என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishal"

    • மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
    • கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

    புதுச்சேரி ஏம்பலம் அருகே தமிழக பகுதியான தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் எனப்படும் அழகு முத்தையனார் கோவில் உள்ளது.

    இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    மேலும் இக்கோவிலில் நேர்த்திக்கடனாக சிலை வைத்து வழிபட்டால் குழந்தைபேறு மற்றும் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

    இந்நிலையில் நடிகர் விஷாலுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நடிகை சாய் தன்ஷிகா தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

    நடிகை சாய் தன்ஷிகாவை கண்ட பக்தர்கள் அவருடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

    • லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை.
    • 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவு.

    லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஶ்ரீராம், "15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம்" எனக்கூறினார். வட்டி தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவதாகவும் குறிப்பிட்டார்.

    மேலும், லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், "அப்படியானால் 'திவாலானவர்' என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா?" எனவும் விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும், 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

    இதனையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். 

    • “கை வட்டக குருதி பூஜை” என்பது கேரள கோவில்களில் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஆகும்.
    • பூஜையை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அனயாரா என்ற இடத்தில் வாராஹி பஞ்சமி தேவி கோவில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள ஒரே வாராஹி பஞ்சமி கோவில் என்று கூறப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்தநிலையில் நடிகர் விஷால் அந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவர் ஒரு சினிமா படப்பிடிப்பிற்காக கேரளா வந்திருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் விஷால், அனயாராவில் உள்ள வாராஹி பஞ்சமி கோவிலை பற்றி அறிந்தார்.

    இதையடுத்து அவர் தனது மேலாளருடன் வாராஹி பஞ்சமி கோவிலுக்கு சென்றார். அவர் சாதாரண உடையிலேயே கோவிலுக்கு சென்றார். பிரபல திரைப்பட நடிகரான விஷால் சாதாரண உடையில் வருவதை பார்த்த பக்தர்கள், அவரை கைதட்டி வரவேற்றனர்.

    இதையடுத்து நடிகர் விஷால் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், "கை வட்டக குருதி பூஜை" என்ற சிறப்பு பூஜை செய்தார். மாவேலிக்கரை பிரசாந்த் நம்பூதிரி தலைமையில் அவருக்கு "கை வட்டக குருதி பூஜை" செய்யப்பட்டது.

    "கை வட்டக குருதி பூஜை" என்பது கேரள கோவில்களில் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஆகும். இது தீய சக்திகளை அகற்றி, தடைகளை நீக்கி வாழ்க்கையில் நன்மைகளை கொண்டுவர உதவும். முக்கியமாக எதிர்மறை சக்திகளையும், தடைகளையும் நீக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இந்த பூஜையை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு நடிகர் விஷால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • விஷாலின் 35-வது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார்.
    • விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.

    விஷாலின் 35-வது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.

    படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆனாலும், நகைச்சுவையால் மதகஜராஜா படம் ஹிட்டானது.

    சுந்தர் சி இயக்கத்தில் மத கஜ ராஜா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நித்தின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்திருந்தனர்.

    படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. திரைப்படம் 55 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

    சுத்தர் சி- விஷால் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆனாலும், நகைச்சுவையால் படம் ஹிட்டானது.

    இந்நிலையில், இந்த வெற்றி கூட்டணி விரைவில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கூடிய விரைவில், சுத்தர் சி- விவால் கூட்டணியில் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ரவி அரசு கதை எழுதி இயக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விஷால் இயக்குகிறார்.

    தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி படக்குழுவினர், நடிகர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வரவிருக்கும் படங்களின் போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் மகுடம் படக்குழு இன்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் இப்படத்தை விஷால் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கும் படத்திற்கு மகுடம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இயக்குனர் விஷால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸின் 99ஆவது படமாகும். ரவி அரசு கதையை விஷால் இயக்குகிறார்.

    • விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.
    • மகுடம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலி நடித்து வருகிறார்.

    விஷாலின் 35ஆவது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். இப்படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.

    விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.

