என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Netflix"

    • அதிக சந்தை மதிப்பை கொண்ட தளமாக இந்தியா இருக்கிறது.
    • நெட்பிளிக்ஸ் ஐதராபாத்தில் தனது புது அலுவலகத்தை திறந்துள்ளது.

    தென்னிந்திய திரைப்படங்களை அதிக தொகை கொடுத்து வாங்கும் முடிவை நெட்பிளிக்ஸ் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குபதில் நல்ல கதையம்சம் கொண்ட இணைய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற OTT நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது நெட்பிளிக்ஸ் நல்லவிலை கொடுத்து படத்தை வாங்குவதால் இந்த முடிவு பல தமிழ் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸின் இந்த மாற்றம் தயாரிப்பாளர்கள் அதிக பட்ஜெட் படங்களை தவிர்க்கவும், உச்ச நட்சத்திரங்களின் சம்பளத்தை குறைக்கவும் வழிவகுக்கும்.

    அதிக பார்வையாளர்களை கொண்ட தளமாக இந்தியா இருந்தாலும் சந்தைப்போட்டி, ஒரு பயனருக்கான சராசரி வருவாய் குறைவாக வருவது (ARPU) போன்றவை இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களை இரட்டிப்பு மூதலீட்டை போட்டு வாங்கும் முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக நெட்பிளிக்ஸ் உள்ளது.

    இருப்பினும் படங்களைவிட இணையத்தொடர்கள் நல்ல வரவேற்பை பெறுவதால், செலவை குறைத்து தங்கள் சந்தை மதிப்பை கூட்ட இந்த முடிவை கையில் எடுத்துள்ளது. தற்போது ஐதராபாத்திலும் தனது அலுவலகத்தை விரிவுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    ‘பைசன்’ படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17-ந்தேதி வெளியான 'பைசன்' படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.

    'பைசன்' திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், பைசன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 21ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பைசன் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
    • ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் கடைசி சீசன் தயாராகி வருகிறது.

    2016 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 2,3,4 சீசன்களும் பெரும் ஹிட் அடித்தன.

    தற்போது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் கடைசி சீசன் தயாராகி வருகிறது. இந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் இந்த தொடர் வெளியாகிறது.

    இந்நிலையில், அதே நாளில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் இந்த தொடர் தியேட்டர்களில் வெளியாகிறது. டிசம்பர் 31 மற்றும் அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய 2 தினங்களுக்கு மட்டும் சிறப்பு காட்சியாக இந்த தொடர் வெளியாகிறது. 350 தியேட்டர்களுக்கு மேல் இந்த தொடர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
    • புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது.

    இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    இந்நிலையில் 'பீக்கி பிளைண்டர்ஸ்' மேலும் இரண்டு புதிய சீசன்களுடன் நெட்ஃபிக்ஸ் தளத்தில் மீண்டும் வரவுள்ளது. இந்த அறிவிப்பை அத்தொடரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    வரவிருக்கும் ஒவ்வொரு புதிய சீசனிலும் ஆறு எபிசோடுகள் இடம்பெறும். ஒவ்வொரு எபிசோடும் சுமார் 60 நிமிடங்கள் ஓடும்.

    உலகளவில் நெட்ஃபிக்ஸ் தளத்திலும், இங்கிலாந்தில் மட்டும் பிபிசி தொலைக்காட்சியிலும் இந்தத் தொடர் வெளியாகும்.

    புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    'பீக்கி பிளைண்டர்ஸ்' ஃபிரான்சைஸின் ஒரு பகுதியாக, 'தி இம்மோர்டல் மேன்' (The Immortal Man) என்ற புதிய திரைப்படமும் 2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதிலும் கில்லியன் மர்ஃபி, ரெபேக்கா பெர்குசன், டிம் ரோத், சோஃபி ரண்டில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  

    இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மகாவதார் நரசிம்மா சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    திரைப்படம் இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து படத்தை கொண்டாடினர். இந்தியாவில் தயாரித்த ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூல் பெற்ற படம் இதுவே என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    இந்நிலையில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது.

    • குட் பேட் அக்லி' உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டது.

    அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது.

    இதற்கிடையே இசையமைப்பாளர் இளையராஜா, தமது மூன்று திரைப்படப் பாடல்கள் படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் அதற்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதை ஏற்ற நீதிபதி பாடல்களை அப்படத்தில் இடைக்காலத் தடை விதித்து இருந்தார்.

    இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா குற்றம்சாட்டினார்.

    நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கப்படாமல் இருந்தது.

    எனவே குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா மைத்ரி மூவீ மேக்கர்ஸ்கு அண்மையில் நோடீஸ் அனுப்பினார்.

    இதனையடுத்து, நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டது.

    இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணையில் வாதிட்ட பட தயாரிப்பு நிறுவனம், இசை நிறுவனங்களிடம் இருந்து இந்த பாடல்களின் உரிமை பெறப்பட்டுள்ளது. இடைக்கால தடையால், நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து. படத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. படம் திரையரங்குகள், ஓடிடி தளங்களில் திரையிட்ட பின், எவ்வாறு தடை உத்தரவு பெற முடியும் என வாதம் வைக்கப்பட்டது.

    இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இளையராஜா பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24 ஆம் தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    • ‘குட் பேட் அக்லி’ உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

    ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான படம் அஜித் நாயகனாக நடித்த 'குட் பேட் அக்லி'.

    இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது.

    'குட் பேட் அக்லி' உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே இசையமைப்பாளர் இளையராஜா, தமது மூன்று திரைப்படப் பாடல்கள் படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் அதற்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதை ஏற்ற நீதிபதி பாடல்களை அப்படத்தில் இடைக்காலத் தடை விதித்து இருந்தார்.

    இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா குற்றம்சாட்டினார்.

    நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கப்படாமல் இருந்தது.

    எனவே குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா மைத்ரி மூவீ மேக்கர்ஸ்கு அண்மையில் நோடீஸ் அனுப்பினார்.

    இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு மத்தியில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.  

    சர்வதேச மேடையில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறார் சித்தார்த்.

    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சித்தார்த், இப்போது சர்வதேச மேடையில் புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறார். ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பு அடிப்படையாக உருவாகும் நெட்ஃப்ளிக்ஸ் குளோபல் சீரிஸ் "Unaccustomed Earth"-இல் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த சீரிஸில் சித்தார்த் அமித் முகர்ஜி என்ற கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார்.

    இதனுடன், நடிகை ஃப்ரீடா பின்டோ பாருல் சௌதரி திருமணமான பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார். அவளது முன்னாள் காதல் மீண்டும் வாழ்வில் வரும்போது, அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்கிறது. இவர்களது காதல் இந்திய அமெரிக்க சமூகத்தை அதிரச் செய்கிறது. இத்தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

    தயாரிப்பு & குழு

    எபிசோடுகள்: 8 (டிராமா தொடர்)

    தயாரிப்பு நிறுவனம்: ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ், வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன்

    ஷோ ரன்னர்: மதுரி சேகர்

    இயக்கம்: முதல் இரண்டு எபிசோடுகளை The Lunchbox புகழ் ரிதேஷ் பட்ரா இயக்கியுள்ளார்

    சித்தார்தின் சமீபத்திய "சித்தா" மற்றும் "3BHK" போன்ற படங்கள் உணர்ச்சி வசப்பட்ட கதை சொல்லலுக்காக பாராட்டைப் பெற்றன. தற்போது அவர் உலகளாவிய ரசிகர்களையும் கவரப்போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

    • வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
    • சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

    ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் இணைந்து இயக்கிய 'Adolescence' என்ற நெட்பிலிப்ஸ் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.

    இந்தத் தொடர், வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இதன் ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டது.

    லண்டனில் நடக்கும் 'Adolescence' தொடர் கதைக்களத்தில் சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

     இந்நிலையில் அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் விழாவில் அவர் விருது வென்றுள்ளார். எம்மி விருது வரலாற்றில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற இளைய நடிகர் என்ற சாதனையை ஓவன் கூப்பர் படைத்துள்ளார்.

    திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எம்மி விருதுகள் ஆகும்.

    இந்த வருட எம்மி விழாவில், 'Adolescence' தொடர் பல முக்கிய விருதுகளை வென்றது.

    சிறந்த தொடர், சிறந்த இயக்கம், சிறந்த எழுத்து, சிறந்த நடிகர் (ஸ்டீபன் கிரஹாம்) மற்றும் சிறந்த துணை நடிகை (எரின் டோஹெர்ட்டி) ஆகிய பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது. 

    சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

    கருப்பு படத்தை தொடர்ந்து, சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொள்கிறார்.

    படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 'சூர்யா 46' படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் ரூ.85 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நெட்ஃப்ளிக்ஸ் தனது 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ் தொடர் வெளியீட்டை அறிவித்துள்ளது.

    நெட்ஃப்ளிக்ஸ் தனது 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ் தொடர் வெளியீட்டை அறிவித்துள்ளது. வரவிருக்கும் இந்த மிஸ்ட்ரி த்ரில்லர் தொடரான The Game: You Never Play Alone வில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இத்தொடரை தீப்தி கோவிந்தராஜன் எழுத்தில் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். Applause Entertainment – Netflix India இணந்து இத்தொடரை தயாரித்துள்ளது.

    ஸ்ரத்தா ஸ்ரீநாத் உடன் சாந்தோஷ் பிரதாப், சந்தினி, சயமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சாந்த், தீராஜ் மற்றும் ஹேமா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    நாம் வாழும் டிஜிட்டல் உலகின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கதையாக இது இருக்கும் என தயாரிப்பாளர்கள் விளக்கியுள்ளனர்.

    ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பெண் கேம் டெவலப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் எதிர்கொள்ளும் மர்மமான டிஜிட்டல் தாக்குதலை கண்டறியும் முயற்சி தான் தொடரின் முக்கிய அம்சம். இந்த தொடர் அக்டோபர் 2, 2025 அன்று Netflix-ல் வெளியாகிறது.

    • நெட்ப்ளிக்சில் வெளியான வெனஸ்டே சீசன் 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
    • வெட்னஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார்.

    பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி காமெடி கலந்த திரில்லர் தொடர் வெனஸ்டே. நெட்ப்ளிக்சில் வெளியான வெனஸ்டே சீசன் 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில், வெட்னஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார்.

    தற்போது வெனஸ்டே தொடரின் 2வது சீசன் வெளியாகி உள்ளது. வெட்னஸ்டே சீசனின் முதல் 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது.

    இந்நிலையில், வெட்னஸ்டே சீசனின் கடைசி 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ×