என் மலர்
நீங்கள் தேடியது "Sai Dhanshika"
- மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
- கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.
புதுச்சேரி ஏம்பலம் அருகே தமிழக பகுதியான தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் எனப்படும் அழகு முத்தையனார் கோவில் உள்ளது.
இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
மேலும் இக்கோவிலில் நேர்த்திக்கடனாக சிலை வைத்து வழிபட்டால் குழந்தைபேறு மற்றும் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
இந்நிலையில் நடிகர் விஷாலுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நடிகை சாய் தன்ஷிகா தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.
நடிகை சாய் தன்ஷிகாவை கண்ட பக்தர்கள் அவருடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.
இவருக்கு பிறந்தநாள் மற்றும் திருமண நிச்சய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்
"இதயம் கனிந்த நன்றிகள்
நேற்று எனது பிறந்த நாளில் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் என் அன்பு தம்பி, தங்கைகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல்வேறு நற்பணி, நல திட்ட உதவிகள் சமூக நலச் சேவைகளில் ஈடுபட்டதற்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய அன்பு சகோதரர் நடிகர் திரு.யோகிபாபு மற்றும் குடுபத்தினர்கள், பட்டினத்தார் கோவிலில் அன்னதானம் வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் திரு.சூப்பர் சுப்புராயன், திரு.திலீப் சுப்புராயன் அவர்களுக்கும், மேலும் தமிழ் நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மும்பை மாநிலங்களில் உள்ள அன்பு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் நற்பணி நலத்திட்ட உதவிகளை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அதேநேரத்தில், நேற்று நடைபெற்ற எனது திருமண நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு எனக்கும் சாய் தன்ஷிகா - விற்கும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள், தொலைபேசி, நேரடியாக என பல வழிகளில் தெரிவித்த திரையுலக நண்பர்கள், அரசியல் தலைவர்கள், ஊடக, பத்திரிகை நண்பர்கள், அன்பிற்கினிய ரசிகர்கள் மற்றும் அன்பு பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
எனது பிறந்தநாளும், வாழ்வின் புதிய அத்தியாயமும் ஒரே நாளில் இணைந்து மகிழ்ச்சியளித்த இந்நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியமைத்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.?" என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
- விஷாலுக்கு இன்று திருமண நிச்சயம் நடந்தது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இதுவரை 500 கோடியை கடந்துள்ளது.
மேலும் நடிகர் விஷால் அவர் காதலித்து வந்த நடிகை தன்ஷிகா இருவருக்கும் இன்று அவர்களது இல்லத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயம் நடந்தது.
சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் " சினிமாவில் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருப்பது உலக சாதனை, ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்" என கூறியுள்ளார்.
- நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
- தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
இதனிடையே, சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி (இன்று) திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தடபுடல் விருந்தும் அளிக்கப்பட்டது.

48 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்? என்று எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவல் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக அமைந்திருக்கிறது. திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- நடிகர் விஷால் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- விஷாலுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து, இந்த நடிகை, அந்த நடிகை என பல நடிகைகளுடன் விஷால் காதல் என கிசுகிசுக்கள் வந்தன.
இதற்கிடையே, பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் முரட்டு 'சிங்கிளாக' வலம் வந்த விஷால், சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம். ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும் என்று கூறியிருந்தார். விஷாலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, நடிகர் விஷால் இன்று 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, பிறந்த நாள் அன்று திருமணம் என்று விஷால் அறிவித்தது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
வழக்கம்போல் இந்த முறையும் விஷால் ஏமாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறக்கப்படும்.
- ஆகஸ்டு 29-ந்தேதி நல்ல செய்தி சொல்வேன்.
விக்னேஷ் நடிக்கும் 'ரெட் பிளவர்' பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சங்க செயலாளர் விஷால் கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் 'ஆகஸ்டு 29-ந்தேதி நடக்க இருந்த உங்கள் திருமணம் தள்ளிப்போவதாக பேச்சு அடிபடுகிறதே...' என்று கேட்கப்பட்டது. இதற்கு விஷால் பதிலளிக்கும்போது, ''நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறக்கப்படும். எனது திருமணம் அங்குதான் நடக்கும். நிச்சயம் தாமதம் ஆகாது. ஆகஸ்டு 29-ந்தேதி நல்ல செய்தி சொல்வேன்'' என்றார்.
நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்டு 29-ந்தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சாய் தன்ஷிகா ஐந்தாம் வேதம் வெப் தொடரை தொடர்ந்து யோகி டா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- அதிரடி ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது
அண்மையில் நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா அவர்களது காதல் மற்றும் திருமணத்தை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இச்செய்தி மிகவும் வைரலானது. மொரட்டு சிங்கிளாக இருந்த விஷாலுக்கு திருமணம் நடைப்பெறுவதை குறித்து நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
சாய் தன்ஷிகா ஐந்தாம் வேதம் வெப் தொடரை தொடர்ந்து யோகி டா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரை நடிகர் விஷால் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் அதிரடி ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது.
