என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress"

    • ஐதராபாத்தைச் சேர்ந்த பிரத்யுஷா தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார்.
    • சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரத்யுஷா 22 வயதில் உயிரிழந்தார்.

    1999 ஆம் ஆண்டு வெளியான மனுநீதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை பிரதியுஷா அறிமுகமானார். ஐதராபாத்தைச் சேர்ந்த பிரத்யுஷா தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார்.

    பிரபுவுடன் சூப்பர் குடும்பம், விஜயகாந்த்துடன் தவசி, ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல்பூக்கள் ஆகிய படங்களில் பிரத்யுஷா நடித்துள்ளார்.

    சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சித்தார்த் ரெட்டி என்பவரை பிரத்யுஷா காதலித்து வந்தார். ஆனால் அவர்களின் காதலுக்கு சித்தார்த் ரெட்டி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் 2002 ஆம் ஆண்டு சித்தார்த் ரெயி மற்றும் பிரத்யுஷா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில் சித்தார்த் உயிர் பிழைக்க பிரத்யுஷா உயிரிழந்தார்.

    சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரத்யுஷா 22 வயதில் உயிரிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் சித்தார்த்த ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து, டிசம்பர் 2011-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் சித்தார்த் ரெட்டியின் தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து ரூ.50,000 அபராதமும் விதித்தது.

    இதனால் விரக்தியடைந்த பிரத்யுஷாவின் தாய் 2012 - ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார். 23 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சித்தார்த் ரெட்டி குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    அதன்படி 4 வாரங்களில் சித்தார்த் ரெட்டி சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு குறைப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • கௌரி தொடரில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
    • தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    தமிழில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் 'கௌரி' சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமடைந்த நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடக மாநிலம் கோட்டூரு பகுதியைச் சேர்ந்த நந்தினி, கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார். பல தொடர்களில் துணை நடிகையாக தடம் பதித்த நந்தினி, கௌரி தொடரில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

    'கௌரி' சீரியல் படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பெங்களூருவில் தான் வசித்து வந்த வீட்டில் நந்தினி, இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    அதில், திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் வற்புத்தி வந்ததாகவும், தான் திருமணத்திற்கு தயாரக இல்லை என்றும் இதனால் மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் நந்தினி எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நந்தியின் தற்கொலை சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   

    சென்னையில் பிரபல டி.வி. நடிகை தற்கொலை அதிக மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்தார்.

    சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 39 வயதான இவர் தொலைக்காட்சிகளில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

    பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் தொடர் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். சைதாப்பேட்டையைச் சேர்ந்த இவர் திருமணமாகி முத்தியால் பேட்டையில் வசித்து வந்தார்.

    ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்து உள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோன்று கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    அங்கிருந்தபடியே அவர் டிவி தொடர்களில் நடிப்பதற்கான படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு ராஜேஸ்வரி சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரியின் உயிரை காப்பாற்றுவதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டிவி நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களிடமும், மற்ற தொலைக்காட்சி நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த விசாரணை முடிவில்தான் நடிகை ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய முழு விவரங்களும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர்.

    சர்புதீனின் காரில் இருந்து 27.91 லட்சம் ரூபாயும், சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி. கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சர்புதீன், தொழில்அதிபர் சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    சர்புதீன் நடிகர் சிம்புவிற்கு மேலாளராக பணியாற்றி உள்ளார். பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கமுடையர். இதனால் அதில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார்? என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் எந்தெந்த சினிமா விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது? அதில் கலந்து கொண்ட திரை உலகினர் யார் யார் என்பது தொடர்பாகவும் சர்புதீனிடம் விசாரணை நடத்தி பட்டியலை தயாரித்தனர்.

    இந்த நிலையில் சர்புதீன் கொடுத்த தகவலின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் பிரபல நடிகைகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
    • மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.

    பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்துள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது.

    மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார்.

    தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

    இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார். 

    தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.

    ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார்.

    இந்த நிலையில் மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்துள்ளார்.

    "2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் இருக்கிறேன்" என்று மீரா வாசுதேவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. 

    • வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
    • ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டார்.

    கர்நாடக மாநிலம் வெங்களூருவில் வசிக்கும் 41 வயதான ரஜினி என்ற கன்னட-தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் நடிகை, பேஸ்புக்கில் ஒருவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட நவீன் ஆரம்பத்தில் ஒரு ஐடியிலிருந்து நடிகைக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பிய நிலையில் நடிகை அதை நிராகரித்தார்.

    அந்த நபரை நடிகை ‛பிளாக்' செய்தாலும் வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

    மூன்று மாதங்களாக தொடர்ந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், நடிகை நவம்பர் 1ஆம் தேதி நாகரபாவி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சந்திப்பதாகக் கூறி அவரை வரவழைத்து நேரடியாகக் கண்டித்தார்.

    ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து, நடிகை உடனடியாக போலீஸாரை அழைத்துள்ளார். நடிகையின் புகாரை அடுத்து போலீசார் நவீனை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.  

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இந்த படத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 20 வயது துணை நடிகை ஒருவர் நடித்து உள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இவர் மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்தார்.

