என் மலர்
நீங்கள் தேடியது "Mysskin"
- ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
- விஜய் சேதுபதி நடிப்பில் டிரெயின் படத்தை இயக்கி வருகிறார்.
சித்திரம் பேசுதடி படத்தில் தொடங்கி அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட தனித்துவமான படங்களை இயக்கியவர் மிஷ்கின்.
நந்தலாலா, சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தேர்ந்த நடிகராகவும் திகழ்பவர். கடைசியாக இவர் நீதிபதியாக நடித்த பாலாவின் வணங்கான் படம் வெளியானது. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளார்.

பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், 'பேட் கேர்ள்' பட சர்ச்சை குறித்து பேசினார்.
'பேட் கேர்ள்' படம் எடுத்தது ஒரு பெண். டிரைலரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை. ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் இயக்குநர் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று என்று தெரிவித்தார்.
பின்னர் மேடையில் இருந்த திரையில் படக்குழுவினர் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி இயக்குநர் மிஷ்கினிடம், அவர்கள் குறித்து ஒரு வரியில் தொகுப்பாளர்கள் கருத்து கேட்டனர்.

மிஷ்கினின் புகைப்படம் திரையில் தோன்றிய போது அது குறித்து கருத்து தெரிவித்த அவர், "விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்" என்று ஒருவரியில் பதில் கூறிவிட்டு சென்றார். மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2, விஜய் சேதுபதி நடிப்பில் டிரெயின் ஆகிய படங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகிறது.
- கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.
இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார். இந்தபடத்தின் இசையை இயக்குனர் மிஷ்கின் மேற்கொண்டுள்ளார். படத்தில் ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
Train Team heartfully wishes Princess Shruti Haasan a wonderful birthday.#train #trainmovie #vijaysethupathi #mysskin #shrutihaasanhttps://t.co/gaxvo9woPN@VJSethuOfficial@theVcreations@ira_dayanand@Lv_Sri@Shrutzhaasan@nasser_kameela@itsNarain@preethy_karan… pic.twitter.com/yp3EVcieXB
— Mysskin (@DirectorMysskin) January 27, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா.
- டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய அவதூறு வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளானது.
இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா." பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய அவதூறு வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளானது. இந்த விஷயத்தை குறித்து திரைத்துறையை சேர்ந்த பலரும் மிஷ்கினை கண்டித்து வீடியோவை பதிவிட்டனர். இதற்கெல்லாம் மிஷ்கின் இன்று நடந்த Bad Girl டீசர் வெளியீட்டு விழாவில் பதில் கொடுத்து பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது "பாடலாசிரியர் தாமரை, லெனின் பாரதி, லட்சுமி ராமகிருஷ்ணன், சசிக்குமார், நடிகர் அருள் தாஸ், தயாரிப்பாளர் எஸ்.தானு அவர்களுக்கு என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்."
அதை தொடர்ந்து பேசிய அவர் " ஒரு நகைச்சுவைக்கு மனிதன் பொய்யாக சிரிக்க முடியாது அவனது ஆழ் மனதில் இருந்துதான் சிரிக்கிறார். அன்று நான் பேசியதும் அப்படி தான் நான் செய்த நகைச்சுவையில் பத்திரிக்கையாளர் உள்பட அனைவரும் சிரித்தனர். அப்படி பேசும் போது சில அவதூறு வார்த்தைகள் வந்துவிட்டது அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மேடை நாகரீகம் வேண்டும் என சொல்கிறார்கள், நான் ஒரு கூத்து கலைஞர்கள் இருக்கும் மேடையில் நின்று பேசுகிறேன். சங்ககால நாடகங்களில் வசை வார்த்தை வைத்து பாடுவதில்லையா. திருக்குறளில் காமத்துப் பால் அகராதி இல்லையா?. ஒரு படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஆபாசமான டைட்டில் வைக்கப்படுகிறது அதை யாரும் கேட்பதில்லை. நன் சினிமாவையும் , மனிதர்களையும் நேசித்துக் கொண்டே இருப்பவன் நான்." என மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாட்டல் ராதா சினிமா மேடையில் மிஷ்கின் அநாகரீகமாக காது கூசும் சொற்களை பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார்.
- மிஷ்கின் ஒரு போலி அறிவாளி" என்று அருள்தாஸ் கடுமையாக விமர்சித்து பேசினார்.
இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா." பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் அநாகரீகமாக காது கூசும் அவ சொற்களை பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
ஒரு பெரிய மதிப்புள்ள இயக்குனர் மேடையில் இவ்வாறு பேசுவது தவறானது என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சினிமா மேடையில் அநாகரிகமாக பேசியதாக இயக்குநர் மிஷ்கினுக்கு நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கியுள்ள '2K லவ் ஸ்டோரி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அருள்தாஸ், "பாட்டல் ராதா படத்தின் மேடையில் மிஷ்கின் பேசியது அநியாயமாக இருந்தது. அவ்வளவு மோசமாக பேச வேண்டிய தேவை இல்லை. இயக்குநர் என்றால் என்னவேண்டுமானாலும் பேசலாமா?
