என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rukmini vasanth"

    • 2025-ம் ஆண்டு கதாநாயகிகளுக்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது.
    • கதாநாயகிகளின் ஆதிக்கத்தில் பல படங்கள் வெற்றி பெற்று கோடிகளில் வசூலை பெற்றுள்ளது.

    திரை உலகில் கதாநாயகர்களால் படங்கள் வெற்றி பெற்று நல்ல வசூலை பெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு கதாநாயகிகளின் ஆதிக்கத்தில் பல படங்கள் வெற்றி பெற்று கோடிகளில் வசூலை பெற்றுள்ளது.

    2025-ம் ஆண்டு கதாநாயகிகளுக்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது. அதிக வசூல் பெற்று தந்த 5 கதாநாயகிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்


    ராஷ்மிகா மந்தனா:-

    2025-ம் ஆண்டில் பொருத்தவரை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்து முதல் இடத்தில் இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சாவா, சிக்கந்தர், தம்மா மற்றும் குபேரா, தி கேர்ள் பிரெண்ட் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான படங்களில் 5 படங்கள் மொத்தமாக ரூ.1347.71 கோடி வசூலை பெற்றுள்ளது. இதையடுத்து இந்தியாவில் அதிக வசூல் செய்த நடிகை என ராஷ்மிகாவை திரை உலகம் கொண்டாடி வருகிறது.


    ருக்மணி வசந்த்-

    கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்த ருக்மணி வசந்த் நடிப்பில் காந்தாரா அத்தியாயம் 1, ஏஸ், மதராசி ஆகிய மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஆண்டு அவரது படங்களின் மொத்த வசூல் ரூ.963.33 கோடி மதிப்பில் ருக்மிணி 2-ம் இடத்தில் இருக்கிறார்.


    சாரா அர்ஜுன்:-

    ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். முதல் படத்திலேயே ரூ.836.75 கோடி அவர் நடிப்பில் வெளியான துரந்தர் படம் வசூலை பெற்று தந்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் அதிக வசூலை பெற்று தந்த நடிகைகளின் 3-வது இடத்தில் சாரா இருக்கிறார்.


    அனீத் பத்தா:

    4-ம் இடத்தில் இருக்கும் அனீத் பத்தா நடிப்பில் வெளியான சாயாரா ரூ.570.33 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.


    கியாரா அத்வானி:-

    கேம் சேஞ்சர் படத்தில் கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர், வார்2 படங்கள் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் ரூ.550.63 கோடி வசூலை பெற்று இருக்கிறது.


    ஸ்பெஷல் மென்ஷன்:

    கல்யாணி பிரியதர்ஷன்:-

    டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் தான் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.

    ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. மேலும், கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் அதிக வசூல் குவித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.

    இதனால் தான் இந்த பட்டியலில் உள்ள மற்ற நடிகைகளை விட கல்யாணி பிரியதர்ஷன் தனித்து தெரிகிறார். அதற்காகவே அவருக்கு இந்த ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் இடம் கிடைத்துள்ளது.

    • படத்தின் வெற்றி ரிஷப்ஷெட்டியையும், கதாநாயகியான ருக்மிணி வசந்த்தையும் உலக அளவில் பிரபலமாக்கி இருக்கிறது.
    • சமூக வலைதள பக்கங்களிலும் ரிஷப்ஷெட்டி, ருக்மிணி வசந்த் பெயர்கள் டிரெண்டிங்காகி வருகிறது.

    ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காந்தாரா சாப்டர்-1' சர்வதேச அளவில் வெளியான இந்த படம் திரைக்கு வந்து ரூ.1000 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றி ரிஷப்ஷெட்டியையும், கதாநாயகியான ருக்மிணி வசந்த்தையும் உலக அளவில் பிரபலமாக்கி இருக்கிறது.

    இது மட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களிலும் ரிஷப்ஷெட்டி, ருக்மிணி வசந்த் பெயர்கள் டிரெண்டிங்காகி வருகிறது. மேலும் ஐ.எம்.டி.பி. வெளியிட்டுள்ள டிரெண்டிங் பட்டியலில் முதல் 2 இடங்களை ரிஷப்ஷெட்டியும், ருக்மிணி வசந்தும் பெற்றுள்ளனர்.

    ரிஷப் முதல் இடத்தையும் 2-ம் இடத்தை ருக்மிணி வசந்தும், 3-வது இடத்தில் மோனாசிங், 4-வது இடத்தில் ஹிருத்திக் ரோஷன் பெயரும் இடம் பெற்று உள்ளன.

    • சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

    இதற்கிடையே, மதராஸி படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.படத்தின் நேரளவு 2 மணி நேரம் 47 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைப்பெறுகிறது. ரசிகர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனின் பேச்சிற்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

    • பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது.
    • படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

     

    இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தின் புதிய ஸ்டில்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்திற்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படம் கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்து கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் கூறியிருந்தார். இதனால் இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சலமபல பாடல் வெளியாகி வைரலானது.

    இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அந்த வகையில் படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் BTS-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது. மதராஸி படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


    • 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது
    • படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள்

    கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

    தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தனர். படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ருக்மிணி வசந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். படத்தில் கனகவதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

    • மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.
    • மதராஸி படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்திற்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படம் கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்து கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் கூறியிருந்தார். இதனால் இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், 'மதராஸி' திரைப்படம் வெளியாக 30 நாட்கள் உள்ள நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    • மகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்தார்.
    • இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார்.

    படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தில் இடம்பெற்ற யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதியின் நகைச்சுவை காட்சிகள் மக்கள் பலரால் பாராட்டு பெற்றது. இந்நிலையில் திரைப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    • மகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மகாராஜா திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் இடம் பெற்ற பார்வை தனி வீடியோ பாடலை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் கபில் கபிலன் பாடியுள்ளார்.

    • விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாரில் பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்ட நபருடன் விஜய் சேதுபதி சண்டையிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.

    • விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார்.

    இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இன்று படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைப்பெற்றது. அதில் விஜய் சேதுபதி பேசியதாவது " எனக்கு இயக்குநர் ஆறுமுககுமாரை நடுவுல் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு முன்பாகவே தெரியும். ஒரு ஆடிஷனின் போது என்னை நல்லா நடிப்பான் என நம்பிக்கை வைத்து பரிந்துரை செய்தது ஆறு தான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல இவன் நல்லா நடிப்பான்னு சொன்னது ஆறு தான். அது காலத்துக்கும் அந்த நன்றி சொல்லிகிறேன். ஒரு இருள்-ல விளக்கு ஏத்தி வச்சது ஆறு தான். பழச எப்போது நினைவு வச்சுகிறது என்ன உயிரோடவும் ஈரத்துடன் வச்சுக்க உதவுது" என மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

    ×