    ரெயில் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய துணை நடிகை அங்கிருந்து விழா நடைபெற்ற கல்லூரிக்கு கால் டாக்சி மூலமாக சென்றுள்ளார். அப்போது கால் டாக்ஸி டிரைவர் துணை நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதுபற்றி துணை நடிகை விழா முடிவடைந்ததும், பெரியமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று பரபரப்பு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் விசாரணையில் கார் டிரைவர் பெயர் கணேச பாண்டியன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் கால் டாக்சிகளில் பயணம் செய்பவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை பயணிகள் எழுப்பி உள்ளனர்.

    • 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.
    • மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்.

    அமீர் கான் நடிப்பில் கடந்த 2016 இல் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம் தங்கல். பஞ்சாபில் சமூக கண்ணோட்டங்களை எதிர்த்து தனது 2 மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கிய தந்தையின் உண்மை கதையை தழுவி இப்படம் அமைந்தது.

    இதில் அமீர் கானின் இளைய மகளாக ஜைரா வாசிம் நடித்தார். நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜைரா வாசிம். மல்யுத்த வீராங்கனை கீதா போகத் வேடத்தில் 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.

    இதன் பின் 2017 ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்திலும் ஜைரா நடித்தார்.

    மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். அதன் பிறகு, ஜைரா  தனது மத நம்பிக்கை பற்றிய செய்திகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.

    இந்நிலையில் தற்போது 24 வயதாகும் ஜைரா தனது நிகாஹ் (திருமணம்) பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மற்றும் மணமகனின் முகம் தெரியாத புகைப்படத்தை ஜைரா பகிர்ந்துகொண்டு திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிவித்துள்ளார். 

    • தொழிலதிபரை திருமணம் செய்ததில் இருந்து காம்னா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
    • 2015 இல் சந்திரிகா என்ற படத்திற்கு பிறகு மகள்களை வளர்க்க வேண்டி அவரின் திரை வாழ்க்கை நின்றுபோனது.

    சுமார் 10 வருடங்களை ரீவைட் செய்து பார்த்தால் நடிகை காம்னா ஜேத்மாலினியை தமிழ், கன்னடம், தெலுங்கில் வெளிவந்த படங்களில் காணலாம்.

    குறிப்பாக ஜெயம் ரவியின் இதயத்திருடன் படத்தின் ஹீரோயினாக ஜேத்மாலினியை தமிழ் ரசிகர்கள் அடையாளம் காணக்கூடும்.

    கடந்த 2014 இல் தொழிலதிபரை திருமணம் செய்ததில் இருந்து காம்னா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

    2015 இல் சந்திரிகா என்ற படத்திற்கு பிறகு மகள்களை வளர்க்க வேண்டி அவரின் திரை வாழ்க்கை நின்றுபோனது.

    இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து 2025 இல் தெலுங்கு படம் மூலம் காம்னா மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்

    தெலுங்கில் உருவாகி உள்ள "கேராம்ப்" படத்தில் காம்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற 18-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    • கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
    • மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

    இந்திய சினிமாவின் திரை பிரபலங்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை படங்களின் வசூலை தாண்டி, சமூக வலைதளங்களில் அவர்களை எத்தனை பேர் தேடினார்கள்? என்ற விவரத்தை வைத்தும் மதிப்பிடப்படுகிறார்கள்.

    அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    இதில் ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் என நாட்டின் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

     ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களில் தொடருகிறார்கள்.

    இந்த பட்டியலில் சமந்தா 13-ம் இடத்திலும், தமன்னா 16-ம் இடத்திலும், நயன்தாரா 18-வது இடத்திலும் இருக்கின்றனர். பிரபாஸ் 29-ம் இடமும், தனுஷ் 30-ம் இடமும் பிடித்து இருக்கின்றனர். மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. 

    நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் புது ஆடை, வகையான சாப்பாடு, புது ரிலீஸ் திரைப்படங்களை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில் மலையாள நடிகைகள் அவர்களது ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    நடிகைகளின் ஓணம் க்ளிக்ஸ்-ஐ இப்பதிவில் பார்க்கலாம் வாங்க:

    கேரளா நடிகை பாவனா அழகான அனார்கலி உடையில் ஜொலிக்கிறார்.

    மாளவிகா மோகனன் அழகிய ட்ரான்ஸ்பரண்ட் Saree ஓணம் க்ளிக்

    கௌரி கிஷனின் மகிழ்ச்சியான ஓணம் க்ளிக்

     

    ஓவியாவில் ஓணம் செல்ஃபி

    ரம்யா நம்பீசனின் சிம்பிள் ஓணம் க்ளிக்

     

    நடிகை அனுமோலின் தங்க நிற புடவையில் ஓணம் க்ளிக்,அபர்னா தாஸின் ஓணம் க்ளிக்,சம்யுக்தாவின் கேஷுவல் ஓணம் க்ளிக் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் கோரிக்கை விடுத்திருந்தார்.
    • எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்றார்.

    பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

    நேரில் சந்திக்க வேண்டும் என்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்-ன் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அவரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    இது தொடர்பான புகைப்படத்தை முதலமைச்சர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், "பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்கள் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அடையாறிலுள்ள பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பேசினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×