நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் ப்ரியங்கா மோகனின் MADE IN KOREA!

படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. கொரிய நடிகை பார்க் ஹே-ஜின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் ப்ரியங்கா மோகனின் MADE IN KOREA!
Published on

பிரியங்கா மோகன் மற்றும் கொரிய நடிகை பார்க் ஹே-ஜின் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் Made in Korea. இப்படத்தை ஆர்.ஏ. கார்த்திக் இயக்கியுள்ளார்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு பெண் சிறுவயது முதல் கொரிய கலாச்சாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தென்கொரியா செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அங்கு கிடைக்கும் நட்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு ஃபீல்குட் மூவியாக உருவாகி உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இப்படம் நேரடியாக மார்ச் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com