என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடிடி வெளியீடு"

    ‘பைசன்’ படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17-ந்தேதி வெளியான 'பைசன்' படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.

    'பைசன்' திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், பைசன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 21ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பைசன் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், கிஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கிஸ் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி Zee5 தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காந்தாரா சாப்டர் 1 உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.

    இதைதொடர்ந்து,'காந்தாரா சாப்டர்1' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

    கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை 'காந்தாரா சாப்டர்1' பெறுகிறது.

    இந்நிலையில்,'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதி குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.

    அதன்படி, ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த் நடிப்பில் வெளியாகி உலகெங்கும் வசூல் வேட்டை செய்து வரும் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்.31ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

    • ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர்.
    • இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    "ஜின் தி பெட்"

    டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ் நடித்துள்ள படம் 'ஜின் தி பெட்'. இதில் பவ்யா திரிகா, இமான் அண்ணாச்சி, பால சரவணன், வடிவுக்கரிசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில், ஆக்சன், நகைச்சுவை கலந்த இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    "பிரின்ஸ் அண்ட் பேமிலி"

    பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ராணியா ராணா, தியான் ஸ்ரீனிவாசன், சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பிரின்ஸ் அண்ட் பேமிலி'. மலையாள நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த மே 9ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், தமிழ் டப்பிங்குடன் நாளை ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

    "கேரளா கிரைம் பைல்ஸ் சீசன் 2"

    அகமது கபீர் இயக்கியுள்ள மலையாள கிரைம் திரில்லர் வெப் தொடர் 'கேரளா கிரைம் பைல்ஸ்'. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் இந்திரன்ஸ், ஹரிஸ்ரீ அசோகன், நூரின் ஷெரீஃப், சஞ்சு சானிசென் மற்றும் ஜியோ பேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

    "டிடெக்டிவ் ஷெர்டில்"

    பாலிவுட்டில் ரவி சாப்ரியா இயக்கத்தில் தில்ஜித் தோசன்ஜ், சங்கி பாண்டே, டயானா பென்டி ஆகியோர் நடித்துள்ள படம் 'டிடெக்டிவ் ஷெர்டில்'. டிடெக்டிவ் ஷெர்டில் ஒரு மர்மமான கொலை வழக்கை மையமாகக் கொண்டது. இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    "கிரவுண்ட் ஜீரோ"

    கிரவுண்ட் ஜீரோ (Ground Zero) திரைப்படம் கடந்த ஏப்ரலம் மாதம் 25ம் தேதி வெளியான ஒரு இந்தி ஆக்ஷன்-த்ரில்லர் படமாகும். இது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கிய இப்படம், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    "சிஸ்டர் மிட்நைட்"


    இயக்குனர் கரண் கந்தாரி இயக்கத்தில் ராதிகா ஆப்தே, அசோக் பதக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படம் சிஸ்டர் மிட்நைட் (Sister Midnight). சிஸ்டர் மிட்நைட் ஒரு வினோதமான நகைச்சுவையுடன் கூடிய திகில் படமாகும். இப்படம், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    "பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்"


    பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். கடந்த மாதம் வெளியான இப்படம் நல்லவரவேற்பை பெற்றது. இதில் , பிரெக் பாசிங்கர், தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 17-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியானது.

    • அடல்ட் காமெடி படமான பெருசு நல்ல வரவேற்பை பெற்றது.
    • மனித இயல்பின் இருண்ட பக்கம் நவீன வாழ்க்கையின் உச்சநிலைகளுடன் எவ்வாறு குறுக்கிடுகிறது என்பதை ஆராய்கிறது.

    திரையரங்குக்கு நிகராக ஓடிடி ரிலீசுக்காக காத்திருப்போர் பட்டியலும் சமீக காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அவர்களுக்கு தீனி போடும் வகையில் வாரந்தோறும் புதுப்புது படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன.

    சாவா

    இந்த வாரம் இந்தியில் லக்ஷ்மன் உத்தேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஸ்மிகா மந்தனா நடித்த 'சாவா' படம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

    மராத்திய மன்னர் சிவாஜியின் மகன் சாம்பாஜியின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முகலாய மன்னர் அவங்கசீப் ஆக அக்ஷய் கண்ணா நடித்த இந்த படத்தால் கான்பூரில் கலவரமே ஏற்பட்டது தனிக் கதை.

    பெருசு

    தமிழில் வைபவ் நடித்த பெருசு திரைப்படமும் ஏப்ரல் 11ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இளங்கோ ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி ஆகிய பட்டாளங்கள் இணைந்து தரமான பேமிலி அடல்ட் காமெடி படமான பெருசு நல்ல வரவேற்பை பெற்றது.

    வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.

    பிளாக் மிரர் சீசன் 7

    ஆங்கிலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக் மிரர் சீசன் 7 வெப் தொடர் நாளை (ஏப்ரல் 10) தேதியில் இருந்து நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

    Charlie Brooker இயக்கிய இந்த சைன்ஸ் பிக்ஷன் சீரிஸ் எதிர்காலத்தின் dystopian சமூகத்தில் தொழில்நுட்பங்களால் சூழப்பட்ட மனிதர்களை முன்னிறுத்தி அமைந்துள்ளது. மனித இயல்பின் இருண்ட பக்கம் நவீன வாழ்க்கையின் உச்சநிலைகளுடன் எவ்வாறு குறுக்கிடுகிறது என்பதை ஆராய்கிறது.

