search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "May 17"

    சிறையில் உள்ள திருமுருகன் காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. #ThirumuruganGandhi
    ராமநாதபுரம்:

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.

    தனியறையில் அடக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    இது அப்பட்டமான மனித உரிமை மீறிய செயலாகும். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் திருமுருகன் காந்தியை மன ரீதியாக பலவீனமாக்கி விடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய- மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். #ThirumuruganGandhi
    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #ThirumuruganGandhi
    வேலூர்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.

    பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சனை இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று திருமுருகன் காந்தியின் தந்தை, சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தித்து பார்த்தனர். மேலும் தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தொடர்ந்து டாக்டர்கள் திருமுருகன் காந்தி உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். #ThirumuruganGandhi
    மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை (UAPA) ரத்து செய்து சென்னை எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #ThirumuruganGandhi #May17 #UAPA
    சென்னை:

    மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார்.

    நார்வேயிலிருந்து கடந்த 9ந்தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

    சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில், ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார்.

    இதையடுத்து, தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதற்காக, அவர் மீது UAPA (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் திருமுருகன் காந்தியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர்.

    அப்போது, அவர் மீது போடப்பட்ட UAPA வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். 

    ×