கனகவதியாக ருக்மிணி வசந்த் - சிறப்பு போஸ்டர் வெளியிட்ட காந்தார் 2 படக்குழு

'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள்
கனகவதியாக ருக்மிணி வசந்த் - சிறப்பு போஸ்டர் வெளியிட்ட காந்தார் 2 படக்குழு
Published on

கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தனர். படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ருக்மிணி வசந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். படத்தில் கனகவதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com