யோகி டா படத்தை கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். படத்தை ஸ்ரீ மோனிகா சினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சாய் தன்ஷிகாவுடன் சயாஜி ஷிண்டே, கபிர் துஹன் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இனியும் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று முடிவு எடுத்து விட்டோம்.
- விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம்.
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளது. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் முரட்டு 'சிங்கிளாக' வலம் வந்த விஷால், சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். 'பெண் பார்த்தாச்சு, பேசி முடிச்சாச்சு...' என்று கூறிய விஷால், தனது காதல் குறித்தும், காதலி குறித்தும் குறிப்பிடாமல் தவிர்த்தார்.
இதனிடையே, முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகா, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகி டா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விஷாலும், சாய் தன்ஷிகாவும் ஜோடியாக விழாவில் பங்கேற்றது, கைகோர்த்து பேசிக்கொண்டிருந்தது இருவரது காதலையும் சொல்லாமல் சொல்லியது.
மேலும் விழாவில் பேசிய இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மித்ரன் ஜவஹர், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் அனைவருமே விஷால்-சாய் தன்ஷிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது இருவருமே வெட்கத்துடன் தலையை ஆட்டி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் சாய் தன்ஷிகா பேசும்போது, '15 வருடங்களாக நானும், விஷாலும் நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டிருந்தோம். இதை அப்படியே தொடரலாமா, வேண்டாமா? இல்லை அடுத்தக்கட்டத்திற்கு செல்லலாமா? என்று கூட யோசித்து இருக்கிறோம். இனியும் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று முடிவு எடுத்து விட்டோம்.
நானும், விஷாலும் காதலிக்கிறோம். வருகிற ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி திருமணம் செய்ய முடிவு எடுத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து விஷால் பேசியதாவது:-
கிசுகிசு இனியும் பரவ வேண்டாம். இருக்கும் கிசுகிசுவே போதும் என்று முடிவெடுத்து விட்டேன். நல்ல வேலையாக இந்த நிகழ்ச்சிக்கு எனது தந்தை வரவில்லை. வந்திருந்தால் ஒரு வழி செய்திருப்பார்.
இப்போது அறிவிக்கிறேன் எனது திருமணம் முடிவாகிவிட்டது. என் காதலி தன்ஷிகா. அவரை திருமணம் செய்து மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழப்போகிறேன். அவர் இப்போது ஆக்சன் கதாநாயகி. ஆனாலும் வடிவேலு-கோவை சரளா போல நாங்கள் இருக்க மாட்டோம். ஆனாலும் தன்ஷிகாவிடம் கொஞ்சம் சூதானமாகத்தான் இருக்க வேண்டும்.
அவரை திருமணம் செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எங்களுக்குள் இருக்கும் புரிதல் எப்போதுமே இருக்கும். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார். அவரது நடிப்புக்கும், திறமைக்கும் நான் தடை சொல்லமாட்டேன். ஒரே வீட்டில் இனி ஆக்சன் ஹீரோ, ஆக்சன் ஹீரோயின் இருக்கப்போகிறார்கள். இனி எங்கள் வீட்டுக்கு பாதுகாவலரே தேவையில்லை.
தன்ஷிகாவை வாழ்நாள் முழுவதும் சிரித்த முகமாகவே வைத்துக்கொள்வேன். இதுதான் எனது இலக்கு. அவர் சிரித்தால் அழகாக இருப்பார். அவரை காதலி, மனைவி, வாழ்க்கை துணை என்று எந்த வார்த்தையை சொல்வது என்று தெரியவில்லை. விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம். ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த விஷால் கடைசியாக நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஷால்- தன்ஷிகாவின் திருமணத்திற்கு பிரபல நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு தன்ஷிகா நடித்த 'விழித்திரு' பட விழாவில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டார். அப்போது அந்த மேடையில் டி. ராஜேந்தர் குறித்து குறிப்பிடாமல் தன்சிகா பேசினார். இதனால் டி.ராஜேந்தர் மேடை நாகரீகம் தெரியாதா? என்னை மதிக்காமல் இருப்பதா என மேடையிலேயே திட்டினார். பின் தன்ஷிகா மன்னிப்பு கேட்டு அவர் ஏற்கவில்லை, இந்த விவகாரம் பெரிதானது.
அப்போது நடிகர் சங்க தலைவராக விஷால் தன்ஷிகாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அன்று முதல் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அது அப்படியே காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
- இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஜவஹர் மித்ரன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் அனைவருமே விஷால்-சாய் தன்ஷிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
- தன்ஷிகாவை வாழ்நாள் முழுவதும் சிரித்த முகமாகவே வைத்துக்கொள்வேன்.
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளது. ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் முரட்டு 'சிங்கிளாக' வலம் வந்த விஷால், சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். 'பெண் பார்த்தாச்சு, பேசி முடிச்சாச்சு...' என்று கூறிய விஷால், தனது காதல் குறித்தும், காதலி குறித்தும் குறிப்பிடாமல் தவிர்த்தார். ஆனால் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவைதான் காதலிக்கிறார் என்று 'தினத்தந்தி' மட்டும்தான் குறிப்பிட்டிருந்தது. அது நேற்று உண்மையானது.
முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகா, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் 'யோகி டா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விஷாலும், சாய் தன்ஷிகாவும் ஜோடியாக விழாவில் பங்கேற்றது, கைகோர்த்து பேசிக்கொண்டிருந்தது இருவரது காதலையும் சொல்லாமல் சொல்லியது.
மேலும் விழாவில் பேசிய இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஜவஹர் மித்ரன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் அனைவருமே விஷால்-சாய் தன்ஷிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது இருவருமே வெட்கத்துடன் தலையை ஆட்டி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் சாய் தன்ஷிகா பேசும்போது, '15 வருடங்களாக நானும், விஷாலும் நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டிருந்தோம். இதை அப்படியே தொடரலாமா, வேண்டாமா? இல்லை அடுத்தக்கட்டத்திற்கு செல்லலாமா? என்று கூட யோசித்து இருக்கிறோம். ஆனால் இன்று (அதாவது நேற்று) காலை தினத்தந்தி பத்திரிகை செய்தியை பார்த்தேன். இனியும் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று முடிவு எடுத்து விட்டோம்.
நானும், விஷாலும் காதலிக்கிறோம். வருகிற ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி திருமணம் செய்ய முடிவு எடுத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து விஷால் பேசியதாவது:-
கிசுகிசு இனியும் பரவ வேண்டாம். இருக்கும் கிசுகிசுவே போதும் என்று முடிவெடுத்து விட்டேன். நல்ல வேலையாக இந்த நிகழ்ச்சிக்கு எனது தந்தை வரவில்லை. வந்திருந்தால் ஒரு வழி செய்திருப்பார்.
இப்போது அறிவிக்கிறேன் எனது திருமணம் முடிவாகிவிட்டது. என் காதலி தன்ஷிகா. அவரை திருமணம் செய்து மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழப்போகிறேன். அவர் இப்போது ஆக்சன் கதாநாயகி. ஆனாலும் வடிவேலு-கோவை சரளா போல நாங்கள் இருக்க மாட்டோம். ஆனாலும் தன்ஷிகாவிடம் கொஞ்சம் சூதானமாகத்தான் இருக்க வேண்டும்.
அவரை திருமணம் செய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எங்களுக்குள் இருக்கும் புரிதல் எப்போதுமே இருக்கும். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார். அவரது நடிப்புக்கும், திறமைக்கும் நான் தடை சொல்லமாட்டேன். ஒரே வீட்டில் இனி ஆக்சன் ஹீரோ, ஆக்சன் ஹீரோயின் இருக்கப்போகிறார்கள். இனி எங்கள் வீட்டுக்கு பாதுகாவலரே தேவையில்லை.
தன்ஷிகாவை வாழ்நாள் முழுவதும் சிரித்த முகமாகவே வைத்துக்கொள்வேன். இதுதான் எனது இலக்கு. அவர் சிரித்தால் அழகாக இருப்பார். அவரை காதலி, மனைவி, வாழ்க்கை துணை என்று எந்த வார்த்தையை சொல்வது என்று தெரியவில்லை. விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம். ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விஷால்- தன்ஷிகாவின் திருமணம் உறுதியானது முதல் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமண அறிவிப்பு குறித்த தகவல்கள் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது இருவரின் வயது வித்தியாசம் குறித்த தகவலும் வைரலாகி வருகிறது.
நடிகர் விஷாலுக்கு தற்போது 47 வயது ஆகிறது. நடிகை சாய் தன்ஷிகாவிற்கு 35 வயது ஆகிறது. இருவருக்கும் இடையே 12 வயது வித்தியாசம் உள்ளது. பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த விஷால் கடைசியாக நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
- தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார்.
- யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.
நடிகை சாய் தன்ஷிகா யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில், நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைப்பெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.
பின்னர் பேசிய நடிகை சாய் தன்ஷிகாவும், நடிகர் விஷாலும் அடுத்தடுத்து தங்களது காதல் குறித்த தகவலை உறுதி செய்தனர்.
அப்போது, நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா ஆகியோர், தங்களுக்கு வரும் ஆகஸ்டு 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
- தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார்.
- யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார்.
மேலும் அவர்"எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.
பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம் தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன்'', என்று விஷால் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்யப்போகிரார் அவரை தான் காதலித்தும் வருகிறார் என்ற தகவல் வெளியானது.
சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக ஐந்தாம் வேதம் என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அடுத்ததாக யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்று வருகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.
- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
- தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், பேசி முடித்துவிட்டதாகவும் விஷால் தெரிவித்தார். "எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும். பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம் தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன். ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன்'', என்று விஷால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்யப்போகிரார் அவரை தான் காதலித்தும் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, அரவான், கபாலி போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக ஐந்தா வேதம் என்ற வெப் தொடர் கடந்த ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் அடுத்ததாக யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற இருக்கிறது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொள்கிறார். அதிகாரப்பூர்வமாக விஷால் அவர்களது திருமணத்தை பற்றி இந்த விழாவில் கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






