என் மலர்

  நீங்கள் தேடியது "Narasimha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது
  • 28-ந்தேதி தேர் திருவிழாவும், 30-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

  திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது.

  நரசிம்மரின் ஒன்பது வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திருமாலின் வடிவத்தில் இங்கு வீற்றிருக்கிறார்.

  திருமாலின் ஐந்து வகையான பிரதிஷ்டைகளில் ஒன்றான அஸ்தாபன பிரதிஷ்டை அதாவது அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபமாக ஏழரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். அவர் தாயார் லட்சுமி தேவியை தொடை மீது அமர்த்தி ஒருவருக்கொருவர் அணைத்த படி கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிரித்த முகத்துடன் நரசிம்மர் இருக்க தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களை பார்ப்பதாக இருப்பது தனி சிறப்பு. இக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  விழாவையொட்டி இன்று முதல் ஜூலை 1-ந்தேதி வரை தினசரி உற்சவர் காலை, மாலையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 3-ம் நாள் 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது. 28-ந்தேதி தேர் திருவிழாவும், 30-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

  பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீநரசிம்மனை விரதம் இருந்து பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக் கூடிய பேரருளாளன்.
  ஸ்ரீநரசிம்மனுடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணிய கசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான கோபம் கொண்டவனாகவும் சேவை சாதிப்பதால், அவனைப் பூஜிப்பது கடினம் என்று பலர், தவறான கருத்தைக் கொண்டுள்ளனர்.

  தனக்கு அபசாரம் செய்தவர்களை அவன் பொறுத்துக் கொள்வான். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ள அவனால் முடியாது.
  ஏனெனில் தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவனுக்கு. ஆதலால்தான் ‘‘பக்தவத்ஸலன்’’ என்ற திருநாமம் கொண்டவன் அவன், அதாவது, தன் பக்தர்களுக்குக் குழந்தை போன்றவன் என்பது பொருள்.

  நம்மிடம் அளவற்ற கருணை கொண்ட ஸ்ரீ நரசிம்மனிடம் பயம் ஏன்? திருமலையின் எழுந்தருளியுள்ள வேங்கடத்து இன் அமுதனின் ஆராதனை மணியின் அம்சமாக அவதரித்தவரும், மகாபுருஷருமான ஸ்ரீஸ்வாமி வேதாந்த தேசிகரும், ஸ்ரீநரசிம்மன் தனது பக்தர்களிடம் வைத்துள்ள கருணையைப் பற்றி, மனம் உருகிப் போற்றியிருக்கிறார்.

  ஸ்ரீநரசிம்மனை விரதம் இருந்து பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவன் எளிதானவன். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக் கூடிய பேரருளாளன்.

  ஆதலால், ஸ்ரீலட்சுமி நரசிம்மனைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாகப் பலனும் காண முடியும்.

  தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மனின் படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றிக் குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வெல்லத்தினால் செய்த பானகம் அமுது செய்விக்க (நைவேத்தியம்) வேண்டும்.

  48 நாள்களாவது விரதம் இருந்து பூஜித்து வர வேண்டும். மாலை நேரத்தில் செய்வது விசேஷப் பலன் தரும். ஏனெனில் அவன் நரசிங்கமாக அவதரித்து மாலை நேரத்தில்தான்.

  ஆனால் ஒன்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மன் மட்டுமன்றி, தெய்வத்தின் எந்த உருவையும், கிரமதோஷப் பரிகாரமாகப் பூஜித்து வரும் காலத்தில், புலால் உணவைத் தவிர்ப்பதும், நீராடி, நியமத்துடனும், தூய்மையாக உள்ளத்துடனும் நம்பிக்கை, பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இவ்விதம், வழிபட்டு வந்தால், கொடிய, நீண்டகாலத் துன்பமும் நீங்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம். துன்பம் பறந்தோடும்.
  வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
  தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்
  ஓம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி
  தன்ன ஸிம்ஹ ப்ரசோதயாத்

  இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நரசிம்மருக்கு உண்மையான பக்தர்களையே பிடிக்கும். நரசிம்மருக்கு உகந்த சில முக்கியமான தகவல்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  1. நரசிம்மருக்கு உண்மையான பக்தர்களையே பிடிக்கும்.

  2. அசைவம் சாப்பிடுபவர்களை நரசிம்மர் ஏற்பதில்லை.

  3. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளான் என்பதை உணர்த்துகிறது.

  4. நரசிம்மருக்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிக பக்தர்களால் விரும்பப்படுகிறது.

  5. வைணவத்தில் அதிகம் வழிபடக் கூடிய தெய்வம் நரசிம்மர் தான்.

  6. வட இந்தியாவை விட தென் இந்தியாவில் தான் அதிக நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.

