கொன்றார். அதை தொடர்ந்து காயம் அடைந்த முகுந்த் வரதராஜனும் உயிரிழந்தார். அவரது வீர மரணத்தை போற்றும் வகையில் அவருக்கு 'அசோக சக்ரா விருது' வழங்கப்பட்டது.
எனவே இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு'அமரன்' படம் உருவாக்கப்பட்டு உள்ளது.இதன் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் 30 நாள் தொடர்ச்சியாக நடந்தது. மீதி படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்நிலையில் 'பிரேமலு' மலையாள படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஷியாம் மோகன் (ஜேகே ஆதி) தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அமரன்' படத்தில் இணைந்து உள்ளார். அவர் ஒரு முக்கிய சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார்.
இதை தொடர்ந்து 'அமரன்' படம் கூடுதல் பலம் பெற்று வருகிறது. இந்த படத்தில் எதிரிகளுடன் சிவகார்த்திகேயன் மோதும் துப்பாக்கி சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார்.
- இதுகுறித்து ஏ.ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். விஜய்-க்கு திருப்பு முனையாக அமைந்த துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை இயக்கினார். மக்கள் மனதில் என்றும் ஏ.ஆர் முருகதாஸ் படங்களுக்கு என்றும் எதிர்பார்ப்புண்டு.
கடைசியாக அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தர்பார் திரைப்படம் பெரிதாக வசூல் இல்லை.
பின் ஏ.ஆர் முருகதாஸ் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளிவந்த அகிரா படத்திற்கு பிறகு சல்மான் கானை வைத்து பேன் இந்தியன் படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு இந்த படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ரமணா படத்தின் லொகேஷனுக்கு 23 வருடங்களுக்கு பிறகு சென்றுள்ளார். Sk23 படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் நடைப்பெற்று வருகிறது.
இதுகுறித்து ஏ ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் "23 வருடங்களுக்கு பிறகு Sk23 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரமணா படம் எடுத்த அதே லொகேஷனுக்கு வந்து இருக்கிறேன், எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே வந்து நிக்கிறேன் இது கனவா? நிஜமா? என்று தெரியவில்லை". மிஸ் யூ கேப்டன் என உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகேஷ்பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியை பெற்றது.
- அவர்கள் இருவரையும் நோக்கி ரசிகர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டனர்.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. சமீப காலமாக ஏராளமான படங்கள் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியை பெற்றது.
படத்தில் மகேஷ்பாபுவுடன் 'குர்ச்சி மடத்த பெட்டி' என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா மற்றும் சதீஷ் ஆகியோர் தனியார் கல்லூரியின் கல்சுரல்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அடுத்ததாக ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றனர்.
அவர்கள் இருவரையும் நோக்கி ரசிகர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையொட்டி அந்த பாடலுக்கு சில நிமிடங்கள் இணைந்து நடனம் ஆடினர். அப்போது ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயனுக்கு நடன ஸ்டெப்களை கற்றுக் கொடுத்தார். கல்லூரி மாணவர்களின் வேண்டுதலுக்கு இணங்க மாணவர்களுக்காக கல்லூரி முதல்வரிடம் விடுமுறை கேட்டார். கல்லூரி மாணவர்களின் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






