என் மலர்
நீங்கள் தேடியது "ருக்மணி வசந்த"
- நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்
- இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹீமா குரேஷி, தாரா சுதரியா ஆகியோரின் கதாபாத்திர பெயர்களுடன் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு அப்டேட் கொடுத்து.
இந்நிலையில், டாக்சிக்' திரைப்பட நாயகன் யாஷ்-ன் கதாபாத்திர பெயர் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார்.
- இதுகுறித்து ஏ.ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். விஜய்-க்கு திருப்பு முனையாக அமைந்த துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை இயக்கினார். மக்கள் மனதில் என்றும் ஏ.ஆர் முருகதாஸ் படங்களுக்கு என்றும் எதிர்பார்ப்புண்டு.
கடைசியாக அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தர்பார் திரைப்படம் பெரிதாக வசூல் இல்லை.
பின் ஏ.ஆர் முருகதாஸ் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளிவந்த அகிரா படத்திற்கு பிறகு சல்மான் கானை வைத்து பேன் இந்தியன் படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு இந்த படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் Sk23 படத்தை இயக்குகிறார். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ரமணா படத்தின் லொகேஷனுக்கு 23 வருடங்களுக்கு பிறகு சென்றுள்ளார். Sk23 படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் நடைப்பெற்று வருகிறது.
இதுகுறித்து ஏ ஆர் முருகதாஸ் சமூக வலைத்தளங்களில் பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் "23 வருடங்களுக்கு பிறகு Sk23 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரமணா படம் எடுத்த அதே லொகேஷனுக்கு வந்து இருக்கிறேன், எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே வந்து நிக்கிறேன் இது கனவா? நிஜமா? என்று தெரியவில்லை". மிஸ் யூ கேப்டன் என உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






