என் மலர்
சினிமா செய்திகள்

அடுத்தடுத்து மரணம்..! காவு வாங்கும் காந்தாரா-2? அச்சத்தில் படக்குழுவினர்
- காந்தாரா-2 படத்தில் நடித்து வந்த நடிகர்கள் அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- காந்தாரா படம் மலைவாழ் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதை.
கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி அவரே நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், காந்தாரா-2 படத்தில் நடித்து வந்த நடிகர்கள் அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா கொல்லூர் பகுதியில் 'காந்தாரா-2' படப்பிடிப்பு நடந்து வந்தபோது, துணை நடிகராக நடித்து வந்த கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த நடிகர் கபில்(வயது 32) சவுபர்ணிகா ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தொடர்ந்து, கொல்லூரில் படப்பிடிப்புக்கு துணை நடிகர்களை ஏற்றி வந்த வேன், விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், காந்தாரா-2ல் முக்கிய பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ராகேஷ் பூஜாரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அவர், உடுப்பியில் நடந்த திருமண மெஹந்தி விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்த அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.
காந்தாரா படம் மலைவாழ் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதை. காந்காரா-2 படத்தின் படப்பிடிப்பின்போது, அடுத்தடுத்து நிகழும் மரணச் செய்தியால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.






