என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை கீர்த்தி சுரேஷ்"

    'பட்டுமா' பாடல் வரிகளை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

    நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 18-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

    'LIK' படத்தின் 2வது பாடல் 'பட்டுமா' இன்று மாலை வெளியானது. இதுதொடர்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு முன்னதாகவே தெரிவித்து இருந்த நிலையில், ப்ரோமோவை வெளியிட்டனர்.

    இந்த நிலையில், பட்டுமா பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகி உள்ள 'பட்டுமா' பாடல் வரிகளை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
    • அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருந்தது.

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் பெயர் டீசர் வெளியாகி, படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படம் வெளியாகிறது.

    இதைத்தொடர்ந்து அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் 'டேஞ்சர் மாமே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'டேஞ்சர் மாமே' பாடலை ஷான் ரோல்டன் இசையில் டாக்கால்டி எழுதி பாடியுள்ளார்.

    கடைசியாக கதை நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ரகு தாத்தா படம் சரியாக ஓடவில்லை. ஆதலால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காக கீர்த்தி சுரேஷ் காத்திருக்கிறார். 

    • உணவில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
    • எனக்கு பிடித்ததை நான் முழு மனதுடன் சாப்பிடுகிறேன்.

    தமிழ் திரை உலகில் கதாநாயகிகள் பலர் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் தங்களது ஆரோக்கியத்தை பாதுகாத்து வருகின்றனர்.

    சிலர் அளவோடு சாப்பிட்டு கொழுப்பு இல்லாத உணவுகளையும் பெரும்பாலும் ஜூஸ் போன்ற பொருட்களையும் சாப்பிடுகின்றனர்.

    இது மட்டுமின்றி உடற்பயிற்சி மூலமாகவும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பேணி காத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி சுவாரசியமாகி வருகிறது. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் ஒரு நாளைக்கு 10 தோசைகள் மற்றும் 10 இட்லிகள் சாப்பிடுகிறேன். உணவில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடுகிறேன். எனக்கு பிடித்ததை நான் முழு மனதுடன் சாப்பிடுகிறேன். ஆனால் விரும்பும் அளவிற்கு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் குண்டாக மாட்டேன் என்றார்.

    • AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது.
    • AI தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது

    ரிவால்வர் ரீட்டா' பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ், "இப்போ இருக்கின்ற பெரிய பிரச்சனை AI. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று..? அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு..

    சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் டிரஸ்ஸ பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய AI படம் என்று.. AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    கீர்த்தி சுரேஷ் பேசியது தொடர்பாக நடிகர் விஜய் ஆன்டனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற வாய்ப்புள்ளது. மனிதனின் உழைப்பை எளிமைப்படுத்தும் ஒரு தளமாக தான் தற்போதைய AI விளங்கி வருகிறது" என்று தெரிவித்தார்.

    `ரிவால்வர் ரீட்டா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றார்.

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படம் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், `ரிவால்வர் ரீட்டா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "AI" குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

    இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில்," இப்போ இருக்கின்ற பெரிய பிரச்சனை AI. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. அது நம்மையே மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று..? அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு..

    சமீபத்தில் நடந்த படப்பூஜையின் புகைப்படங்களில் என் டிரஸ்ஸ பாத்து நானே ஷாக் ஆயிட்டேன். அவ்வளவு ஆபாசமாக நான் போஸ் கொடுக்கவில்லையே என்று. அப்போது தான் தெரிந்தது நான் இல்லை. என்னை வைத்து உருவாக்கிய AI படம் என்று..

    AI ஒரு எரிச்சலூட்டும் விதமாக தான் இருக்கிறது. இது எங்கு போகுதுன்னு தெரியல. தொழில்நுட்பம் வளர வளர பாதிப்பும் அதிகரித்து வருகிறது" என்றார்.

    • UNICEF அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்
    • உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது.

    தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.

    இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான UNICEF உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ``குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை.

    UNICEF இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது. இதற்கு முன்னரும் UNICEF இந்தியாவின் தூதர்களாக பல திரைப் பிரபலங்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு ரிவால்வர் ரீட்டா படத்தை இயக்கியுள்ளார்.
    • ஷான் ரோல்டன் ரிவால்வர் ரீட்டா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் பெயர் டீசர் வெளியாகி, படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், `ரிவால்வர் ரீட்டா' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. .

