இங்க நான் தான் கிங்கு படத்தின் 'மாலு மாலு' பாடல் வெளியீடு

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.இங்க நான் தான் கிங்கு திரைப்படம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இங்க நான் தான் கிங்கு படத்தின் 'மாலு மாலு' பாடல் வெளியீடு
Published on

சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான் தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. படத்தின் அடுத்த பாடலான மாலு மாலு பாடலின் லிரிக் வீடியோவை யூடியூபில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலை ச்வேதா மோகன், நகாஷ் அஸிஸ், அந்தகுடி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். முத்தமிழ் இப்பாடலை எழுதியுள்ளார். இங்க நான் தான் கிங்கு திரைப்படம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com