  7. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது ஆந்திரா என்றாலும் நரசிம்மர் சாந்தமானது தமிழகத்தில் தான்.

  8. தமிழ்நாட்டில் உக்கிர நரசிம்மரை மூலவராக கொண்ட ஒரே இடம் புதுச்சேரி அருகே உள்ள சிங்கிரி என்ற ஊரில் உள்ள ஆலயமாகும்.

  9. சோளிங்கரில் உள்ள நரசிம்மர் கார்த்திகை மாதம் கண் திறந்து பார்ப்பதாக ஐதீகம்.

  10. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களகிரியில் பானக நரசிம்மர் உள்ளார். இவர் பானகம் அருந்துவதை கண்கூடாக பார்க்கலாம்.

  11. நரசிம்மர் மூர்த்தங்களில் மொத்தம் 32 வகையான அமைப்புகள் உள்ளன.

  12. தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை அருகே கீழபாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்தும் சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
  நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

  நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்“ என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

  நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள்.

  இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், “இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்” என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

  இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.

  சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

  நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974--&ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள். சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

  நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

  “எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்” என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

  இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

  சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.

  அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும். வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

  மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடும் போது “ஸ்ரீநரசிம்ஹாய நம” என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும். “அடித்த கை பிடித்த பெருமாள்” என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள். நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும்.

  அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

  ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

  மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நரசிம்மருக்கு சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருளுக்கு பாத்திரமாகலாம். மேலும் தடைகள், பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
  நரசிம்மரை வழிபட்டால் சிவன் - பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும். ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

  நரசிம்ம மூர்த்தியை தியானிப்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். நரசிம்ம மூர்த்தியை உபாசனா தெய்வமாகக் கொள்பவர் அஷ்டதிக்குகளிலும் புகழ்பெற்று விளங்குவர்.

  ஸ்ரீவைஷ்ணவ ஜோதிட சம்பிரதாயத்தில் ஞானகாரகன் கேதுவுக்கு அதிதேவதையே நரசிம்மர்தான். பில்லி, சூன்யம், ஏவல், ஆபிசாரம் போன்ற மனிதர்களின் மறைமுக எதிரிகளின் தொல்லைகளையும் நேர்முகமான எதிரிகளால் வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் நிவர்த்தி செய்வதும் நரசிம்மர்தான்.

  சுவாதி நட்சத்திர நாளில் விரதம் அனுஷ்டித்ததாலே கயவனாக இருந்த சுவேதன் என்னும் அசுரன் மறுபிறவியில் பிரகலாதன் ஆக பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியுள்ளார்.

  மேலும் துலா ராசியில் சூரியன் சங்காரம் செய்யும் போது சுவாதி நட்சத்திரத்தன்று தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகின்றது. ஆகவே சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருளுக்கு பாத்திரமாகலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் விசேஷமானது, வித்தியாசமானது. அந்த அவதாரம் உருவான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
  மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் விசேஷமானது, வித்தியாசமானது. அந்த அவதாரம் உருவான வரலாறு...

  ஆடியாடி யகம் கரைந்து, இசை
  பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்
  நாடி நாடி நரசிங்கா வென்று,
  வாடி வாடுமிங் வாணுதலே.
  -நம்மாழ்வார் திருமொழி-

  நாராயணர் வராக அவதாரமெடுத்து தன் சகோதரன் இரண்யாட்சனை கொன்ற செய்தியை கேட்டதும் இரண்யகசிபுக்கு அடங்கா கோபம் வந்தது. மந்தார மலையின் குகையன்றினுள் சென்று அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினான். பல ஆண்டுகள் ஆகாரம், தண்ணீர், நித்திரை இல்லாமல் கடுந்தவம் செய்ததால் உடல் மெலிந்து எலும்புகள் மாத்திரமே தெரிந்த அவனை பிரம்மா அழைத்ததும் தவம் கலைந்து கண் விழித்தான்.

  இரண்யகசிபு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றார் முகமலர்ச்சியுடன் பிரம்ம தேவர். இரண்யகசிபு, கரங்களை சிரமேற்குவித்து சொன்னான். இந்த மூவுலகையும் ஆளும் வல்லமை வேண்டும். இரவிலோ, பகலிலோ, தேவனாலோ, மனிதனாலோ, விலங்காலோ, பறவையாலோ, ஆயுதங்களாலோ, நீரிலோ, நிலத்திலோ, ஆகாயத்திலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. என் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் நிலத்தில் சிந்தினாலும் என்னை கொல்ல முயற்சிப்பவன் தலை சுக்கு ஆயிரமாக வெடித்து விட வேண்டும். இந்த வரத்தை கொடுத்தாலே போதும்.

