என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காந்தாரா 2"
- 'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் வெளியாகி வருகிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சந்தித்தார்.
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. முதல் படமான காந்தரா கதைக்கு முற்கதையாக ப்ரீகுவல் படமாக இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி மலையாள ஹீரோ மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
அதிலும் குறிப்பாக கதைப்படி ரிஷப் செட்டியின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து படக்குழு சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சென்று சந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ’காந்தாரா’ வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுகிறது.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்திற்கு 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு சமீபத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.
இந்நிலையில், காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' திரைப்படத்தின் கதை 1970 -80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று அமைந்துள்ளதால் இதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி மங்களூரில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1'.
- இப்படம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாகவுள்ளது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
காந்தாரா பாகம் 1 போஸ்டர்
இதையடுத்து இப்படத்திற்கு 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' என தலைப்பு வைத்துள்ளதாகவும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமாக ரிஷப் ஷெட்டி இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- காந்தாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
காந்தாரா 2 போஸ்டர்
இந்நிலையில், 'காந்தாரா பாகம்-1' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் 27-ஆம் தேதி நண்பகல் 12.25 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இந்த போஸ்டரில் 'இது வெறும் வெளிச்சம் அல்ல தரிசனம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காந்தாரா 2' படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரிஷப் ஷெட்டி எழுதி முடித்துள்ளதாகவும் இப்படத்தின் பூஜை நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கதைக்காக ரிஷப் ஷெட்டி பல ஆராய்சிகளை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
- ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் ப்ரீக்வலாக உருவாக உள்ளது.
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காந்தாரா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இயக்குனர் ரிஷப் ஷெட்டி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
- இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.
கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.
காந்தாரா
ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.
காந்தாரா
இந்நிலையில், 'காந்தாரா 2' திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகவுள்ளதாகவும் இது சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், 'காந்தாரா 2' திரைப்படம் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய தேவையுள்ளதால் வருகிற ஜூன் முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.