என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Miskin"
- வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
- ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிபில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.
இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, வணங்கான் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.