மேடை நாகரீகம் மிகவும் முக்கியம். சினிமா மேடைக்கென நாகரிகம் இல்லாமல் இஷ்டத்துக்கு பேசுவதா? இயக்குநர் மிஷ்கின் நாவை அடக்கி பேச வேண்டும்.
எல்லாரையும் அவன், இவன்-னு சொல்லுற.. யாருடா நீ..? பிறரை ஒருமையில் பேசும் அவர் என்ன பெரிய அப்பா டக்கரா? மிஷ்கின் ஒரு போலி அறிவாளி" என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா
- திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா." பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது மிகவும் சர்ச்சையாக தற்பொழுது மாறியுள்ளது.
மிஷ்கின் அதில் " குடி ஒரு மனிதனுக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஒரு விஷயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அவனுக்கு உதவுகிறது. ஒரு நபர் குடிக்கு அடிமையானால் அதில் நம் பங்கும் அடங்கி இருக்கிறது. இந்த சமுதாய பங்கும் அதில் முக்கிய பங்கு வகுக்கிறது. இப்படி நல்ல கருத்துகளை பேசிய மிஷ்கின். அவ்வப்போது மேடையில் அநாகரீகமாக காது கூசும் அவ சொற்களை பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார்.
`இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான் பாரு. இங்க மனிதர்கள அதிகமா குடிகாரனா ஆக்குனது இளையராஜா தான்". என உரிமையாக ஒருமையில் பேசினார். மனிதர்கள் எப்பொழுதும் ஒரு தராசை வைத்து மற்ற மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருக்கோம் என கூறும் போது பல காது கூசும் வார்த்தைகளை பயன்படுத்தினார். இவர் பேசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு பெரிய மதிப்புள்ள இயக்குனர் மேடையில் இவ்வாறு பேசுவது தவறானது என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனை இவர் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தாரா? என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ வெளியிடப்பட்டது.
- விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த வீடியோவில் விஜய் சேதுபதி ரெயில் ஒன்றினுள் நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வீடியோவின் இறுதியில் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார். இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை.
- திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணல் ஒன்றில் நித்யா மேனன் சில சுவாரசிய நிகழ்வுகளை பகிர்ந்துக்கொண்டார். அவர் கூறியதாவது " எனக்கு சினிமாத்துறை அவ்வளவாக பிடிக்காத ஒன்று இன்றும் கூட. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் இந்த துறையை விட்டு சென்றுவிடுவேன். இந்த துறையில் எல்லாமே Anything for granted என எடுத்துக் கொள்கிறார்கள். நடிகையை பார்த்தாலே அவர்களிடம் கை கொடுக்க முயல்கிறார்கள். இதுவே சாதாரண ஒரு பெண்ணிடம் இவர்கள் சென்று கை கொடுப்பார்களா?. இங்கு சுயமாக நம்மால் எந்த முடிவும் எடுக்க முடியாது.
மேலும் இத்துறையில் மனிதாபிமானத் தன்மை சற்று குறைந்தே இருக்கிறது. நமக்கு என்ன உடம்பு முடியாமல் சென்றாலும் நாம் இங்கு வேலை செய்தாகவேண்டும். அப்படி நான் மிஷ்கின் இயக்கும் சைக்கோ திரைப்படத்தில் நடிக்கும் பொழுது முதல் நாள் படப்பிடிப்பு அன்று எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அதை நான் முதன் முதலில் ஒரு ஆண் இயக்குனர் மிஷ்கினிடம் கூறினேன். அதை அவர் புரிந்துக் கொண்டு நீ ஓய்வு எடு நாளை படப்பிடிப்பிற்கும் தாமதமாகவே வா என்று கூறினார். இந்த விஷயத்தை அவர் கூறியவுடன் நம்மை புரிந்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்\
- தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஷ்கின்
- விஜய் சேதுபதி வைத்து ட்ரெயின் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஷ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார்.
அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியான கதாப்பாத்திரத்தில் மிஸ்கின் நடித்தார். 2023 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வைத்து ட்ரெயின் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். முகம் முழுவதும் அடர்த்தியான தாடியுடன் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்திற்கு ஃபௌசியா பாதிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் இதற்கு முன் உயிர், விசில், இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு ஒளிப்பதிவு செய்யும் திரைப்படம் ட்ரெயின் ஆகும்.

