என் மலர்

  நீங்கள் தேடியது "Yogi Babu"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்.
  • இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


  வாரிசு

  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், விஜய்யுடன் யோகிபாபு இணையும் 6-வது படமாக 'தளபதி 67' இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ''மாவீரன்''.
  • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  "டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் 'பிரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.


  மாவீரன்

  இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

  "மாவீரன்" திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா மற்றும் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லோக்கல் சரக்கு
  • இப்படத்தில் தினேஷ் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் யோகி பாபு. இவரின் 'மெடிக்கல் மிராக்கல்', 'பூமர் அங்கிள்' போன்ற படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

  இதைத்தொடர்ந்து, யோகிபாபு, இ மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் நடிக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கிறார்.


  லோக்கல் சரக்கு ஃபர்ஸ்ட்லுக்

  இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'லோக்கல் சரக்கு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யோகிபாபு மற்றும் தினேஷ் மாஸ்டர் இடம்பெற்றுள்ள இப்படத்தின் போஸ்டரை நடிகர் சூரி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 68- வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப்போனது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மண்டேலா'. இத்திரைப்படம் முதலில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.


  மண்டேலா

  'மண்டேலா'  திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் மற்றும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது இயக்குனர் மடோன் அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் திரைப்படம் 'பொம்மை நாயகி'.
  • இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

  இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

  பொம்மை நாயகி

  பொம்மை நாயகி

  இந்நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடற்கரையில் குழந்தைக்கு எதையோ யோகிபாபு காட்டுவது போன்று இந்த போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் திரைப்படம் 'பொம்மை நாயகி'.
  • இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

  இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


  பொம்மை நாயகி

  அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. பா.ரஞ்சித் பகிர்ந்துள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சுவதீஸ் இயக்கத்தில் யோகி பாபு-ஓவியா இணைந்து நடித்துள்ளனர்.
  • இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

  நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஓவியா இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு முதலில் 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காண்டிராக்டர் நேசமணி என்பது பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயராகும். சமீபத்தில் சமூக வலைதளத்தில் காண்டிராக்டர் நேசமணிக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.


  இந்த நிலையில் நடிகர் வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதற்கு மதிப்பு அளிக்கும் விதமாக படத்தின் பெயரை காண்டிராக்டர் நேசமணி என்பதற்கு பதிலாக 'பூமர் அங்கிள்' என்று மாற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இதனை நடிகை வாணி போஜன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

  பூமர் அங்கிள்

  பூமர் அங்கிள்

  பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை ஓவியா பிரபல ஹாலிவுட் திரைப்படமான வொண்டர் வுமன் உடையில் இருப்பது போன்றும், யோகி பாபு கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கிறார். சுரேஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த திரைப்படம் வெளியீடு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சுவதீஸ் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் காண்டிராக்டர் நேசமணி.
  • வடிவேலுவுக்கு மதிப்பளித்து யோகி பாபு படக்குழுவினர் படத்தின் பெயரை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

  சுவதீஸ் இயக்கத்தில் யோகி பாபுவும், ஓவியாவும் இணைந்து நடித்துள்ள படம் காண்டிராக்டர் நேசமணி. யோகி பாபுவுக்கு உரிய நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள காண்டிராக்டர் நேசமணி படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.


  யோகிபாபு - ஓவியா

  காண்டிராக்டர் நேசமணி என்பது நடிகர் வடிவேலு ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்த கதாப்பாத்திரம். சமீபத்தில் சமூக வலைதளத்தில் காண்டிராக்டர் நேசமணிக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானது.


  காண்டிராக்டர் நேசமணி பட போஸ்டர்

  மேலும், பலரும் யார் அந்த நேசமணி? அவருக்கு என்ன ஆனது ? என கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் வடிவேலுக்கு மதிப்பளிக்கும் விதமாக யோகி பாபு படக்குழுவினர் தங்கள் படத்தின் பெயரை காண்டிராக்டர் நேசமணி என்பதற்கு பதிலாக பூமர் அங்கிள் என மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களில் யோகிபாபு நடித்துள்ளார்.
  • தற்போது கிருமி படத்தை இயக்கிய அனுசரண் இயக்கத்தில் பன்னி குட்டி படத்தில் நடித்துள்ளார்.

  2009-ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகிபாபு. தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஏராளமான படங்கள் இவரின் கைவசம் உள்ளது.

  பன்னி குட்டி

  பன்னி குட்டி

  கிருமி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த அனுசரண் அடுத்ததாக இயக்கியுள்ள பன்னி குட்டி படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இதில் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முகமூடி, யுத்தம் செய், கிருமி, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  இந்நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. யோகிபாபுக்கே உரித்தான காமேடி பாணியில் உருவாகி இருக்கும் இந்த டிரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகி இருக்கும் `தர்மபிரபு' படத்தின் தொலைக்காட்சி உரிமை மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
  `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `தர்மபிரபு' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும், ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர்.

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, படம் வருகிற ஜூன் 28-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் `வத்திக்குச்சி' திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோரும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர்.

  மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பையும், பாலசந்தர் கலை பணியையும் கவனிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் தாத்தா, இயக்குநர் டான் சாண்டி, சாதாரண டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் கூறினார்.
  ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

  விழாவில் ராகுல் தாத்தா பேசியதாவது,

  "இந்த படத்தில் நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். இந்த காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி. எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ஓகோன்னு ஓடணும். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள்.  இந்த இயக்குநர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான். சாம்.சி.எஸ் பிரமாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்" என்றார்.

  ராகுல் தாத்தா பேசிய வீடியோ:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print