என் மலர்
சினிமா செய்திகள்

'மகுடம்' படத்தின் புது போஸ்டர் வெளியீடு
- படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடித்து உள்ளார்.
- நடிகர் விஷாலே இப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம் 'மகுடம்'. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடித்து உள்ளார். மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார்.
நடிகர் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களம் என கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகர் விஷாலே இப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இந்த நிலையில், 'மகுடம்' படத்தின் புது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் துடிப்பான வாலிபராக நடிகர் விஷால் காணப்படுகிறார். மேலும் இப்படம் கோடைவிடுமுறையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