    கடைசியாக கதை நாயகியாக  கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ரகு தாத்தா படம் சரியாக ஓடவில்லை. ஆதலால் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காக கீர்த்தி சுரேஷ் காத்திருக்கிறார். 

    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படம் அண்மையில் வெளியானது.
    • கிங்டம் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.

    இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை தற்போது நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

    • நேற்று இயக்குனர் அட்லி பிறந்தநாள் கொண்டாடினார்.
    • அவருக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.

    இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்ததாக பிரமாண்ட பொருட்செலவில் அல்லு அர்ஜூன் - தீபிகா படுகோனே நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

    நேற்று இயக்குனர் அட்லி பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், அட்லி பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

    அதே போல் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் கதிர் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கும் கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்தார். 

    ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்குகின்றன.

    தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் தனித்துவமான இயக்குனரான மிஸ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் பிரவீன் எஸ் விஜய். தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத இந்த படம், Intense Courtroom Drama -ஆக கதைக்களம் இருக்கும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

    படக்குழுவின் விவரங்கள்:

      இசை: சாம் சி.எஸ்

      ஒளிப்பதிவு: அரு வின்சென்ட்

      எடிட்டிங்: பிரசன்னா ஜி.கே

      கலை இயக்கம்: குழித்துறை ரவீஸ்

    இந்த படத்தை வேடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சல் தயாரிக்க, அக்ஷய் கேஜ்ரிவால் மற்றும் விவேக் சந்தர் எம் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். வினோத் சி.ஜே படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்ற, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்குகின்றன.

    கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் *உப்பு கப்புரம்பு*வில் நடித்தார் (Prime Video-வில் நேரடியாக வெளியானது). அடுத்ததாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள *Revolver Rita* வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    **மிஸ்கின்** அண்மையில் பிரதேப் ரங்கநாதன் இயக்கிய *Dragon* படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் *Oho Enthan Baby*யில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமான *I'm Gameல் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள *Pisaasu 2* தாமதமாகி வருகிறது. மேலும், **விஜய் சேதுபதி** நடிக்கும் *Train* படம் தற்போது post-production நிலையிலுள்ளது.

    • தெலுங்கிலும் புதிய படங்கள் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.
    • தனது உடல் எடையை வெகுவாக கட்டுப்படுத்தி இருக்கிறார்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்துக்குப் பிறகும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது தமிழில் 'ரிவால்வர் ரீட்டா', 'கன்னிவெடி' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் புதிய படங்கள் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.

    திருமணத்துக்குப் பிறகு பூசினாற் போல இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் செய்தும், உணவு கட்டுப்பாட்டுகளை (டயட்) கடைபிடித்தும் தனது உடல் எடையை வெகுவாக கட்டுப்படுத்தி இருக்கிறார்.

    இதற்கிடையில் உடல் எடை குறைத்த ரகசியத்தை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    "திருமணத்துக்குப் பிறகு உடல் எடை சற்று கூடிவிட்டேன். இதனால் கார்டியோ உள்ளிட்ட பயிற்சிகளை செய்து உடல் எடையைக் குறைக்க போராடினேன். வாரத்துக்கு 300 நிமிடங்கள் அடிப்படையில் உடற்பயிற்சி செய்து சுமார் 9 கிலோ எடையைக் குறைத்து இருக்கிறேன்.

    சரியான பயிற்சிகளும், திட்டமிட்ட உணவு பழக்கங்களும் ஒன்று சேரும்போது எதிர்பார்த்த தீர்வை பெற முடியும். ஆண்களைப் போல பெண்களும் உடற்பயிற்சியில் அக்கறை காட்டுவது நல்லது" என்று கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டார்.

    • கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் `உப்பு கப்புரம்பு ’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் `உப்பு கப்புரம்பு ' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் அமேசான் பிரைமில் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இத்திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷ் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அந்த கதாப்பாத்திரத்தை கையாண்டுள்ளார். இப்படத்தில் சுகாஸ் கதாநாயகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் அப்செட் அல்லது மனம் சரியில்லை என்றால் என்ன செய்வேன் என கூறியுள்ளார். அதில் "நான் அப்செட் ஆகிவிட்டேன் என்றால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக் கொண்டு தனியாக Drive பண்ணுவேன். அப்போது நல்ல இசையை கேட்பேன். அதுமட்டுமின்றி வீட்டில் நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். எந்த Upset வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் எல்லாம் காணாமல் போய்விடும்" என கூறியுள்ளார்.

    ×