சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவாகும் 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

இப்படத்தின் டீசரை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது.கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவாகும் 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Published on

காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் தேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் துடிப்பான இசையில் விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'ஆம்பள'. சந்தானம் காமெடி இப்படத்தின் ஹைலைட்.

இதே பாணியில் சுந்தர் சி- விஷால் கூட்டணியில் எடுக்கப்பட்ட 'மதகஜராஜா' படமும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு 'புருஷன்' என பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகும் இப்படத்தின் டீசரை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது.

டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும், மேலும் இப்படத்தில் யோகி பாபுவும் நடித்து இருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com