    சோரி 2

    இந்தியில் சோரி 2 திரைப்படம் அமேசான் பிரைமில் ஏப்ரல் 12ந் தேதி வெளியாகிறது. விஷால் இயக்கத்தில் 2021ல் வெளியான படம் `சோரி'.

    இதில் கர்ப்பிணி பெண், தன்னையும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையையும் காப்பாற்ற போராடுவது கதை. தற்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில் ஏழு வயதான தன் குழந்தையை காக்க அப்பெண் போராடுவதே கதை.

    கிங்ஸ்டன்

    ஜிவி பிரகாஷ் குமார் நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் ஏப்ரல் 13ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். FANTASY ஹாரர் சாகசப் படமாக இப்படம் உருவாகி உள்ளது. 

    இதுதவிர்த்து மலையாளத்தில் ஸ்ரீஜித் பாபு இயக்கத்தில் சஜின், அனஸ்வரா நடித்த படம் `Painkili'. செளபின் சாஹிர், பேசில் ஜோசப் நடித்த படம் ` Pravinkoodu Shappu', கோவிந்த் விஷ்ணு இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்த படம் `Daveed', தெலுங்கில் ராம் ஜெகதீஷ் இயக்கிய படம் `Court State vs A Nobody' ஆகிய படங்களும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

    • இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர்
    • OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது

    ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல்,காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

    தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இன்று வெளியாகியுள்ளது பிரேமலு படம். இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாளத்தில் குறும்படமாக வெளியான 'யூத்புல் லவ் ஸ்டோரி,' தற்போது தெலுங்கிலும் 'டப்' செய்யப்பட்டு மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. 




     

    இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர். இதன் மூலம் பிரேமலு படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது. நாயகி மமிதா பைஜு தற்போது பேசும் பொருளாகி விட்டார். 

    இத்தனை அம்சங்களுடன் 'பிரேமலு' படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. மார்ச் 29-ந் தேதி முதல் OTT-யில்  இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

     

    • ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை காண்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன.
    • எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைப் பார்க்லாம்.

    திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை தாண்டி, ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை காண்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன.

    அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைப் பார்க்கலாம்.

    டெஸ்பிகபிள் மீ 4

    டெஸ்பிகபிள் மீ 4 அமெரிக்க அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். யுனிவர்சல் பிக்சர்ஸ் அண்ட் இலுமினேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தை கிறிஸ் ரெனாட் இயக்கினார். 6 பாகங்களை கொண்ட இந்த படத்தின் 4-வது பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நேற்று (05-11-2024) ஜியோ சினிமா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    கோழிப்பண்ணை செல்லதுரை

    இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (05-11-2024) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    பிரசன்ன வதனம்

    அறிமுக இயக்குனர் அர்ஜுன் ஒய்.கே இயக்கத்தில் நடிகர் சுஹாஸின் நடிப்பில் வெளியான படம் 'பிரசன்ன வதனம்'. இது ஒரு மர்ம திரில்லர் திரைப்படம் ஆகும். திரையரங்குகளில் வெளியான இப்படம் தொடர்ந்து சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் இன்று (06-11-2024) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

    சிட்டாடல் ஹனி பன்னி

    சமந்தா மற்றும் வருண் தவான் நடித்துள்ள வெப் தொடர் 'சிட்டாடல் ஹனி பன்னி'. ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடரை இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளார். இது ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இந்த நிலையில், இந்த வெப் சீரிஸ் நாளை (07-11-2024) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    வேட்டையன்

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    தேவரா

    கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படம் வருகிற 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    ஏ.ஆர்.ஏம்

    அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்துள்ள படம் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' (ஏ.ஆர்.எம்). இந்த படத்தில் டொவினோ தாமஸ் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற 8-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.


    • ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வந்தது.
    • வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக அருண் விஜய் நடித்துள்ளார்.

    பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வந்தது.

    சமீப காலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அருண் விஜய்க்கு இந்த படம் ஒரு மைல்கல். விக்ரம், சூர்யாவை போலவே அருண் விஜய்யிடம் இருந்தும் சிறப்பான ஒரு நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பாலா.

    வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக அபாரமாக நடித்திருக்கும் அருண் விஜய் பல இடங்களில் கலங்க வைத்திருக்கிறார்.


    இவருடைய தங்கையாக நடித்திருக்கும் ரிதாவும், காதலியாக நடித்திருக்கும் நடிகை ரோஷினி பிரகாசும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.

    கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனியும் நேர்மையான நீதிபதியாக மிஷ்கினும் நடித்துள்ளனர்.


    இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் பிப்ரவரி 21 முதல் TENTKOTTA என்ற ஸ்ட்ரீமிங் தளத்தில் திரையிடப்பட உள்ளது. திரையரங்க வெளியீட்டைத் தவறவிட்ட பார்வையாளர்கள் இப்போது தங்கள் வீடுகளில் இருந்தபடியே படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×