  அவனுடைய தவத்திற்கும் தோத்திரத்திற்கும் மயங்கிய பிரம்ம தேவர், அவன் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு மறைந்தார். இரண்யகசிபு மகிழ்ச்சியுடன் பிரம்மா காட்சியளித்த இடத்தை வணங்கி குகையிலிருந்து தன் ஊருக்கு புறப்பட்டான். இரண்யகசிபு தவம் முடிந்து ஊர் திரும்பும் சமயம் அவன் மனைவி கயாது அழகிய மகனை பெற்றெடுத்திருந்தாள். இரண்யகசிபு நகரம் திரும்பியதை அறிந்த நாரத முனிவர் கயாதுவையும் அவள் குழந்தையையும் அழைத்து வந்து அவனிடம் ஒப்படைத்தார்.

  குழந்தைக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டி சீரும் சிறப்புமாக அவர்கள் வளர்க்க தொடங்கினார்கள். இரண்யகசிபு பிரம்ம தேவர் அளித்த வரத்தின் பலத்தால் மூன்று உலகங்களையும் அவன் விருப்பம் போல ஆட்டிப்படைத்தான். அவன் விரும்பியதை மட்டுமே தேவரோ முனிவரோ செய்ய வேண்டும். மரம் செடி கொடிகள் கூட அவன் விருப்பத்திற்கு மாறாக பூக்கவோ, காய்க்கவோ கூடாது. அவன் சொல்படி தான் சூரியன், சந்திரன், வருணன், வாயு ஆகியோர் செயல்பட வேண்டும். கடைசியாக அவன் சகோதரனை கொன்ற நாராயணன் பெயரை ஒருவரும் சொல்லக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனையே பூஜிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

  தேவர்களும், முனிவர்களும் அல்லல்பட்டனர். மூவுலகமும் இரண்யகசிபுவுக்கு நடுங்கிக் கொண்டிருந்தன. இரண்யகசிபு இரவும் பகலும் அவனுடைய விரோதியான நாராயணனை கொல்லும் எண்ணத்துடனேயே இருந்தான். பிரகலாதனுக்கு தக்க வயது வந்ததும் குலகுரு சுக்கிராச்சாரியாரின் பிள்ளைகள் இருவரிடம் குருகுல வாசத்திற்கு ஒப்படைத்தான் இரண்யகசிபு. மகன் பிரகலாதனுக்கு சகல கல்விகளையும் அரக்கர்களின் நீதிமுறைகளையும் போதிக்கும்படி உரைத்தான்.

  சுக்கிராச்சாரியாரின் புதல்வர்களான சண்டன், அமர்க்கன் இருவரும் பிரகலாதனை அழைத்துகொண்டு சென்றனர். மற்ற அரக்க குழந்தைகளுடன் அவனுக்கும் கல்வி போதிக்க தொடங்கினர். சில மாதங்களுக்கு பிறகு இரண்யகசிபு மகன் பிரகலாதனை அழைத்து வரச்சொன்னான். சுக்கிராச்சாரியாரின் பிள்ளைகள் பிரகலாதனை அழைத்து வந்தார்கள். மகனை கண்டதும் இரண்யகசிபு மகிழ்ச்சியுடன் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான். அவனுக்கு தின்பண்டங்கள் கொடுத்தான். பிறகு அவன் குருவிடம் கற்றவற்றில் சிலவற்றை கூறும்படி கேட்டான்.

  பிரகலாதன் பணிவுடன் சொன்னான். நான் என்ற கர்வம் இருக்கக்கூடாது. என்னுடையது என்று எதையும் உரிமை கொண்டாடுவது கூடாது. உலக வாழ்க்கையே மாயை. பந்தம் பாசம் அனைத்தையும் மனதிலிருந்து அகற்றி ஸ்ரீமந் நாராயணனை இடைவிடாது தியானம் செய்வதே சிறந்ததாகும் என்றான். இரண்யகசிபுவுக்கு கோபம் வந்தது. அவனுடைய கொடிய எதிரியின் பெயரை மகனே புகழ்ந்து பேசியது அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. மகனுடைய மனதை யாரோ கெடுத்திருக்கிறார்கள் என்று எண்ணினான். குருவின் பிள்ளைகளிடம் பிரகலாதனை ஒப்படைத்து அவன் மனதை மாற்றி நல்ல வழிக்கு கொண்டு வரும்படி சொல்லி அனுப்பினான்.

