என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pisasu 2"

    • ‘பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது.
    • படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா, மிஷ்கின் இயக்கத்தில் நடித்து முடித்த 'பிசாசு-2' படம் சில ஆண்டுகளாகவே வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. ஆனாலும், 'பிசாசு-2' படத்தில் 'ஆண்ட்ரியா அப்படி நடித்துள்ளார், இப்படி நடித்துள்ளார்' என மிஷ்கின் தொடர்ந்து பேசி, படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம், 'பிசாசு-2' படம் எப்போது ரிலீசாகும்? என கேட்கப்பட்டது. இதற்கு, ''நடிக்க மட்டும்தான் முடியும். ரிலீசும் நானே செய்ய முடியுமா? நான் மட்டும் தயாரிப்பாளராக இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாக்கி இருப்பேன். என்ன செய்ய...'' என்று வருத்தப்பட்டு கொண்டார்.

    முன்னதாக இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி சிலர் மின்விசிறியைத் திருப்ப, அவரது தலைமுடி காற்றில் பறந்தது. நிகழ்ச்சிக்காக கூந்தலை சீவி, சிங்காரித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இதனால் கடும் 'அப்செட்' ஆகி போனார். 'பேனை ஆப் பண்ணுங்க...' என்று அங்கிருப்பவர்களை கடிந்து கொண்டார். பின்னர் உதவியாளர் கலைந்த அவரது கூந்தலை சரிசெய்த பிறகே ஆசுவாசமானார்.

    • ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு.
    • ஒப்பந்தப்படி 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விநியோக உரிமைக்கான ரூ.1.84 கோடி பாக்கி தொகையை வழங்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு தொடர்ந்திருந்தது.

    இரண்டாம் குத்து படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

    மத்தியஸ்தர் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில், பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், 'பிசாசு.'
    • 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே கூறப்பட்ட வெளியீட்டு தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆண்ட்ரியாவிற்கு வாழ்த்துக் கூறி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.
    • இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

    இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், 'பிசாசு 2' திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .

    இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
    • விஜய் சேதுபதி நடிப்பில் டிரெயின் படத்தை இயக்கி வருகிறார்.

    சித்திரம் பேசுதடி படத்தில் தொடங்கி அஞ்சாதே, முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட தனித்துவமான படங்களை இயக்கியவர் மிஷ்கின்.

    நந்தலாலா, சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தேர்ந்த நடிகராகவும் திகழ்பவர். கடைசியாக இவர் நீதிபதியாக நடித்த பாலாவின் வணங்கான் படம் வெளியானது. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளார்.

    பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி 13) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், 'பேட் கேர்ள்' பட சர்ச்சை குறித்து பேசினார்.

    'பேட் கேர்ள்' படம் எடுத்தது ஒரு பெண். டிரைலரை வைத்து ஒரு படத்தை முடக்குவதில் நியாயமே இல்லை. ஒரு பெண் கலங்குவது என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் இயக்குநர் ஆவது மிகவும் முக்கியமான ஒன்று என்று தெரிவித்தார்.

    பின்னர் மேடையில் இருந்த திரையில் படக்குழுவினர் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி இயக்குநர் மிஷ்கினிடம், அவர்கள் குறித்து ஒரு வரியில் தொகுப்பாளர்கள் கருத்து கேட்டனர்.

    மிஷ்கினின் புகைப்படம் திரையில் தோன்றிய போது அது குறித்து கருத்து தெரிவித்த அவர், "விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்" என்று ஒருவரியில் பதில் கூறிவிட்டு சென்றார். மிஷ்கின் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2, விஜய் சேதுபதி நடிப்பில் டிரெயின் ஆகிய படங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
    • இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

    இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    ஆண்ட்ரியா

    ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் இரண்டாவது பாடல் "நெஞ்சை கேளு" சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 'பிசாசு 2' படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பியதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆண்ட்ரியா

    இதைத்தொடர்ந்து படக்குழு சில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் பெற மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
    • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

    பிசாசு 2

    இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    பிசாசு 2

    ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் பிரியங்கா குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
    • இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    ஆண்ட்ரியா

    ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பிசாசு 2 திரைப்படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் 15 நிமிட நிர்வாணக் காட்சியால் குழந்தைகள் படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இப்படம் ஆகஸ்ட்   31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
    • இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகியுள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்து வைரலானது. பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    பிசாசு 2 - மிஷ்கின்

    பிசாசு 2 - மிஷ்கின்

    இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மனிதர்களை விட மிஸ்கினின் பிசாசு உன்னதமானது. லவ் டூ யூ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகிறது. 

    • இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2.
    • இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்து வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பிசாசு 2 போஸ்டர்

    அதன்படி பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31- ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே நாளில் கார்த்தியின் 'விருமன்' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×