என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hombale films"

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    • RCB அணியின் மதிப்பு சுமார் ரூ.17,762 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக (ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனமானமும் அதானி குழுமமும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் ஆர்சிபி அணியை வாங்க முன்வந்துள்ளது.

    அதாவது பிற நிறுவனங்களுடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கி இணை உரிமையாளராக மாற ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.

    தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தனர். படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ருக்மிணி வசந்த் படத்தில் கனகவதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும் குலஷேகரன்' ஆக குல்ஷன் தேவ்வையா நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. குல்ஷன் ஒரு ராஜா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

    • அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா வெளியானது
    • திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

    அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் இதுவரை 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இந்தியாவில் தயாரித்த ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூல் பெற்ற படம் இதுவே என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    • அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது.
    • திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

    அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகாலாதனின் கதையாகும்.

    திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் முதல் நாள் வசூலாக 1.75 கோடி, 2 ஆம் நாள் 4.6 கோடி, 3-வது நாள் 9.5 கோடி ரூபாய் மற்றும் 4-5 ஆம் நாளில் 13.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தம் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்தின் நல்ல வரவேற்பை முன்னிட்டு திரைப்படம் இலங்கை, ஆஸ்திரேலயா, மலேசியா மற்றும் யூரோப் ஆகிய மாநகரங்களில் இன்று வெளியாகியுள்ளது.

    இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்க சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த சினிமாடிக் யூவிவெர்ஸ் விஷ்ணுவின் 10 அவதாரங்களை படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். 2025 முதல் 2037 ஆண்டுகள் மத்தியில் இப்படங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ்
    • வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

    இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் அடுத்ததாக பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    கே.ஜி.எஃப் பாகம் 1 & 2, சலார், காந்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தது ஹொம்பலே பிலிம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஹொம்பலே இணையும் திரைப்படம் ஒரு மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக இருக்கிறது. ஹிரித்திக் மற்றும் ஜூனியர் என்.டி ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

    • ’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’ போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ்.
    • இந்நிறுவனம் திரைத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

    'கே.ஜி.எஃப். 1', 'கே.ஜி.எஃப் 2', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ். இந்நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, " எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த நட்புறவு தொடரும் என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன்.


    தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்

    சினிமா, வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது. நேர்நிலையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாக இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது, இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம்.


    ஹோம்பாலே பிலிம்ஸ் அறிக்கை

    பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியாவிலுள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக்கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

    ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது 'சலார்', 'ரகு தாத்தா', 'டைசன்', 'ரிச்சர்ட் ஆண்டனி' போன்ற படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஹொம்பலே பிலிம்ஸ்.
    • ஹொம்பலே பிலிம்ஸ் பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தை தயாரித்து இருந்தனர்.

    கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஹொம்பலே பிலிம்ஸ். கே.ஜி. எஃப் திரைப்படத்தை தயாரித்து கன்னட திரைப்படத்தை பான் இந்தியன் லெவலுக்கு கொண்டு சென்ற பெருமை ஹொம்பலே பிலிம்ஸ்-யே சாரும். அதைத் தொடர்ந்து இயக்கிய கே.ஜி.எஃப் 2, காந்தாரா ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுக்க பேசப்பட்டு  வெற்றிப்பெற்ற திரைப்படங்களாகும். ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களின் மீது எப்பொழுதும்  ரசிகர்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு.

    கடைசியாக ஹொம்பலே பிலிம்ஸ் பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படத்தை தயாரித்து இருந்தனர். இந்நிலையில் ஹொம்பலே பிலிம்ஸ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் அவர்கள் அடுத்து பிரபாஸ் நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளனர்.

    அதில் ஒன்று 2026 ஆம் ஆண்டு சலார்2 திரைப்படம், 2027 ஆம் ஆண்டு இயக்குனர் பிரஷாந்த் வர்மா இயக்க, கடைசி 3- வது படத்தை தமிழ்நாடு இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் பிரபாஸ் கல்கி 2898 ஏடி திரைப்படத்தை தொடர்ந்து ராஜா சாப், மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஹொம்பலே பிலிம்ஸ் கே.ஜி.எஃப் 3, சலார் பார்ட் 2 மற்றூம் காந்தாரா சாப்டர் 1 ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×