  குடிலுக்கு சென்றதும் அவர்கள் பிரகலாதனிடம் குழந்தாய் நாங்கள் போதித்தவற்றை மறந்து ஏதேதோ உன் தந்தையிடம் சொன்னாயே, அவற்றை யார் உனக்குப் போதித்தது? உண்மையைச் சொல்லு. பிரகலாதன் சிறிதும் தயங்காமல் பதிலுரைத்தான். குருதேவர்களே நான் உண்மையைத்தான் தந்தையிடம் சொன்னேன். அகிலத்தையும் படைத்து காத்து அழிக்கும் பரந்தாமனை துதிப்பவர்களுக்கு பேத உணர்ச்சியே ஏற்படாது, நான் எனது என்ற அகங்காரம் உண்டாகாது. தேவதேவனான நாராயணனை வணங்குபவர்களுக்கு பிறவித்துன்பமே இருக்காது.

  சண்டன் அமர்க்கன் இருவருக்கும் ஆத்திரம் வந்தது. அரசனின் மகன் என்பதையும் மறந்து பிரம்பை எடுத்து நன்றாக அடித்தார்கள். கெட்ட புத்தியுள்ளவனே, நாங்கள் சொல்வது போல் நடக்காவிட்டால் உன்னை சித்ரவதை செய்வோம். உனக்கு உணவும் கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள். பிரம்பால் அடித்தபோதும் பிரகலாதன் பரந்தாமனின் நாமங்ளை உச்சரித்து கொண்டே இருந்தான். அவனுக்கு பிரம்படிகள் தூசு தட்டுவது போல் இருந்தது. நாள்தோறும் ஆச்சாரியர்கள் இருவரும் பிரகலாதனை திருத்தப் பல வழிகளை கையாண்டார்கள். அடித்து துன்புறுத்தினார்கள். உணவு கொடுக்காமல் பட்டினி போட்டார்கள். நயமாகச் சொன்னார்கள். கடைசியாக அவர்கள் சொல்லிக் கொடுப்பதை தந்தையிடம் கூறும்படி வேண்டிக்கொண்டார்கள்.

  பிரகலாதனை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு சென்றனர். மகனை கண்ட இரண்யகசிபு மகிழ்ச்சியுடன் அவனை அருகில் அழைத்து அமரச் சொன்னான். அவன் கற்றதை கூறச் சொன்னான்.தந்தையை வணங்கி சொன்னான் பிரகலாதன். நாராயணனுடைய கலியாண குணங்களை கேட்பதும், சொல்லுவதும் அவரை துதிப்பதும் மனதிற்கு ஆனந்தத்தை கொடுக்கும் என்றான்.

  இரண்யகசிபுவுக்கு வந்த கோபத்தில் மகனை தூக்கிக் கீழே போட்டான். கொலையாளிகளை அழைத்து இவனை மலை உச்சிக்கு எடுத்து சென்று உருட்டி விடுங்கள் என்றான். கொலையாளிகள் பிரகலாதனை உயரமான மலை மீது தூக்கி சென்றார்கள். உச்சியிலிருந்து அவனை உருட்டி விட்டார்கள். பிரகலாதன் சிறிதும் அச்சமின்றி கரங்குவித்து நாராயணனை தியானித்து கொண்டிருந்தான். மலையடிவாரத்தை அவன் ஒரு சிறு காயமுமின்றி வந்தடைந்தான்.

  இதை கண்டு கொலையாளிகள் பயந்து அவனை தூக்கிக்கொண்டு அரண்மனைக்கு சென்றார்கள். நடந்ததை இரண்யகசிபுவிடம் கூறினார்கள். ஆத்திரம் அடங்காத இரண்யகசிபு மகன் என்றும் பாராமல் கொடிய நாகத்தை விட்டு கடிக்க சொன்னான். பாம்பு பிடாரன் கொடிய நாகத்தை எடுத்து வந்து பிரகலாதன் முன் விட்டான். சீறிக்கொண்டு வந்த நாகத்தை பிரகலாதன் அச்சமின்றி கரங்குவித்து வணங்கி ஓம் நமோ நாராயணா என்று சொல்லிக் கொண்டிருந்தான். சீறி வந்த நாகம் அவனை மும்முறை வலம் வந்தது. அவனுடைய பாதத்தில் தலை வைத்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்று மறைந்தது.

  இதை கண்டதும் இரண்யகசிபுவின் கோபம் பன்மடங்காக அதிகரித்தது. முரட்டு யானையை அழைத்து வர கட்டளையிட்டான். அரண்மனையின் முன்னாலேயே பிரகலாதனை நிற்க சொன்னான். யானையை விட்டு காலால் மிதிக்க செய்யும்படி உத்திரவிட்டான். யானைப்பாகன் யானையை தூண்டினான். யானையும் கோபாவேசத்துடன் பிரகலாதனை நோக்கி வந்தது.

