மிஷ்கினின் 'பிசாசு 2' படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மிஷ்கினின் 'பிசாசு 2' படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
Published on

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.

இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், 'பிசாசு 2' திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .

இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com