    இந்நிலையில், ரவி அரசு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து ரவி அரசு விலகிய நிலையில், இப்படத்தை நடிகர் விஷால் இயக்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

    • கரூர் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது.
    • உயிரிழந்தவர்களின் குடும்பங்கங்களுக்கு விஜய் தயவுசெய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முழுக்க முழுக்க முட்டாள்தனம். விஜய்யின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேட்டு மனம் வேதனைப்படுத்துகிறது.

    பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி செலுத்துகிறது, மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தமிழக வெற்றிக்கழகம் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுகிறேன். ஏனெனில் அதுதான் குறைந்தபட்சமாக அந்த கட்சியால் செய்யக்கூடிய விஷயமாகும்.

    எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் இப்போதிலிருந்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • என்னோட குடும்பம் 3 வேளை நிம்மதியா சாப்பிட காரணம் ரசிகர்களாகிய நீங்க மட்டும்தான் காரணம்.
    • இப்போது 35 ஆவது படமாக மகுடம் படத்தில் நடித்து வருகிறேன்.

    நடிகர் விஷால் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.இதையொட்டி அவர் பலருக்கும் நன்றி தெரிவிக்கும் விதிமாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "என்னோட குடும்பம் 3 வேளை நிம்மதியா சாப்பிட காரணம் ரசிகர்களாகிய நீங்க மட்டும்தான் காரணம். என்னுடைய முதல் படமான செல்லமே 2004 இல் வெளியானது. இப்போது 35 ஆவது படமாக மகுடம் படத்தில் நடித்து வருகிறேன். 21 ஆண்டுகாலம் என்பது என்னுடைய வெற்றி அல்ல, உங்களின் வெற்றி. நீங்கள் என் படத்தை தியேட்டரில் பார்க்க கொடுக்கும் பணத்தை கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துவேன்.

    • டைட்டில் டீசர் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் 27ஆம் தேதி வெளியானது.

    விஷாலின் 35ஆவது படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளத. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.

    விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

    படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டு, பர்ஸ்ட் லுக் 27ஆம் தேதி வெளியானது. படப்பிடிப்பு விறுவிறுப்பான நடைபெற்ற நிலையில், முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

    இந்த நிலையில் 3ஆம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.

    விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிறந்தநாள் மற்றும் திருமண நிச்சய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.

    இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.

    இவருக்கு பிறந்தநாள் மற்றும் திருமண நிச்சய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில்

    "இதயம் கனிந்த நன்றிகள்

    நேற்று எனது பிறந்த நாளில் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் என் அன்பு தம்பி, தங்கைகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல்வேறு நற்பணி, நல திட்ட உதவிகள் சமூக நலச் சேவைகளில் ஈடுபட்டதற்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய அன்பு சகோதரர் நடிகர் திரு.யோகிபாபு மற்றும் குடுபத்தினர்கள், பட்டினத்தார் கோவிலில் அன்னதானம் வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் திரு.சூப்பர் சுப்புராயன், திரு.திலீப் சுப்புராயன் அவர்களுக்கும், மேலும் தமிழ் நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மும்பை மாநிலங்களில் உள்ள அன்பு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் நற்பணி நலத்திட்ட உதவிகளை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    அதேநேரத்தில், நேற்று நடைபெற்ற எனது திருமண நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு எனக்கும் சாய் தன்ஷிகா - விற்கும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள், தொலைபேசி, நேரடியாக என பல வழிகளில் தெரிவித்த திரையுலக நண்பர்கள், அரசியல் தலைவர்கள், ஊடக, பத்திரிகை நண்பர்கள், அன்பிற்கினிய ரசிகர்கள் மற்றும் அன்பு பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    எனது பிறந்தநாளும், வாழ்வின் புதிய அத்தியாயமும் ஒரே நாளில் இணைந்து மகிழ்ச்சியளித்த இந்நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியமைத்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.?" என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • விஷாலுக்கு இன்று திருமண நிச்சயம் நடந்தது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இதுவரை 500 கோடியை கடந்துள்ளது.

    மேலும் நடிகர் விஷால் அவர் காதலித்து வந்த நடிகை தன்ஷிகா இருவருக்கும் இன்று அவர்களது இல்லத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயம்  நடந்தது.

    சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் " சினிமாவில் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருப்பது உலக சாதனை, ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்" என கூறியுள்ளார்.

    ×