  பிரகலாதன் இரு கரங்குவித்து ஓம் நமோ நாராயணா என்று சொன்னான். கோபாவேசத்துடன் வந்த யானை பிரகலாதன் முன் மண்டியிட்டு துதிக்கையால் அவனை வணங்கி எழுந்து அங்கிருந்து சென்றது. இரண்யகசிபுவின் கோபம் அடங்கவில்லை. மனைவியை அழைத்தான். ஒரு கோப்பை நிறைய கொடிய நஞ்சு எடுத்து வரும்படி ஆட்களுக்கு கட்டளையிட்டான். நஞ்சு நிறைந்த கோப்பையை மனைவியிடம் கொடுத்தான். மகனுக்கு பருகத்தரும்படி ஆணையிட்டான்.

  கயாது கண் கலங்கி நஞ்சு நிறைந்த கோப்பையை கையில் வைத்துக்கொண்டு தயங்கி நின்றாள். தாயின் வேதனையை கண்ட பிரகலாதன் அவளிடமிருந்து கோப்பையை பெற்றான். நாராயணன் நாமத்தை உச்சரித்த வண்ணம் பருகினான். கொடிய நஞ்சும் அவனை ஒன்றும் செய்யாதது கண்டும் இரண்யகசிபு மனம் மாறவில்லை. அவன் கோபத்துடன் உரத்த குரலில், ஏ மூடனே, மூவுலகத்திலும் என் பெயரை சொன்னாலே நடுங்குகிறார்கள். நீயோ சிறிதும் அச்சமின்றி ஏதேதோ பேசுகிறாய்? உனக்கு இவ்வளவு துணிவு எப்படி யாரால் ஏற்பட்டது? என்று கேட்டான்.

  பிரகலாதன் தந்தையை வணங்கி கரம் குவித்து நாராயணனை மனதில் நினைத்து தந்தையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் பரந்தாமனின் திருநாமமே காரணமாகும் என்றான். என்னடா பிதற்றுகிறாய்? மூவுலகத்திலும் என்னை காட்டிலும் மேலானவன் இருக்கிறானா? அவன் யார்? எங்கு இருக்கிறான்? என்று ஆத்திரமாக கேட்டான் இரண்யகசிபு.

  தந்தையே அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். ஏன் நாவிலும் இருப்பார். உங்களுடைய சொல்லிலும் இருப்பார் என்று அமைதியாக கூறினான்.

  இரண்யகசிபு மிக்க கோபத்துடன் என்னடா உளறுகிறாய். இந்த தூணிலும் இருப்பாரா? எங்கே காட்டு என்று கையில் வாளுடன் தூணை நோக்கி ஓடினான். தூணை வாளால் வெட்டினான். மறுகணம் தூண் இரண்டாக பிளந்தது. பயங்கர தோற்றத்துடன் நரசிம்மர் தோன்றினார்.

  விலங்காகவும் இல்லை. மனிதனாகவும் இல்லை. தலை சிங்கமாகவும், உடல் மனிதனாகவும் இருந்த உருவத்தை பார்த்ததும் விசித்திரமான உருவமாக இருக்கிறதே என்று இரண்யகசிபு மலைத்து நின்றான். நரசிம்மரின் கண்கள் மின்னின. பிடரிமயிர்கள் குலுங்க அவர் தலையை அசைத்து கர்ஜித்தார். அவருடைய வாயில் கோரைப்பற்கள் கூர்மையாக காணப்பட்டன.

  கைகளில் நீண்ட கூர்மையான நகங்களும், மார்பும் கை கால்களும் பலம் வாய்ந்ததாக இருந்தன. நரசிம்மரை வெட்ட இரண்யகசிபு வாளை ஓங்கி வீசினான். நரசிம்மர் அதைத் தட்டிவிட்டார். அவனுடைய கையை பற்றினார். இருவரும் கட்டிப்பிடித்து மல்யுத்தம் செய்தார்கள். பகவான் விளையாட்டாக அவனுடன் போர் புரிந்தார். மாலை மங்கும் வரை அவர் காலங்கடத்தினார்.

  அந்தி சந்திக்கும் வேளையில் இரண்யகசிபுவை பற்றி இழுத்து தூக்கிக்கொண்டு வாயில் நிலைப்படிக்கு வந்தார். இரண்யகசிபு விடுவித்துக்கொள்ள பெருமுயற்சி செய்தான். நரசிம்மர் பிடியை விடாமல் தமது நகங்களால் அவன் உடலை கிழித்தார். இரண்யகசிபு மடிந்ததை கண்டு தேவர்கள் மலர் மாரிப் பொழிந்தார்கள்.
  பிரகலாதன் கரங்குவித்து நரசிம்மரை துதித்தான். நரசிம்மர் மகிழ்ச்சியடைந்து பிரகலாதனை வாழ்த்தி குழந்தாய் உன் பக்தி என்னை பரவசப்படுத்தியது. உனக்கு என்ன வரம் வேண்டும் சொல் என்று கேட்டார்.