ட்ரெயின் படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலிற்கு ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான எஸ். தாணு பங்கேற்ற நேர்காணலில் இப்படத்தின் அப்டேட்டை கூறீயுள்ளார். அதில் அவர் " டிரெயின் திரைப்படம் 90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மிஷ்கின் தமிழ் சினிமாவின் ஆக சிறந்த இயக்குனர். ரொம்ப பிரம்மாதமான படைப்ப உருவாக்கி இருக்கிறார். இப்படமும் மிகவும் சுவாரசியம் மிகுந்த திரில்லராக இருக்கும். ஒஉ 15 வருஷத்துக்கு முன் என்னை அவர் சந்தித்தார். அப்பொழுது நான் அவரை மிஸ் செய்து தவறவிட்டேனா? இல்லை அவர் என்னை தவறவிட்டரா என தெரியவில்லை இனிமேல அது நடக்காது." என கூறியுள்ளார்.
"VijaySethupathi's #Train is nearing the completion stage?⌛. I missed to work with Mysskin all these years?. I'm so happy with the output of movie. You will be all seated at the edge of seat for this movie?"- Producer Thanupic.twitter.com/gVd5XD6hTt
— AmuthaBharathi (@CinemaWithAB) December 27, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம்
- பாலாவின் திரையுலக பயணம் 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடினர்.
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதே விழாவில் இயக்குனர் பாலாவின் திரையுலக பயணம் 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடினர். இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்துக்கொண்டனர்.
விழாவில் பேசியிருக்கும் மிஷ்கின், 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் பார்த்துட்டு பாலா எனக்குக் கூப்பிட்டார். அந்தப் படம் சரியாகப் போகல. பாலா அழுது நான் பார்த்தது இல்ல. ஆனால், அவர் அன்னைக்கு அழுதார். அப்புறம் என்னோட தயாரிப்புல படம் பண்றியான்னு கேட்டார். எனக்கு அந்தத் தருணத்துல வாழ்க்கைக் கொடுத்த நபர்."
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின்.
- இப்படத்தின் சில புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார்.
அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியான கதாப்பாத்திரத்தில் மிஸ்கின் நடித்தார். 2023 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வைத்து டிரெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் சில புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். முகம் முழுவதும் அடர்த்டியான தாடியுடன் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்திற்கு ஃபௌசியா பாதிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் இதற்கு முன் உயிர், விசில், இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு ஒளிப்பதிவு செய்யும் திரைப்படம் ட்ரைன் ஆகும்.
ட்ரைன் படத்திற்கு மிஸ்கின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலிற்கு ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் இயக்குனர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி கலந்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய மிஷ்கின் மிகவும் அழகாக , இலக்கிய நயத்தோடு படத்தையும் , படக்குழுவையும், இயக்குனரையும் பாராட்டி பேசினார். அதில் அவர் சொன்ன முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம். அதில் அவர்
"இப்படத்தை ஓட வைப்பதற்காக நான் இந்த மேடையில் அம்மணமாக கூட ஆட தயார் . இந்த படத்தை எடுத்த இயக்குனர் வினோத் ராஜ் மிகப் பெரிய நன்றி. இந்த படத்தை எடுத்ததற்காக அவனுடைய காலை கூட முத்தம் இடுவேன். நான் இளையராஜாவிற்கு பிறகு ஒருவனின் காலை முத்தமிடுவேன் என்றால் அது வினோத் ராஜின் காலை தான், சூரி அந்த கதாப்பாத்திரமாவே வாழ்ந்து இருக்கிறான். தமிழ் நடிகைகள் இந்த மாதிரி நல்ல படங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள், அன்னா பென்னிற்கு கண்டிப்பாக இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும் என வாழ்த்துகிறேன். படத்திற்கு பின்னணி இசையே இல்லாமல் படத்தை இயக்கி என்னை செருப்பால் அடித்து விட்டான் இயக்குனர் வினோத்ராஜ். இப்படத்தை தயவு செய்து அனைவரும் சென்று பாருங்கள். எதெற்கோ பணம் செலவு செய்கிறோம் இப்படத்தையும் சென்று பார்க்க வேண்டும் என மக்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டார்."
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
- இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.
பிரபல நடிகை சாய் தன்ஷிகா தமிழில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.
இந்நிலையில் கோல்டன் ஸ்டூடியோஸ்- 23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் சாய் தன்ஷிகா தற்போது முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
'ஆக்ஷன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.இந்த படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் வெளியானது. அதைதொடர்ந்து படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தின் பணியாற்றிய அனைவரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். யூகி சேது, இயக்குனர் மிஷ்கின், சினேகன், ரோபோ சங்கர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
அதில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கோயிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு போங்க என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது பேசும் பொருளாகி வருகிறது. கோயிலுக்கு போனாலாவது மன் நிம்மதி கிடைக்கும், சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்தால் பிபி தன் ஏறுகிறது என ட்ரோல் செய்து வருகின்றனர்.
வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும் என மிஷ்கின் சினிமாவை எப்படி பார்க்க வேண்டும் என பேசியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.