என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lyca production"

    • லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை.
    • 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவு.

    லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் விஷால், தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஶ்ரீராம், "15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம்" எனக்கூறினார். வட்டி தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவதாகவும் குறிப்பிட்டார்.

    மேலும், லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், "அப்படியானால் 'திவாலானவர்' என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா?" எனவும் விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும், 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

    இதனையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். 

    • நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருந்தார்.
    • நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு இந்த தொகையை வழங்கவில்லை.

    விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருந்தார். இதனை விஷாலுக்கு பதிலாக லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் செலுத்தியது. நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு இந்த தொகையை வழங்கவில்லை.

    தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தமானது.

    இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பி தர உத்தரவிடக்கோரி விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டனர்.

    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் அடுத்த இரண்டு படங்களை தற்போது உறுதி செய்துள்ளார்.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெயிலர்

    இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பாக லைக்கா நிறுவனம் தலைவர் சுபாஷ்கரன், தமிழ் குமரன், பிரேம் சிவசாமி ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர். இப்படங்களின் பூஜை வரும் நவம்பர் 5-ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது.


    லைக்கா நிறுவனர்களுடன் ரஜினி

    இந்த இரண்டு படங்களில் ஒன்றை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் மற்றொன்றை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமியும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
    • இசையை எஸ்.தமன் மேற்கொள்கிறார்.

    நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் நேற்று வெளியிட்டது.

    இப்படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இசையை எஸ்.தமன் மேற்கொள்கிறார். ஒரு பான் இந்தியன் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஆனால் திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து வேற் எந்த ஒரு தக்வலும் வெளிவராததால் லைக்கா நிறுவனம் இப்படத்தை கைவிட்டுவிட்டது என்ற செய்திகள் இணையத்தில் பரவின.

    ஆனால் இதுக்குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி லைக்கா நிறுவனம் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் சில பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும். அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் இலங்கையில்  நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர்களின் ஸ்கெடியுலை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×