  பிரகலாதன் அவரை வலம் வந்து பாதங்களில் வணங்கி எழுந்து நின்று, பரந்தாமனே பந்த பாசங்கள், ஆசைகள், மோகம் ஆகிய படுகுழிகளில் விழாமல் தங்கள் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் என் விருப்பம் என்றான்.

  பிரகலாதா, என்னிடம் பக்தி பூண்டவர்கள் பற்றற்ற நிலையிலேயே இருப்பார்கள். அவர்களை ஆசாபாசங்கள் எதுவும் பிடிக்காது. நீ இந்த பூலோகத்தை ஆண்டு கடைசியில் என்னை வந்து சேர் என்றார் நரசிம்மர். பிரம்மா முதலிய தேவர்கள் துதிக்க நரசிம்மர் மறைந்தார். பிறகு பிரகலாதன் தந்தையின் ஈமச் சடங்குகளை செய்தான். பெரியோர்கள் பிரகலாதனுக்கு முடி சூட்டினார்கள். அவனும் நீதி தவறாமல் உலகத்தை ஆண்டு வந்தான்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நலங்களை அருளும் நரசிம்மர் பல்வேறு தோற்றங்களில் அருள்பாலிக்கிறார். எந்த கோவிலில் எந்த வடிவில் காட்சியளிக்கிறார் என்பதை பார்க்கலாம்.
  கோவை, அவிநாசியில் உள்ள தாளக்கரையில், நின்ற திருக்கோலத்தில் லட்சுமி நரசிம்மரை தரிசிக்கலாம். திருமகளின் சகோதரனான சந்திரனே இங்கு கருவறை விமானமாக அமைந்திருப்பதாக ஐதீகம். எனவே இது சந்திர விமானம் என வணங்கப்படுகிறது. விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.

  மதுரை, மாட்டுத்தாவணியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒத்தக்கடையின் அருகே யானைமலை அமைந்துள்ளது. இங்கு அருளும் நரசிம்ம மூர்த்திக்கு பிரதோஷ காலத்தில் பானகம் நிவேதித்து வேண்டிட நினைத்த காரியம் நிறைவேறுகிறது.விழுப்புரம், பரிக்கல்லில் அஷ்டகோண விமானத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி அருள்கிறார். பதவி உயர்வு வேண்டுவோரும், இழந்த பதவியைத் திரும்பப் பெற வேண்டுவோரும் இவரை தரிசித்து பலனடைகின்றனர். பில்லி, சூன்ய பாதிப்புகள் இவரை நினைத்த மாத்திரத்திலேயே நீங்கும்.

  காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார். திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார்.

  சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலம், கர்நூலில் உள்ள அகோபிலத்தில் பிரகலாத வரதன் எனும் திருப்பெயரில் பக்தபிரகலாதனுக்கு அருளிய நரசிம்மரையும் அவர் வெளிப்பட்ட உக்ரஸ்தம்பத்தையும் தரிசிக்கலாம். இத்தலம் நவ நரசிம்மத் தலமாக போற்றப்படுகிறது.

  திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ளது, நரசிம்மப் பெருமாள் ஆலயம். இரண்யனை அழித்த கோபத்துடன் இருந்த நரசிம்மரை ஈசன் சரபேஸ்வர வடிவம் கொண்டு தணித்ததால் சிங்க முகம் நீங்கி, இயல்பாக தரிசனம் தருகிறார், பெருமாள். திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டழகிய சிங்கர் 8 அடி உயரத்தில் திருமகளை தன் இடது மடியில் இருத்தி அருட்கோலம் பூண்டிருக்கிறார். ஒவ்வொரு சுவாதி நட்சத்திர தினத்தன்றும் இந்த நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

  பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.தாம்பரம்-செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

  மைசூர் ஜெயலட்சுமிபுரம், காளிதாசர் சாலை, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் பசு நெய் விளக்கேற்றி வழிபட, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதாக நம்பிக்கை.சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோகநரசிம்மருக்கே. அவர் எப்போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக்கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்குகள் இல்லை.

