என் மலர்
நீங்கள் தேடியது "சீரிஸ்"
- அடல்ட் காமெடி படமான பெருசு நல்ல வரவேற்பை பெற்றது.
- மனித இயல்பின் இருண்ட பக்கம் நவீன வாழ்க்கையின் உச்சநிலைகளுடன் எவ்வாறு குறுக்கிடுகிறது என்பதை ஆராய்கிறது.
திரையரங்குக்கு நிகராக ஓடிடி ரிலீசுக்காக காத்திருப்போர் பட்டியலும் சமீக காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அவர்களுக்கு தீனி போடும் வகையில் வாரந்தோறும் புதுப்புது படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளன.
சாவா
இந்த வாரம் இந்தியில் லக்ஷ்மன் உத்தேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஸ்மிகா மந்தனா நடித்த 'சாவா' படம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
மராத்திய மன்னர் சிவாஜியின் மகன் சாம்பாஜியின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முகலாய மன்னர் அவங்கசீப் ஆக அக்ஷய் கண்ணா நடித்த இந்த படத்தால் கான்பூரில் கலவரமே ஏற்பட்டது தனிக் கதை.
பெருசு
தமிழில் வைபவ் நடித்த பெருசு திரைப்படமும் ஏப்ரல் 11ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இளங்கோ ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி ஆகிய பட்டாளங்கள் இணைந்து தரமான பேமிலி அடல்ட் காமெடி படமான பெருசு நல்ல வரவேற்பை பெற்றது.
வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரை, இறந்த பிறகு அவரால் ஏற்படும் பிரச்சனை மற்றும் அந்த இறுதி சடங்கில் நடக்கும் சிக்கலை சுற்றி கதைக்களம் அமைந்துள்ளது.
பிளாக் மிரர் சீசன் 7
ஆங்கிலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக் மிரர் சீசன் 7 வெப் தொடர் நாளை (ஏப்ரல் 10) தேதியில் இருந்து நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
Charlie Brooker இயக்கிய இந்த சைன்ஸ் பிக்ஷன் சீரிஸ் எதிர்காலத்தின் dystopian சமூகத்தில் தொழில்நுட்பங்களால் சூழப்பட்ட மனிதர்களை முன்னிறுத்தி அமைந்துள்ளது. மனித இயல்பின் இருண்ட பக்கம் நவீன வாழ்க்கையின் உச்சநிலைகளுடன் எவ்வாறு குறுக்கிடுகிறது என்பதை ஆராய்கிறது.
சோரி 2
இந்தியில் சோரி 2 திரைப்படம் அமேசான் பிரைமில் ஏப்ரல் 12ந் தேதி வெளியாகிறது. விஷால் இயக்கத்தில் 2021ல் வெளியான படம் `சோரி'.
இதில் கர்ப்பிணி பெண், தன்னையும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையையும் காப்பாற்ற போராடுவது கதை. தற்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தில் ஏழு வயதான தன் குழந்தையை காக்க அப்பெண் போராடுவதே கதை.
கிங்ஸ்டன்
ஜிவி பிரகாஷ் குமார் நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் ஏப்ரல் 13ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். FANTASY ஹாரர் சாகசப் படமாக இப்படம் உருவாகி உள்ளது.
இதுதவிர்த்து மலையாளத்தில் ஸ்ரீஜித் பாபு இயக்கத்தில் சஜின், அனஸ்வரா நடித்த படம் `Painkili'. செளபின் சாஹிர், பேசில் ஜோசப் நடித்த படம் ` Pravinkoodu Shappu', கோவிந்த் விஷ்ணு இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்த படம் `Daveed', தெலுங்கில் ராம் ஜெகதீஷ் இயக்கிய படம் `Court State vs A Nobody' ஆகிய படங்களும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
- கடந்த 2015-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி.
- இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது
கடந்த 2015-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17-ம் தேதி டிஸ்னி- ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்த சீரிஸின் கதை பாகுபலி படத்தின் முன் நடிந்த கதையைப் பற்றி என தெரிவித்துள்ளனர்.
இந்த வெப் சீரிஸை ராஜ மௌளி மற்றும் ஷரத் தேவராஜன் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஷரத் தேவராஜன் இதற்கு முன் தி லெஜண்ட் ஆஃப் அனுமன் அனிமேடட் சிரீஸை இயக்கியவர். அது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
'பாகுபலி கிரவுன் ஆப் பிளட்' அனிமேடட் சீரிஸில் பாகு மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையின் ரகசியத்தை பிரதிபலிக்கும் வகையில் மற்றும் நீண்ட நாட்களுக்கு முன் மறைக்கப்பட்ட உண்மைகளும் , மகிஷ்மதி சாம்ராஜியத்தின் பற்றிய ரகசியங்களை பல டிவிஸ்டுகளுடன் இந்த சீரிஸ் இருக்கும் என ராஜ மௌளி தெரிவித்துள்ளார். இந்த சீரிஸின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார்.
- இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார்.
பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது. டிரைலர் காட்சிகல் சமூக வலைத்தலங்களில் பரவி வருகிரது. சீரிசின் டிரைலரை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறுவன் உலகை காக்க டிராகன் பால்களை சேகரிக்கும் கதையாக இந்த தொடர் அமைந்தது.
- டிராகன் பால் கதையை உருவாக்கிய அகிரா டோரியாமா கடந்த மார்ச்சில் உயிரிழந்தார்.
நீ போட்டு வச்ச தங்கக் குடம்.. 90ஸ் கிட்ஸ் புகழ் டிராகன் பால் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவுடிராகன் பால் Z என்பது உலகம் முழுவதிலும் உள்ள 90ஸ் கிட்ஸ்களிடையே பிரசித்தி பெற்ற ஜப்பானிய அனிமே தொடர் ஆகும். இந்த தொடர் ஆரம்பித்து இன்றுடன் 40 வருடம் நிறைவடைந்துள்ளது. டோய் அனிமேஷன் நிறுவனத்தால் கடந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி டிராகன் பால் தொடர் முதலில் தொடங்கப்பட்டது.
சன் கோகு [Son Goku] என்ற சிறுவன் உலகை காக்க டிராகன் பால்களை சேகரிக்கும் கதையாக இந்த தொடர் அமைந்தது. இது பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. குழந்தைகளை வெகுவாக கவர்ந்த இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து முந்தைய கதையின் தொடர்ச்சியாக டிராகன் பால் 1986 ஆம் ஆண்டு தொடங்கியது. இது முந்தையதை விட உலகம் முழுவதிலும் பெரு வெற்றி பெற்றது.

இதுவே பின்னாட்களில் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் நிலைத்தது. Shueisha நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சீரிஸ்சின் மங்கா காமிக் புத்தகங்களும் 260 மில்ல்லியன் பதிப்புகளை கடந்து விற்பனையானது. வீடியோ கேம்களும் இதைனை மையமிட்டு உருவாக்கப்பட்டது.
இந்த டிராகன் பால் கதையை உருவாக்கிய அகிரா டோரியாமா [Akira Toriyama] கடந்த மார்ச் 1 ஆம் தேதி தனது 68 ஆம் வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சீரிஸ் தனது 40 வது வயதை எட்டியுள்ள இந்நாளில் ரசிகர்கள் டிராகன் பால் -ஐ நினைவுகூர்ந்து நெகிழ்ந்து வருகின்றனர்.







