இசையமைப்பாளராக மாறிய மிஷ்கின்.. முதல் பாடலே இப்படியா?

ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் 'டெவில்' படத்தில் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் முதல் பாடல் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளராக மாறிய மிஷ்கின்.. முதல் பாடலே இப்படியா?
Published on

'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள "டெவில்" படத்தின் முதல் பாடலான "கலவி" பாடலை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளது. இது தொடர்பான மேக்கிங் புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் முதல் பாடலே இப்படியா? என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com