  திண்டிவனத்தில் உள்ள நரசிங்கப்பெருமாளை அவர் கோபம் தீர, வேண்டிக் கொள்ளும் தாயாரை வணங்கிய கோலத்தில் தரிசிக்கலாம். ராகுதசை நடப்பவர்கள் மற்றும் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நரசிம்மருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் 12 பெயர்கள் மிக மிக முக்கியமானவை. இந்த 12 திவ்ய நாமங்களை தீபம் சொல்லி வர கவலைகள் நீங்கும். வாழ்வு வளமாகும்.
  நரசிம்மருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் 12 பெயர்கள் மிக மிக முக்கியமானவை. அந்த 12 பெயர்களையும் தினமும் காலையில் பூஜை அறையில் உச்சரித்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது. நாளடைவில் இந்த பூஜைக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். சிறப்பு வாய்ந்த அந்த 12 பெயர்கள் வருமாறு:-

  1. மகாசுவாலா,
  2. தூம்ர கேசரி,
  3. கிருஷ்ண பிங்காட்சா,
  4. விதாரண,
  5. பஞ்சமஸ் சைவ,
  6. கசிபுமர்த்தன,
  7. சததித்ய கந்தாச,
  8. தீநவல்லப,
  9. பிரகலாதவரதோ,
  10. நந்தகஸ்தகா,
  11. மகாரவுத்ரோ,
  12. கருணாநிதி.

  இந்த 12 திவ்ய நாமங்களை தீபம் சொல்லி வர கவலைகள் நீங்கும். வாழ்வு வளமாகும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நரசிம்மரை வழிபட்டால் சிவன் - பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும். நரசிம்மர் பற்றிய 51 அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
  1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

  2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

  3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

  4. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

  5. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.

  6. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

  7. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.

  8. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ‘‘இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்’’ என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

  9. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

  10. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரி கட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

  11. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

  12. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

  13. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

  14. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

  15. ‘‘எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

  16. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

  17. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

  18. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

  19. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

  20. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

  21. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.
  22. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத் திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

  23. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

  24. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

  25. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

  26. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

  27. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

  28. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

  29. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

  30. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

  31. நரசிம்மரை வழிபடும் போது ‘‘ஸ்ரீநரசிம்ஹாய நம’’ என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட் டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

  32. ‘‘அடித்த கை பிடித்த பெருமாள்’’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர் கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

  33. நரசிம்மரை ம்ருத்யுவேஸ் வாகா என்று கூறி வழி பட்டால் மரண பயம் நீங்கும்.

  34. விழுப்புரம், அந்திலியில், கருடனுக்கு காட்சியளித்த நரசிம்மரை தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் சூரிய ஒளி இந்த நரசிம்மமூர்த்தியின் மீது படர்வது அதிசயமான நிகழ்வாகும்.

  35. காஞ்சிபுரம், அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு எதிரில் வீற்றிருக்கும் கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காது சற்றே தலை சாய்த்த நிலையில் காணப்படுகிறார்.

  36. திருநெல்வேலி, மேலமாடவீதியில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மரின் தோளை அணைத்தபடி மகாலட்சுமி தாயார் வீற்றுள்ளார்.

  37 சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் திருப்பெயருடன் நரசிம்மரை தரிசிக்கலாம். இவருக்கு சிம்மமுகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  38. திண்டுக்கல், வேடசந்தூரில் உள்ளது, நரசிம்மப் பெருமாள் ஆலயம். இரண்யனை அழித்த கோபத்துடன் இருந்த நரசிம்மரை ஈசன் சரபேஸ்வர வடிவம் கொண்டு தணித்ததால் சிங்க முகம் நீங்கி, இயல்பாக தரிசனம் தருகிறார், பெருமாள்.

  39. பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் ஆலயத்தில், திருவக் கரையில் வக்ராசுரனை அழித்த களைப்பு தீர, சயன நிலையில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

  40. தாம்பரம்-செங்கல்பட்டு பாதையில் உள்ள சிங்கப்பெருமாள் ஆலயத்தில் பிரமாண்டமான நரசிம்மமூர்த்தியை தரிசிக்கலாம். கடன்கள் தீர, வழக்குகளில் வெற்றி பெற, இவர் அருள்கிறார். ஆலயத்தில் உள்ள அழிஞ்சில் மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது.

  41. சென்னை, திருவல்லிக் கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் முதல் பூஜை அழகியசிங்கர் என போற்றப்படும் யோக நரசிம்மருக்கே. அவர் எப் போதும் யோகத்திலேயே இருப்பதால் ஓசையால் அவர் யோகம் கலையக் கூடாது என்பதற்காக அவர் கருவறை கதவுகளில் உள்ள மணிகளுக்கு நாக்கு கள் இல்லை.
  42. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளான் என்பதை உணர்த்துகிறது.

  43. நரசிம்மருக்கு எத்த னையோ வடிவங்கள் இருந்தாலும் லட்சுமி நரசிம்மர் வடிவமே அதிக பக்தர்களால் விரும்பப்படுகிறது.

  44. வைணவத்தில் அதிகம் வழிபடக் கூடிய தெய்வம் நரசிம்மர்தான்.

  45. வட இந்தியாவை விட தென் இந்தியாவில்தான் அதிக நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.

  46. நரசிம்ம அவதாரம் நிகழ்ந் தது ஆந்திரா என்றாலும் நரசிம்மர் சாந்தமானது தமிழகத்தில்தான்.

  47. தமிழ்நாட்டில் உக்கிர நரசிம்மரை மூலவராக கொண்ட ஒரே இடம் புதுச்சேரி அருகே உள்ள சிங்கிரி என்ற ஊரில் உள்ள ஆலயமாகும்.

  48. சோளிங்கரில் உள்ள நரசிம்மர் கார்த்திகை மாதம் கண் திறந்து பார்ப்பதாக ஐதீகம்.

  49. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களகிரியில் பானக நரசிம்மர் உள்ளார். இவர் பானகம் அருந்துவதை கண்கூடாக பார்க்கலாம்.

  50. நரசிம்மர் மூர்த்தங்களில் மொத்தம் 32 வகையான அமைப்புகள் உள்ளன.

  51. தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை அருகே கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்மர் தலங்கள் தனித்துவம் கொண்டவை. ஒரு காலத்தில் இந்த இரு ஆலயங்களில் இருந்தும் சிங்கம் கர்ஜிப்பது போல நரசிம்மர் ஆவேசமாக குரல் எழுப்பியதாக புராணங்களில் பதிவுகள் உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தம்மிடம் யார் வந்து எதைக் கேட்டாலும் அதைக் கேட்டபடியே கொடுக்கும் குணம் கொண்டவன் நரசிம்மர். நரசிம்மர் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

  சோகத்தூர் யோக நரசிம்மர்

  வந்தவாசி அருகே சோகத்தூரில் யோக நரசிம்மர் கோவில் உள்ளது. பிரம்மாவுடைய சோகத்தை தீர்த்து வைத்ததால் இந்த ஊர் சோகத்தூர் என்று பெயர் பெற்றது. இங்கு சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. நரசிம்மர் ஜெயந்தியன்று சுவாதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், சாமி வீதி உலா நடக்கிறது. இந்த சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய பலன், நினைத்த காரியம் நடக்கும். புத்திர பேரு கிடைக்கும். சுவாதி ஹோமத்தில் பங்கேற்க முன் அனுமதி பெற வேண்டும்.

  தொடர்புக்கு- நரசிம்ம பட்டாச்சார், 82485 64734.

  அந்திலி: லட்சுமி நரசிம்மர் கோவில்

  விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சி புரம் தாலுகா, அரகண்டநல்லூர் ரெயில் நிலையம் அருகே அந்திலியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 8 நரசிம்மர் கோவில்களில் இது முக்கியமான கோவிலாகும். இங்கு கருடன் வடிவில் உள்ள பாறை மீது பெருமாள் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இது கருடனுக்கு பெருமாள் காட்சி அளித்த தலமாகும்.

  நரசிம்மருக்கு முதல் வணக்கம்

  திருப்பதி வெங்கடாஜலபதி தன் திருமணத்திற்கு முன்பு அகோபிலம் சென்று நரசிம்மரிடம் ஆசிகள் பெற்றார். திருக்கல்யாணம் நடைபெற்றதும் முதலில் நரசிம்மருக்கு நிவேதனம் செய்த பிறகே அனைவரும் உணவருந்தினர். ஆகவே நரசிம்மரையும் வெங்கடாஜலபதியையும் தரிசித்தால் சிறப்பான வாழ்வு அமையும்.  நாளை என்பது நரசிம்மரிடம் இல்லை

  நாளை என்பதில்லை நரசிம்மனிடம் என்பது பழமொழி. வழிபட்ட உடன் பலன் தருவது நரசிம்ம அவதாரத்திற்கே உரிய தனிச் சிறப்பாகும். பிரகலாதனைப் போன்ற ஆழ்ந்த, மெய்யான பக்தியுடனும், மிகுந்த நம்பிக்கையுடனும் வழிபடுவர்களின் கோரிக்கைகளை நரசிம்மர் புறக்கணித்ததோ காலம் தாழ்த்தியதோ இல்லை. தம்மிடம் யார் வந்து எதைக் கேட்டாலும் அதைக் கேட்டபடியே கொடுக்கும் குணம் கொண்டவன் நரசிம்மன். தன் பக்தன் மீது நரசிம்மனுக்கு அவ்வளவு பிரியம்.

  நரசிம்மருக்கு 30 பெயர்கள்

  நரசிம்மருக்கு உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன.

  சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் நல்லது.

  விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன.

  சிங்கதலை, மனித உடல்

  நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.

  ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்

  ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் தாயார் சன்னதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோவில். பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லட்சுமி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோவிலும் கட்டுவித்தான்.

  கருவறையில், மஹாலட்சுமியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லட்சுமி நரசிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கலாம். மிகப் பெரீய்ய உருவம். சுமார் எட்டு அடி உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரசிம்மப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்துகிறது.
  ×